
வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வில்லியனூர் கொம்யூன் தலைவர் சிவசங்கரி தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் கண்டன உரையாற்றினார். பிரதேச தலைவர் இளவரசி, செயலாளர் சத்திய நிர்வாகிகள் புவனேஸ்வரி, பூமாதேவி, அமிர்தவல்லி, உமா உள்ளிட்ட திரளான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.