மின்துறையை தனியார் மயமாக்கும் புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

imgமின்துறை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி விவ சாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைகூடம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி பிரதேச கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வி.வடிவேல் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன், அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் வே.சங்கர், சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர்   இரகு. அன்புமணி, மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பாலசந்திரன், விநாயகம், சிவஞானம், பெரியசாமி, முத்து, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மத்திய பிஜேபி புரோக்கர் அரசு புதுச்சேரி அரசு மின்துறையை தனியார்மயமாக்க துடித்துக்கொண்டு உள்ளது. அதற்கு ஏற்றார் போல புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி ஆட்சியும் இந்த புதுச்சேரி மக்கள் விரோத நடவடிக்கைகு ஆதரவான நிலையை எடுத்து இருப்பது கண்டிக்கதக்கது.  ஒருவேலை புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கப்பட்டால்  விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
மேலும்

  • லிங்காரெட்டியார்பாளைய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.
  • உரம் உள்ளிட்ட இடு பொருட்களை அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.
  • ஒழுங்கு முறை விற்பனைகூடத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தற்போது இலவச மின்சாரம் பெறும் நிலையிலேயே விவசாயப் பயிர்கள் பெருமளவு பாதித்து, நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து விவசாயத்தில்  ஈடுபட முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. எதிர்காலங்களில் விவசாயம் தழைக்குமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. வங்கிகளில் பெற்ற கடன் தொகை கட்ட முடியாமல் போகும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மத்திய மாநில அரசுகள் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்.

Leave a Reply