புதுச்சேரி அரசே ! விவசாய சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுக

அகில இந்திய விவசாய சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் 29.08.2022  இன்று மதகடிப்பட்டில் பிரதேச பொருளாளர் தோழர்.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் பிரதேச செயலாளர் சங்கர், நிர்வாகிகள் அன்புமணி, நாகராஜ், முத்து, சரவணன்,  தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1). புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் கிராமப்புற விவசாயத்தை பாதிக்கும் வகையில் 84 ஆழ்துளை போர் வெல் அமைத்து நிலத்தடி நீரை நகருக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். 
புதுச்சேரி நெற்களஞ்சியம் என பாகூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது புதுச்சேரி விவசாயிகளுக்கு இந்த திட்டம் மிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கும், ஏற்கனவே நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்தும் வரும் இந்த சூழ்நிலையில், புதுச்சேரி அரசு நகரத்தை ஸ்மார்ட் சிட்டி என மாற்றி இதற்கு 24 மணி நேர குடிநீர் ஆதாரத்திற்காக பாகூர் சோரியங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, கரையாமுத்தூர், பனையடிகுப்பம், நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் மற்றும் அதன் சுற்றியுள்ள நீர் பிடிப்பு ஏரிகளில் இருந்து சுமார் 84 ஆழ்துளை போர் வெல்கள் அமைத்து. நீரை  நகரத்திற்கு எடுத்து செல்லும் திட்டத்தை உருவாக்கி அமல்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் புதுவை அரசு வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை அமல்படுத்த நினைப்பதை அகில இந்திய விவசாய சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதற்கு பதிலாக நகரப் பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும், மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும், அதேபோன்று நகரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்த வேண்டும் இப்படியான மாற்று வழிகளை அமுல்படுத்துவதற்கு மாறாக புதுச்சேரி கிராமப்புறங்களில் உள்ள விவசாயத்தை பாழ்படுத்தும் கிராமப்புறங்களில் இருந்து நீர் நகரத்திற்கு எடுத்து செல்லும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாழ்படுத்தும் நோக்கில் பாகூர் நெட்டப்பாக்கம் பகுதிகளில் இருந்து போர்வெல்கள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது அப்பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் வளர்ச்சியை பாதிக்கும் வேலை வாய்ப்பை பறிக்கும் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை உருவாக்கும் எனவே இந்த திட்டத்தை கைவிடுமாறு மாற்று திட்டத்தை அமல்படுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
2). புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் மற்றும் வும் 75% மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி பாண்லே நிர்வாகம் நிர்வாக சீர்கேடுகளாலும், அளவுக்கு அதிகமான ஊழியர்களை கொள்ளை புறமாக நியமித்ததாலும் பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது. மாநில மக்களுக்கு தேவையான பாலை புதுச்சேரியிலேயே உற்பத்தி செய்வதற்கு மாறாக அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கரவை மாடுகளை மானிய விலையில் வாங்கி கொடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் அரசு முன்வரவில்லை. அரசு அறிவித்த 75 சதமான மானிய விலையில் கறவை மாடுகளுக்கான தீவனம் வழங்க இதனால் வரை முயற்சிக்கவில்லை. கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை பலப்படுத்த தேர்தல் நடத்த வேண்டும். ஊழல் முறைகேடு அதிகம் நடக்க வாய்ப்புள்ளதால் தனியார் வசம் பால் கொள்முதலை அடியோடு நிறுத்த வேண்டும். அதே போன்று வானிலை நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் பாண்லே நிர்வாகத்திற்கு உடனடியாக ஜனநாயக பூர்வமாக தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வெண்மை புரட்சியின் தந்தை பால் மனிதர் என்று அன்போடு அழைக்கப்படும் குரியன் அவர்களின் நினைவு நாள் வரும் செப்டம்பர் 9 அன்று புதுவை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3). புதுச்சேரியில் வழியாக அமைய உள்ள விழுப்புரம்-நாகப்பட்டினம் வரைவிலான புதிய தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தின் வழியாக செல்லும் புதிதாக அமைய உள்ள விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை இடத்திற்காக 2012 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியாகி, அதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்து தற்போது வேலை நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக நிலம் வழங்கிய புதுச்சேரி விவசாயிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை வழங்கிய இழப்பீடு தொகை மிகக் குறைவு, இந்த தொகையை வைத்து அருகிலோ அல்லது தொலைவிலோ விவசாய இடத்தை வாங்கி விவசாயம் செய்யக்கூட முடியாத அளவிற்கு மிக சொற்ப அளவே இழப்பீடு வழங்கப்பட்டது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு குறைந்தது 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அதே அளவிற்கான நிலத்தை வாங்கி தரவேண்டும் அல்லது நிலத்திற்கான 10 மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தோழர்.வே.சங்கர் AIKS
மாநில செயலாளர்
அகில இந்திய விவசாயிகள் சங்கம்
புதுச்சேரி மாநிலம்

Leave a Reply