இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் )
புதுச்சேரி பிரதேச குழு
பிரச்சாரம் இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு . ஆகஸ்ட் 22 காலை 10 மணி
ராஜா தியேட்டர் அருகில் துவக்கம்.
அனைவருக்கும் வணக்கம்!
நமது கட்சி ரேஷன் கடைகளை திறக்க கோரி ஆகஸ்ட் 2ல் நடத்திய போராட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு, இதர அரசியல் கட்சியில் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மோடி அரசின் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை உறுதியாக தொடர்ந்து அமல்படுத்தும் முயற்சி புதுச்சேரி அரசும் குறிப்பாக பாஜக அமைச்சர்களும் ஆளுநரும் தீவிரம் காட்டி வருகிறார்கள் .
இன்று (ஆகஸ்ட் 21) பொருளுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் நல்ல திட்டம் என்று பொதுமக்கள் வாயால் சொல்ல வைப்பதற்கு பொது மக்களிடம் கருத்து கேட்கும் கலந்துரையாடல் கூட்டம் நடத்தவும், இதற்கு டெல்லியில் இருந்து உயர் அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக அமைச்சரின் தொகுதியில் இருந்து ஏழைப் பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி அரசு செலவில் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரகசியமாக நடைபெற இருந்த இக்கூட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களுக்கு கூட தகவல் சொல்லவில்லை.
நமது கட்சி தலையெட்டின் பேரில் மேற்படி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் யாருக்கும் தெரியாமல்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டத்தை நடத்திட ஏற்பாடு செய்துள்ளனர். மீண்டும் நமது தலையீடு காரணமாக மீண்டும் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாஜகவின் கீழ்த்தரமான இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடு மற்றும் பாஜக அமைச்சரின் கபட நாடகத்தை, புதுவை மக்களுக்கு செய்யும் துரோகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ரேஷன் கடை செயல்பாடு பற்றி விவாதிக்க வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள பிரச்சார இயக்கத்தில் புதுச்சேரி மக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை உள்ள
ஆர். இராஜாங்கம்
