என்றென்றும் நினைவில் தோழர் புத்ததேவ்

Buddhadev

கொல்கத்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80), வியாழனன்று 06.08.2024 காலமானார்.

கடந்து வந்த பாதை

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா 1966இல் மாணவராக இருந்தபோது கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்கள் பலவற்றில் அவர் பங்கெடுத்தார். 1968இல் மேற்கு வங்க ஜனநாயக இளைஞர் சம்மேளனத்தின் மாநில செயலாளராக மாறினார். 1971இல் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982இல் மாநில செயற்குழு உறுப்பினராக மாறினார். இந்தக் கால கட்டத்தில் புத்ததேவ் கட்சியின் அர்ப்பணிப்புமிக்க முன்னணி ஊழியராக மாறி கட்சி அளித்த பல்வேறு பொறுப்புகளையும் மேற்கொண்டு கட்சியின் முக்கிய தலைவராக உயர்ந்தார்.

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 1985இல் நடைபெற்ற கட்சியின் 12ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். 2000இல் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 வரையிலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்து, கட்சிக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திட்டார்.

தோழர் புத்ததேவின் தனித்துவமிக்க பங்களிப்பு என்னவெனில், அவர் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்ததாகும். 2000 நவம்பரில் அவர் தோழர் ஜோதி பாசுவுக்குப்பின் முதலமைச்சரானார். அதன்பின்னர் இரண்டு தடவைகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். இவ்வாறு அவர் இடது முன்னணி அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் கொள்கைகளை வடிவமைப்பதில் கேந்திரமான பங்கினை ஆற்றினார்.

சிறந்த எழுத்தாளர்

Buddhadev2

இடதுசாரி அரசியல்வாதி, அமைச்சர், முதல்வர் என்ற பொறுப்பு களை திறம்பட நிறைவேற்றி மறைந்த தோழர் புத்ததேவ் தனிப்பட்ட வகை யில் மிகச்சிறந்த வாசகர். எழுத்தா ளர். மொழிபெயர்ப்பாளர். மாயா கவோஸ்கியின் கவிதைகளையும், உலகப்புகழ்பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்-இன் பல கதைக ளையும், எழுத்துக்களையும் வங்காள மொழியில் மொழிபெயர்த்தவர்.

நாடக ஆசிரியர். பாபர் மசூதி இடிப்பினைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் இனத்தவரிடையே எழுந்த மனப்பிளவை ‘துர்சமாய்’ என்ற பெய ரில் 1993ஆம் ஆண்டில் நாடக மாக உருவாக்கினார். 2015-17 ஆம் ஆண்டுகளில் ‘திரும்பிப் பார்க்கி றேன்’ என்ற தலைப்பில் இரு சிறு நூல்களை அவர் எழுதினார்.

முதல் பகுதி மேற்குவங்க இடது முன்னணி அரசின் முதல் ஐந்து ஆண்டு சாதனைகளை விவரித்தது. இரண்டாவது பகுதி இடது முன்னணி அரசின் இறுதி ஐந்து ஆண்டுகளில் எதிர் கொண்ட சவால்களை விவரிப்ப தாக அமைந்திருந்தது. மத்தியில் வலதுசாரிக் கட்சியின் ஆதிக்கம் வலுப்பெற்று வந்த தருணத்தில் 2018 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பாசிசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலை எழுதினார். 2019 ஆம் ஆண்டில் ‘சொர்க்கத்தின் கீழே களேபரங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய சிறு நூலில் சீனாவின் பெருஞ் சுவர் கட்டப்பட்ட காலத்திலிருந்து தொடங்கி அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சி வரையிலான காலத்தை விவரித்திருந்தார்.

மறைவு

மூச்சுத்திணறல் மற்றும் பார்வைக் கோளாறு காரணமாக உடல் நிலை மேலும் மோசமாகி வந்த நிலையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரிலிருந்து தொடங்கி மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் தகுதி வரை யில் கட்சியின் பல்வேறு பொறுப்பு களிலிருந்தும் படிப்படியாக அவர் விலக நேர்ந்தது.

ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவ சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும், விளிம்பு நிலை மக்களின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

இறுதி மூச்சுவரை எளிமையின் சின்னமாக, தோழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக, எழுத்தாளர்கள் – கலைஞர்களின் பாதுகாவலராக விளங்கிய தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்களது நினைவிற்கு நெஞ்சார்ந்த செவ் வணக்கங்கள். என்றென்றும் நினை வில் வாழ்வீர்கள் தோழர்!

தோழர் புத்ததேவ் அவர்களின் மரணத்துடன் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஓர் அத்தியாயம் முடிந்திருக்கிறது.

தோழர் புத்ததேவின் நினைவிற்கு புதுச்சேரி மாநிலக்குழு தன் புரட்சிகர அஞ்சலியைச் செலுத்திக்கொள்வதுடன், தன் ஆழ்ந்த இரங்கல்களை அவருடைய மனைவி மீரா மற்றும் அவரது மகன் சுசேதனுக்கும் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் புத்ததேவ் உடல்தானம்; பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரியா விடை.

தோழர் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணியின் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வடிவமைத்தவர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அவற்றைச் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியவர். இறுதிவரை ஒரு அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட் வாழ்க்கையை வாழ்ந்து வழிகாட்டியவர். அத்தகைய மாபெரும் தலைவரின் மறைவால், மேற்கு வங்க மாநிலமே துயரத்தில் ஆழ்ந்தது.

மாநில அரசின் சார்பில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மறியாதையோடு இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்து. இருந்த போதும் துப்பாக்கி குண்டுகள் முழுங்கும் சடங்கை மறுத்துவிட்டோம்.

வீதிகள் தோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியின் தொண்டர்கள் மட்டுமன்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் கட்சி வேறுபாடுகளை கடந்து, தோழர் புத்ததேவுக்கு அஞ்சலி செலுத்தினர். படங்களை ஏந்தியபடி இரங்கல் ஊர்வலங்களை நடத்தினர்.

வியாழனன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட தோழர் புத்ததேவ் உடலுக்கு, இடது முன்னணியின் முதுபெரும் தலைவர் பிமன் பாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சூர்யகாந்த் மிஸ்ரா, ராமச்சந்திர தோம் ஆகியோர் தங்களின் செவ்வணக்கத்தை செலுத்தினர். தோழர் புத்ததேவின் துணைவியார் மீராவுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர், தோழர் புத்ததேவின் உடல், மேற்குவங்க சட்டமன்ற வளாகமான பிதான்சபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்ட புத்ததேவின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை (DYFI) நிறுவிய தலைவர்களில் ஒருவர் என்ற அடிப்படையில், டிஒய்எப்ஐ மாநிலக்குழு அலுவலகத்திலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட தோழர் புத்ததேவின் உடல், பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு- அவரது விருப்பப்படி என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Leave a Reply