சென்டாக் முறைகேடு – நீதி விசாரனை நடத்திட வேண்டும்

சென்டாக் கன்வீனர் என்ற பெயரில் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சிவராஜை நீக்க்கியது மட்டும் போதாது, நீதி விசாரனை நடத்திட வேண்டும்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்வியான மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திட ஒருங்கிணைந்த நிர்வாக குழுவை (சென்டாக் )அமைத்து நடைமுறை படுத்தப்படுகிறது.  புதுச்சேCentacரி அரசு. கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு தனியாக நடந்து வந்த மாணவர் சேர்க்கை அதனையும் கடந்த 3 ஆண்டுகளாக சென்டாக் நிர்வாகமே நடத்தி வருகிறது. மாணவர்களின் நலனுக்காக சென்டாக் ஏற்படுத்தப்பட்ட போதிலும்,  தனியார் கல்வி  நிறுவனங்களுக்கு ஆதரவாகவே சென்டாக் நிர்வாகிகளின் செயல்பாடு அமைந்தது.   .
மாணவர்கள் நலனை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக நிரம்பும் வரை சென்டாக்கில் மருத்துவ படிப்பிற்கான தகுதி பட்டியலை கூட வெளியிடாமல் நிறுத்தி வைப்பது,  பட்டியலை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் மருத்துவ இடம் கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியாமல்.  வேறு எந்த படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கவும் முடியாமல், பலமாணவர்கள் ஒரு கல்வியண்டையே இழந்துள்ளனர். இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சிவராஜ் அவர்கள் பொறியியல் பல்கலைக்கழகத்தின் முறைகேடு புகார் மீது துணைவேந்தரால் ஓராண்டுக்கு முன்பு இடை நீக்கம் செய்யப்பட்டார். துணைநிலை ஆளுநரின் உடனடி நடவடிக்கையால் எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமல் அன்று மாலை இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

என் .ஆர். காங்கிரஸ்  -பாஜக ஆட்சியாளர்களின் செல்வாக்கு மிக்க அதிகாரியாக வலம் வந்த கன்வினர் சிவராஜ் அவர்கள் தனியார் கல்வி நிறுவன  பிரதிநிதியுடனான, தனியான ரகசிய சந்திப்பு வீடியோ பதிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. தலைமைச் செயலாளருக்கும் புகாரையும் அளித்தது. ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் .இதை மார்க்சிஸ்ட் கட்சி  வரவேற்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை பொறுப்பில் இருந்து விடுவிப்பதோடு பிரச்சினை முடிந்ததாகவோ, இனி தொடராது என்று கருதவோ இயலாது .நீண்ட காலம் தொடர்ந்து வருகின்ற முறைகேடுகள் மீது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் சென்ட்டாக் முறைகேடு மீது அரசு உயர் மட்ட விசாரணை மேற்கொள்ள, புதுச்சேரி மாணவர்களின் நலனை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், மாணவர் பெற்றோர் அமைப்புகள் ஒன்று படவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது..

நன்றி
இப்படிக்கு .
ஆர் .ராஜாங்கம்

Leave a Reply