புதுச்சேரி மாநிலத்தின் பாரம்பரியமிக்க சுதேசி,பாரதி,ரோடியர் பஞ்சாலைகளை திறந்து நவீனப்படுத்திட வேண்டும். ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.500கோடி பெற்று காரைக்கால், மற்றும் திருபுவனையில் உள்ள நூற்பாலைகளை உள்ள டக்கிய ஜவுளிபூங்காக்களை அமைத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். மின்துறை தனியார்மயத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். அமைப்பு சார தொழிலாளர்களின் நல வாரியத்திற்கு ரூ.10கோடி நிதி ஒதுக்க வேண்டும். வாகன உரிமங்களை புது பிக்கவும், மற்றும் போக்கு வரத்து துறையின் அனைத்து கட்டண உயர்வுகளையும் திரும்ப பெற்று, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பழைய கட்டணங்களையே வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
26 பேர் கொண்ட புதுச்சேரி பிரதேசக்குழு விற்கு சிஐடியு தலைவராக என்.பிரபுராஜ், செய லாளராக ஜி.சீனுவாசன், பொருளாளராக ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.