குழந்தை தொழிலாளி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்க-மார்க்சிஸ்ட்

புதுச்சேரி  ரசாயன ஆலை விபத்தில்   குழந்தை தொழிலாளி மரணம் குறித்து ஆலை அதிபர், அரசு அதிகாரிகள் மீது Solara Cpimகொலை வழக்கு பதிவு  செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி மாநில செய லாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு காலாப்பட்டு சொலாரா ஆக்டிவ் பார்மா (சாசன் கெமிக்கல்) ரசாயன தொழிற்சாலையில் கடந்த நவ 4ந்தேதி  இரவில் ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நெடுஞ்செழியன் என்ற தொழிலாளர் பலியானார். இந்த நிலையில் மேலும் ஒரு சட்ட விரோத குழந்தை தொழிலாளியான யுவராஜ் (வயது-16)  மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு சிகிச்சையில் உள்ளவர்களின் உடல் நலம் பற்றிய முழுமையான தகவலை வெளியிடாமலும் அவர்களுக்கான உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யாமலும் இருந்து வருகிறது. இது வரை அந்த தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமலும் சட்டப் படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமலும் முத லாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது அம்பலமாகி உள்ளது.

தனது கடமை செய்யாமல் தொழிலாளர்துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும்  ரசாயன தொழிற்சாலையில்  தொடர் ஆய்வுகள் நடத்தி பணியாற்றும் தொழி லாளர்கள் மற்றும் சுற்றி வாழக்கூடிய மக்கள் பாது காப்பாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க தவறி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற பயங்கரமான வெடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த தொழிற்சாலையின் அலட்சியத்தாலும், அரசு அதிகாரிகளின் மெத்தனத்தினாலும் கடந்த ஆண்டு இத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிர்வாகம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டிருந்தால்  ஆலையில் வெடி விபத்தும், தொழி லாளர்கள் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

எனவே

  • தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமான மேற்படி தனியார் நிறு வனத்தின் அதிபர், அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் செயலாளர், இயக்குநர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
  • கொடும் விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான இந்த ரசாயன தொழிற் சாலையில் 18வயதுக்கு குறைவான குழந்தைகளை பயன்படுத்தி வேலை வாங்கிய நிறுவனத்தின் மீதும் இதை கண்காணிப்பு செய்யாமல் உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவரின்  மீதும்  குழந்தை தொழிலாளர் தடுப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
  • உயிரிழந்த, படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு உரிய நஷ்டஈடு புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பணிப் பாது காப்பிற்கும் உயிருக்கும், நிலத்தடி குடிநீருக்கும், கடல் நீருக்கும் காற்று மாசுக்கும் ஆபத்தை விளை விக்க கூடிய சொலாரா ரசாயன தொழிற்சாலை குறித்து முழுமையான ஆய்வு செய்யும் வரை அந்த நிறுவனத்தை இயக்கக் கூடாது  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  புதுச்சேரி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CPIM calls for shutting down pharma unit

CPI(M) leader alleged that the government was opaque about the health status of the people under treatment and the recurring fatal accidents at the factory exposed the negligence of the factory and lax supervision of safety norms by government officials.

The CPI(M) Puducherry has demanded shutting down operations of the private pharmaceutical factory in Kalapet pending a thorough probe into safety issues and evaluation of the extent of air and groundwater pollution in the surrounding areas.

In a statement, CPM State Secretary R. Rajangam said following the recent death of a child worker at the factory premises of the Solara Active Pharma Sciences at Kalapet, a murder charge should be filed against the plant management and government officials responsible for the tragedy. The death of a 17-year-old child labourer last week comes in the wake of a worker earlier succumbing to burn injuries sustained in a fire mishap at the plant on November 4, Mr. Rajangam said.

The recurring fatal accidents at the factory—two workers died in a fire accident in this factory last year—exposed the negligence of the factory and lax supervision of safety norms by government officials, the CPM leader said.

He also alleged that the government was opaque about the health status of the people under treatment and whether they were given proper treatment, yet to register a case against the private company or initiate legal action ostensibly to protect the private firm management.

He also called for strict action under the Child and Adolescent Labour Prevention and Regulation Act against all the government officials guilty of not monitoring the company practice of employing children below 18 years of age in hazardous conditions at the factory.

Mr. Rajangam sought proper treatment for the hospitalised burn victims and appropriate compensation to the bereaved kin.

Leave a Reply