மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் 2026 ஜூலை 11 முதல் 13 வரை புதுதில்லி யில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் வெளி யிடப்பட்ட அறிக்கை வருமாறு:
இந்தியப் பொருளாதாரம்
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கூற்று களுக்கு மாறாக, இந்தியப் பொருளாதாரம் ஒரு கடு மையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத அறிக்கையின்படி, 2025-26ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக இருந்த உண்மை யான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம், 2026-27ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் மேலாண்மை குறியீடு (PMI) தரவுகள், தனியார் துறை வளர்ச்சி ஜூன் மாதத்தில் கடந்த மூன்று மாதங்க ளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன. போதிய மழையின்மை பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கத்தையும் மேலும் பாதிக்கக் கூடும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் உரத் தட்டுப்பாடு, குறிப்பாக யூரியா தட்டுப்பாடு குறித்துப் புகார் தெரிவித்து வருகின்றனர். வேலையின்மை விகித மும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
இத்தகைய பின்னணியில்தான், மக்களைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத, உணர்வற்ற பாஜக அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர முன்மொழிந்துள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NFSA) முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், ‘அந்தியோ தயா அன்ன யோஜனா’ (AAY) திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதி அளவுகோலை, குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட முறையிலிருந்து தனிநபர் அடிப்படையிலான முறையாக மாற்றுகின்றன. இது மாநிலங்களைப் பாதிக்கும்; குறிப்பாக, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல் படுத்தி, அதன் விளைவாகக் குறைந்த சராசரி குடும்ப அளவைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்க ளுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தற்போதைய மக்கள் தொகை புள்ளிவிவரங்களுக்கு ஏற்பப் பயனாளிகள் தரவுத்தளத்தைப் புதுப்பித்தல் மற்றும் திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மக்கள் தொகையில் மிகவும் ஏழ்மையான பிரி வினருக்கான உணவு உரிமைகளைக் குறைக்கும் வகையிலான ஒரு திருத்தத்தைக் கொண்டுவரவே பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும். மேலும், அரசு தனது திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், அது தொடர்பான போராட்டங்களையும் கட்சி முன்னின்று நடத்தும்.
ஊழல்
அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகளை சங் பரிவாரத் தலைவர்கள் கையாடல் செய்ததாகக் கூறப் படும் ஒரு பெரும் ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சங் பரிவாரத்தின் தலைமையிலான ராமர் கோவில் போராட்டங்களில் முன்னணியில் இருந்த பலரே, இப்போது கோவில் நன்கொடைகளை முறை கேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர். பக்தி அல்லது தேசத்தின் மீது உண்மை யான அக்கறை இல்லாத, முற்றிலும் சுயநலம் கொண்ட அமைப்புகளின் கூட்டமைப்பான சங் பரி வாரத்தின் உண்மையான முகத்தை இச்செயல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சங் பரிவார அமைப்பினர் தங்களை அணுகும்போது, அவர்களின் போலி முகமூடியை அடையாளம் கண்டு, அவர்க ளிடம் கேள்வி எழுப்புமாறு பக்தர்களுக்குக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
ஒன்றிய வேளாண்மைத்துறை இணை அமைச்சர் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதையும் ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அரசு உடனடியாக இவ்விவகாரம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தி, பதவிகளைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவுச் சம்பவத்தைத் தொடர்ந்து நடந்துள்ள சம்பவங்கள், மற்ற ஆளும் கட்சிகளிடமிருந்து எந்த வகையிலும் வேறுபடாத ஆர்எஸ்எஸ்/பாஜகவின் ஊழல் நடை முறைகளை ஒட்டுமொத்தமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.
மக்கள்தொகை மாற்றம் குறித்த உயர்நிலைக் குழு
ஒன்றிய அரசு, ஒரு மக்கள்தொகை நிபுணர் கூட இல்லாமல், மக்கள்தொகை மாற்றம் குறித்த உயர் நிலைக் குழுவை அறிவித்துள்ளது. இந்த ஆணை யம், ‘வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம் குடியேறி களை’ அடையாளம் காணும் பணியை மறைமுகமாக மேற்கொள்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டத்திற்கு ஓர் அறிவியல் பூர்வமான மறைப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். தேசிய குடி மக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் இந்த ஆணையம், தேர்தல் ஆதாயத்திற்காக மதவெறி வெறுப்பையும் சமூகப் பிரிவினையையும் தூண்டி விடும் ஒரு கருவியாகவும், சிறுபான்மையினரைக் குறி வைத்து ஓரங்கட்டுவதை நிறுவனமயமாக்குவதாகவும் உள்ளது. மாநில அரசுகளுடன் எந்தவித ஆலோச னையும் இன்றி இது அறிவிக்கப்பட்டதால், இந்த நட வடிக்கை கூட்டாட்சிக் கொள்கைகளையும் கடுமை யாக மீறுகிறது.
குடியுரிமை சர்ச்சை
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) என்பது குடியுரி மைக்கான ஆதாரம் அல்ல என்று வெளியுறவு அமைச்ச கம் சமீபத்தில் கூறியிருப்பது, பாகுபாடு நிறைந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகியவற்றுக்குத் துணைபோகும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தாக்குதலாகும். அரசு வழங்கிய முறையான ஆவணங்களைக் கூட செல்லாததாக்கும் இந்த மோசமான அறிவிப்பு, தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தச் (SIR) செயல்முறையுடன் கவலைக்கிடமான முறையில் பொருந்திப்போகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட இந்தச் சூழ்ச்சிகள், மிகவும் நலிவடைந்தவர்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களைச் சட்டவிரோதமானவர்கள் என அறிவித்து, அவர்களை வெளியேற்றி, நாடற்ற நிலைக்குத் தள்ளும் ஒரு தீய உத்தியாகும். குடி யுரிமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம், அரசாங்கம் ஒரு மதப் பதிவேட்டிற்கான அடித் தளத்தை அமைத்து வருகிறது; அதே நேரத்தில் அது விலக்க விரும்பும் மக்களின் வாக்குரிமையையும் சிதைக்கிறது.
வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தச் செயல் முறை, மக்கள்தொகை மாற்றங்கள் ஆணையம் மற்றும் இந்தக் கடவுச்சீட்டு நிலைப்பாடு ஆகிய அனைத்தும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி குடி யுரிமையை மறுவரையறை செய்வதற்கான நகர்வுக ளாகப் புலப்படுத்துகின்றன. இது இந்தியாவை ஓர் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான அவசரத்தை வெளிப்படுத்துகிறது.
பாஜகவின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’
தனது நோக்கங்களை அடைவதற்கும், நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற தன்மையை மாற்று வதற்கும், தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே பாஜக எதிர்க்கட்சிகளை உடைக்கத் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை உருவாக்குவதற்காக அது பிராந்தியக் கட்சிகளைத் திட்டமிட்டுக் குறிவைக்கி றது. இதன் மூலம், தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவையும், ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்திற்கு அவசியமான பிற சட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்குவதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தையும் பலவீனப்படுத்துகின்றன. மேலும், அரசமைப்புச் சட்டக் கோட்பாடுகள் மீது அவற்றுக்கு இருக்கும் அற்பமான மதிப்பையும் அவை அம்ப லப்படுத்துகின்றன.
கட்டாய இடப்பெயர்வு மற்றும் வெளியேற்றம்
பல்வேறு மாநிலங்களில், அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நிலங்களை ஒதுக்கி வருகின்றன. அதானி மற்றும் அம்பானி ஆகி யோருடன் கூட்டு சேர்ந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, தரவு மையங்களை (data centres) அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வழங்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக இந்நிலங்களில் வசித்து வந்த மக்கள் வலுக்கட்டா யமாக வெளியேற்றப்பட்டு இடம்பெயரச் செய்யப்படு கின்றனர். பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் இத்தகைய சூழலைக் காண முடிகிறது. இடப்பெயர்வு மட்டுமின்றி, இந்த தரவு மையங்களின் உருவாக்கமானது நிலத்தடி நீர் மட்டம் வேகமாகச் சரிவதற்கும், பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகிறது.
குஜராத்தில் மத அடிப்படையில் மக்களை வகைப்படுத்தி கண்காணிக்கும் பயங்கரம்
சிறுபான்மையினரை மத அடிப்படையில் வகைப் படுத்திக் குறிவைப்பதற்கான புதிய நிலையான செயல் பாட்டு நடைமுறையை (SOP), குஜராத் மாநிலக் காவல்துறை கொண்டுவந்துள்ளது. உடை மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரியவர்க ளாகக் கருதப்படும் சிறுபான்மையினரைச் சட்ட விரோதமாகக் கண்காணிக்க இது வழிவகுக்கிறது. முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மீதான தாக்கு தல்கள் போன்ற உலகளாவிய விவகாரங்களில் கூட மாற்றுக்கருத்தை வெளிப்படுத்துபவர்கள் கண்கா ணிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள். அத்துடன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் கடு மையான பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அபாயமும் உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அனைத்து அடிப்படை உரி மைகளையும், உச்ச நீதிமன்றத்தால் மீறப்படக் கூடாதவை என அறிவிக்கப்பட்ட தனிநபர் தனியுரிமை யையும் மீறும் செயல்களாகும். அனைத்து வகை யான மாற்றுக்கருத்துகளையும் ஒடுக்குவது, சமூ கத்தில் மதவெறித் தீயை மேலும் விசிறிவிடுவது என்ற நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடிமக்களை மத அடிப்படையில் வகைப்படுத்திக் கண்காணிப்பதை யும், அரசமைப்புச் சட்ட ரீதியாக அவர்களுக்கு உத்த ரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதையும் மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக அரசின் எதேச்சதிகார முகம்
பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக அரசின் எதேச்சதிகார முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்ப வத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள், அவ்வரசின் பெண்களுக்கு எதிரான மற்றும் ‘மனுவாத’ மனப்பான்மையை அம்பலப்படுத்தி யுள்ளன. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தச் செயல் முறையின் (SIR) காரணமாகப் பெயர்கள் நீக்கப்பட்ட வர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. நடைபாதை வியாபாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது காவல்துறை அராஜகம் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பாஜக வினர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களைத் தாக்குவ துடன், கட்சியின் கொடிகளையும் தீயிட்டுக் கொளுத்து கின்றனர். இத்தகைய தாக்குதல்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அஞ்சாது. பாஜகவின் எதேச்சதி கார மற்றும் மதவெறி ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், மக்களைத் திரட்டிப் போராடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
அசாம் முதலமைச்சரின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள்
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பொறுப்பற்ற அறிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கண்டிக்கிறது. ஜுபீன் கார்க் போன்ற அசாமின் முற்போக்கு கலாச்சார ஆளு மைகளின் படங்களை மேம்பாலங்களில் வரைபவர்கள் மீது கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்ட விதி களை விதிப்போம் என்று அவர் விடுத்துள்ள மிரட்டல் கள் கண்டிக்கப்பட வேண்டியவை. அவரது அறிக்கை கள், மிகவும் சகிப்புத்தன்மையற்றதும், சிறுபான்மை யினர் மற்றும் இடதுசாரி ஆர்வலர்களைக் குறி வைப்பதும், அதே நேரத்தில் அதன் பிளவுபடுத்தும் மற்றும் மதவெறி நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதுமான ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின் பிரதிபலிப்பாகும்.
கேரளத்தில் பெருநிறுவனங்களுக்குச் சாதகமான காங்கிரஸ் அரசு
கேரள அரசு மாநிலத்தின் நலன்களைப் பெருநிறுவ னங்களிடம் அடகு வைத்து வருகிறது. புதிய அமைச் சரவை பதவியேற்ற நாள் முதலே, காங்கிரசின் மென்மையான இந்துத்துவப் போக்கும் சமரசம் செய்து கொள்ளும் தன்மையும் வெளிப்படையாகத் தெரிகின் றன. முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசு அறிமு கப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை இந்த அரசு பலவீனப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. மக்களின் உரிமைகளைப் பாது காப்பதற்காக மக்களைத் திரட்டிப் போராடும்.
அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத் திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) பல வீனத்தை மத்தியக் குழு குறிப்பிட்டது. இஸ்ரேல், ஒப்பந் தத்தை அப்பட்டமாக மீறி, லெபனான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்கிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் எல்லைகளை வெளிப்படுத்துகிறது. தனது ஆக்கிர மிப்புக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தின் காரணமாக, அமெரிக்கா இந்தப் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக் கப்பட்டது.
உலகச் சந்தைகளில் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. இருந்தபோதிலும், எரிவாயு, பெட் ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அதிகரித்த விலை களைக் குறைக்க இந்திய அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அது உடனடியாக இந்த விலைக ளைக் குறைத்து, விவசாயிகளுக்கு உரங்கள், குறிப்பாக யூரியா கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மத்தியக் குழு ஆழமான மற்றும் விரிவான ஆய்வை மேற்கொண்டது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட விதம், முன்வைக்கப்பட்ட விவகா ரங்கள் மற்றும் வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் இருந்த சில குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் இதில் கண்டறியப்பட்டன. இந்தக் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களைச் சரிசெய்து நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைக் கட்சி உண்மையான ஈடுபாட்டுடன் மேற்கொள்ளும். இது தொடர்பான உறுதியான நடவடிக்கைகள், மேற்கு வங்கம் (ஆகஸ்ட் கடைசி வாரம்) மற்றும் கேரளா (செப்டம்பர் இரண்டா வது வாரம்) ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள கட்சியின் மாநிலக் குழுக்களின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, அறிவிக்கப்படும்.
எதிர்கால நடவடிக்கைகள்
மத்தியக் குழு பின்வரும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுத்துள்ளது:
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரம்: தேர்தல் செயல்முறை முழுவதிலும் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தி ஒரு பரந்த மற்றும் விரிவான பிரச்சாரத்தைத் தொடங்க மத்தியக் குழு முடிவு செய்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தி, ஒரு நடுநிலை யான அரசமைப்புச் சட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துள்ளது. வாக்களிக்கும் உரிமையை நிலை நாட்டவும், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான மற்றும் நடுநிலையான தன்மையைப் பாதுகாக்க வும் கட்சி அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டும்.
மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான பிரச்சாரம்: சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி மகளிர் அமைப்புகள் விடுத்துள்ள போராட்ட அழைப்புக ளுக்கு மத்தியக் குழு தனது ஆதரவை அளிக்கிறது. இந்தக் கோரிக்கையை ஆதரித்து, பிற வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து மக்களைக் கட்சி அணிதிரட்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரம்: ஈரான், பாலஸ் தீனம், வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக ளுக்கு எதிராகக் கட்சி விரிவான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். அமெரிக்க ஆக்கிர மிப்புக்கு எதிராகக் கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் மக்க ளைக் கட்சி அணிதிரட்டும்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள்: மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா விடுத்துள்ள போராட்ட அழைப்புகளுக்கு மத்தியக் குழு ஆதரவு அளிக்கிறது. 2026 ஆகஸ்ட் 10 அன்று அவர்கள் விடுத்துள்ள ‘சிறை நிரப்பும் போராட்டம்’ அழைப்பைக் கட்சி முழு மனதுடன் ஆதரிக்கிறது.
மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு: ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த விடுத்த அழைப்பின் பேரிலும் மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு மத்தியக் குழு ஆதரவு அளிக்கிறது. இக்கோரிக்கை களை வலியுறுத்தி உண்ணாநிலை மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக் அவர்களது உடல்நிலை மோச மடைந்து வருவது குறித்துக் குழு தனது கவலையைத் தெரிவிக்கிறது. இக்கோரிக்கைகளை ஏற்கவும் நடவ டிக்கை எடுக்கவும் பாஜக தலைமையிலான அரசு மறுப் பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அரசின் எதேச்சதிகார மற்றும் இளைஞர் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்றாகும்.







