மாபெரும் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் தொடங்கியது

மாநில உரிமைகளை மீட்கவும், மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் புதுச்சேரி முழுவதும் செப் 20 முதல் 26தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 200 கி.மீ மீட்டர் மக்கள் சந்திப்பு நடைபயண இயக்கம் நடைபெறுகிறது.  புதுச்சேரி நெல்லித்தோப்பு வ.சுப்பையா சிலையிலிருந்து செவ்வாய்கிழமை (செப்-20) இந்த நடைபயணத்தை கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன்  துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.   நடைபயணத்தை துவக்கி வைத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது. 2014 ஆம்  ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சி பொறுப் பேற்ற மோடி தலைமையிலான பாஜக  அரசின் கொள்கைகளால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ரூ.500க்கு விற்ற சமையல் எரி வாயு சிலிண்டர் விலை தற்போது  ரூ.ஆயிரத்தையும் தாண்டி யுள்ளது. எதற்கெடுத்தாலும் ஜி.எஸ்.டி என்ற வரியை போட்டு மக்களை பாஜக அரசு வதைத்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் நவீன கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கோடிக்கணக்கில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஒன்றிய ஆட்சியாளர்களின் இத்த கைய கொடுமைகளை மக்களிடம் விளக்கும் வகையில் இத்தகைய இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரு கிறது.

வாக்குறுதிகள் என்னாச்சு? 

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்த லின்  போது மாநில என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி, மத்தி யிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி  இருந்தால்  புதுச்சேரியில் பாலாறும், தேனாறும் ஓடும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த னர். ஓர் ஆண்டு நிறைவடைந்தும் இன்னும் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வில்லை. மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறக்கவில்லை. மாநில கடனை தள்ளுபடி செய்யவில்லை. மாநிலத்தை பொறுப்பு ஆளுநர் தான் ஆட்சிசெய்கிறாரா அல்லது முதல்வர் ரங்கசாமி ஆட்சி செய்கிறாரா என்ற சந்தேகத்தில் தான் புதுச்சேரி மக்கள் உள்ள னர். எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ரங்கசாமி தலைமை யிலான அரசு உடனடியாக ராஜி னாமா செய்து  மறு தேர்தலை சந்திக்க முன்வரவேண்டும் என்றார். 

பங்கேற்றோர்

நடைபயண துவக்கவிழாவில் கட்சியின் மூத்த தலைவர் சுதாசுந்தரராமன், புதுச்சேரி மூத்த தலைவர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், சு.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், கொளஞ்சி யப்பன், கலியமூர்த்தி, சத்தியா, நகரகமிட்டி செயலாளர் மதி வாணன், இடைக்குழு செய லாளர்கள் ராம்ஜி, அன்புமணி, சரவணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட  ஏராள மானோர்  பங்கேற்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில்  செப்டம்பர் 26 தேதி வரை நடைபயண இயக்கம் நடைபெறுகிறது.

Leave a Reply