இரட்டை என்ஜின் ஆட்சியின் பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு! சிபிஎம்

புதுச்சேரி ஜூலை 26 2024-

இரட்டை என்ஜின் ஆட்சியின் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு  குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரியை முற்றிலும் புறக்கணித்து, வெற்று பட்ஜெட் என்பதை பறைசாற்றி உள்ளனர். ஒன்றிய அரசாங்கத்தின் 2024-25க்கான பட்ஜெட்,  பாஜக பின்பற்றிவந்த மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் தொடர்ச்சியாகும். கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் வரு மான வரி விகிதங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது. சொத்துவரி முற்றாக நீக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் வயிற்றை நிரப்புவதுதான் மோடி  ஆட்சியின் ஒரே குறிக்கோளாக உள்ளது. இதனால் நாட்டின் செல்வ வளங்கள் ஒரு சதவீதத்துக்கு குறை வானவர்களிடம் மேலும் மேலும் குவிகிறது.  அதேவேலையில் இந்தியா உச்சபட்ச அளவிலான ஏற்றத்தாழ்வு களில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் கடுமையான வேலையின்மை, வறுமை காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் மூன்று வேளை உணவு அருந்துவதே கேள்விக்குறியாகிவிட்டது.

இந் நிலையிலும் அதற்கெல்லாம் எந்த தீர்வும்  இல்லாத பட்ஜெட்டாக இருப்ப தோடு, உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியங்களையும் வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள். 

இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது.

ஒன்றிய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இரட்டை எஞ்சின் ஆட்சி நடத்தும் முதல்வர் என்.ரங்கசாமி வைத்த கோரிக்கைகளையும் புதுச்சேரி மக்களின் நலன்களையும் ஒன்றிய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார். ஒவ்வொருமுறையும் புதுச்சேரி அரசின், கடன் தள்ளுபடி, மாநில உரிமை, வரிவருவாய் இழப்பீடு, மூடங்கிடக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி, அரசு மின்துறை விற்பனை, மூடி கிடக்கும் பஞ்சாலைகள், அரசு சார்பு நிறுவனங்கள், ரேசன்கடை போன்ற பல்வேறு கோரிக்கைகள், பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாத நிலையில் இதனை முதல்வர் என்.ரங்கசாமி வரவேற்று இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  

மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை கள் எதையும் தீர்த்திடும் விதத்தில் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மறுத்தும், அவர்களின் தலையில் சுமைகளை ஏற்றி, வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றில் அடித்துவிட்டு சாதனை பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துள்ளனர். 

இந்த பட்ஜெட் முற்றிலுமாக புதுச்சேரி மற்றும் தேச மக்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான பட்ஜெட்டாகும்.  எனவே தொழி லாளர் வர்க்கமும் புதுச்சேரி மக்க ளும் இதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று சிபிஎம் புதுச்சேரி மாநில குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு  செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Leave a Reply