தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மதரீதியில் மக்களை பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் – பாஜக எடுக்கும் முயற்சிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்

மக்களின் இயல்பு வாழ்க்கையை பின்னோக்கி இழுக்க அனுமதியோம்! –

பெரியார் சிலையை உடைப்போம் என்று பதட்டத்தை உருவாக்குவது, உத்  தமபாளையத்தில் பள்ளிவாசலில் தொழுகைக்குச் சென்ற மாணவர்களை பள்ளிக்குச் செல்ல விடாமல் தாக்கி யது, தேனியில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தை எதிர்த்து மோதலை உருவாக்க முயற்சித்தது, தந்தை பெரி யார் பெயரில் தொடங்கப்பட்ட உணவ கத்தை அடித்து உடைத்து வன்முறை யில் ஈடுபட்டது என்று ஆர்.எஸ்.எஸ்  உருவாக்கி வரும் அடுத்தடுத்த வன்  முறை நிகழ்வுகளை தமிழகம் சந்தித்து வருகிறது. தற்போது,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சின் ஒரு  பகுதியை மட்டும் திரித்துச் சொல்லி,  அதற்கு எதிராக செப்.26 ஆம் தேதி  (இன்று) சிறை நிரப்பும் போராட்டம் நடத் தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும், இதே பிரச்சனையில் செப்.27 ஆம் தேதியன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்திடவும் பாஜக முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில்…

புதுச்சேரி திமுக தலைமையின் அழைப்பிற்கிணங்க சிபிஐ(எம்), சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் முழு அடைப்பு அறிவிப்பு, மக்கள் ஒற்றுமைக்கும் மத  நல்லிணக்கத்திற்கும் எதிரான சீர்குலைவு நடவடிக்கை என்பதும். மத அடிப்படையிலான மோதலை உருவாக்  கும் இந்த முயற்சியை மக்கள் புறக்க ணிக்க வேண்டும் என்றும் மக்களுக்கும்,  வணிகர்களுக்கும்  வேண்டுகோள் விடுத்  துள்ளனர். பாஜக பங்கேற்றுள்ள புதுச்சேரி கூட்  டணி அரசாங்கம், தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ரேசன் கடைகளை திறக்கவில்லை; தேர்த லுக்கு முன்னதாக, அரிசிக்கு பதிலாக  வழங்கப்பட்டு வந்த பணத்தையும் நிறுத்தி  விட்டது. இந்தியாவிலேயே ரேசன் கடை களை மூடி, இலவச அரிசி வழங்க  மறுக்கும் மாநிலமாக புதுச்சேரி உள் ளது. மேலும், சத்துணவு சமைப்பதில் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை புகுத்தி, குழந்தைகளுக்கு சாப்பிட தகு தியில்லாத உணவு பரிமாறப்படும் அவ லம் நீடிக்கிறது. புதுச்சேரியில் நிலவும் இத்தகைய அவல நிலைமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் போராடி வரு கின்றன. அம்பலப்பட்டு நிற்கும் புதுச் சேரி பாஜக கூட்டணி அரசாங்கம், மக்க ளின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் நோக்கத்துடனேயே முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது.

அக்டோபர் 2 ஏன்? 

தமிழ்நாட்டில் செப். 26 ஆம் தேதி  பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன், வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று  50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சீருடை  பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள் ளது.  காந்தி பிறந்த நாளை, ஆர்எஸ்எஸ் ஏன் தேர்ந்தெடுத்துள்ளது?. மதச்சார்  பின்மைக்காகவும், மத நல்லிணக்கத் திற்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும்  முன்நின்று போராடிய அண்ணல் காந் தியை ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தை ஏற்ற  நாதுராம் கோட்சே சுட்டுப் படுகொலை  செய்தான். ஆனால், கோட்சேவை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு,  காந்தி பிறந்த நாளையும் தனதாக்க எடுக்கும் முயற்சிதான் இந்த பேரணித் திட்டத்தின் பின்னால் உள்ளது.  மேலும், அக்டோபர் 2 ஆம் தேதி  தங்களுடைய பேரணிக்கான நாளாக  தேர்தெடுத்ததற்கு ஆர்.எஸ்.எஸ்  சொல்லும் காரணங்களில் ஒன்று, ‘அம்  பேத்கர் பிறந்த 125 வது ஆண்டை  கொண்டாடுவது’ என்பதாகும். சனாத னத்தையும், சாதிக் கொடுமைகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட மனு நீதியின் அடிப்படையில்தான் நாட்டின் அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்  டும் என கோல்வால்கர் உள்ளிட்டு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வலியுறுத்தி னார்கள். அரசியல் சட்ட வரைவுக் குழு வின் தலைவராக இருந்த அண்ணல்  அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் ஆலோசனையை நிராகரித்தார். அண்ணால் அம்பேத்கர் அவர்களும், அரசியல் நிர்ணய சபையும், மதச்சார் பற்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சட்டத்தையே உரு வாக்கி நிறைவேற்றியது.

அதானியை உலகப் பணக்காரராக்கியதே சாதனை

மத்தியில் 2014 ஆம் ஆண்டு அதிகா ரத்திற்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அரசியல் சட்டத்தின் விழுமியங்களான ‘மதச்சார்பற்ற ஜன நாயகம், கூட்டாட்சி, பொருளாதார இறை யாண்மை மற்றும் சமூக நீதி’ என அனைத்தையும் தகர்க்க முயற்சித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்ப ரேட் பெருமுதலாளிகளுக்கும், அன்னிய  நாட்டு கம்பெனிகளுக்கும் தாரை வார்க்க முயற்சித்து வருகிறது. ஒன்றிய  அரசின் இத்தகைய நவீன தாராளம யக் கொள்கைகளால் என்றும் கண்டி ராத வேலையின்மை,  விலையேற்றம் போன்றவைகளால் மக்களின் அன்றாட  வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. உலக அளவில் பட்டி னியால் வாடும் மக்களில் 60 சதவிகி தம் பேர் இந்தியாவில்தான் வாழ்கிறார்  கள். ஐ.நா மன்றம் வெளியிட்டுள்ள 2021-22க்கான மனித வள மேம்பாட்டு  அறிக்கையின்படி, உலக தர வரிசை யில் 2020ல் 130வது இடத்தில் இருந்த இந்  தியா 2021ல் 132வது இடத்திற்கு சரிந்து விட்டது. ஆனால், இதேகாலத்தில் மோடி யின் சொந்தமான மாநிலமான குஜ ராத்தை சார்ந்த அதானி உலகப் பணக்  காரர்களின் பட்டியலில் 5வது இடத்திலி ருந்து 3வது இடத்தை பிடித்து தற்போது 2வது இடத்திற்கு வந்துவிட்டார். இது தான் மோடி தலைமையிலான அரசாங்  கத்தின் சாதனை.

அதிருப்தியை திசைதிருப்பும் நோக்கத்துடன்

மோடி தலைமையிலான கார்ப்ப ரேட்-ஆர்எஸ்எஸ் கூட்டணி அரசாங் கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் அதிருப்தியை திசை திருப்பும் நோக்கத்தோடு தங்களின் கொள்கைகளுக்கு நேர் எதிரான ஆளு மைகளான காந்தியையும், அம்பேத்க ரையும் கைப்பற்ற ஆர்எஸ்எஸ்-பாஜக முயற்சிக்கிறது. சமீப ஆண்டுகளில், பாஜகவினர் தொடர்ச்சியாக மத அடிப்படையில் மோதலை உருவாக்கிட பகீரத முயற்சி களை எடுத்து வந்திருக்கிறார்கள். தென் காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தாங்களே குண்டுவைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்த முயற்  சித்து மாட்டிக் கொண்டது, திருப்பூர்  மாநகரில் பாஜக நிர்வாகி ஒருவரின் தற்  கொலையை, மத அடிப்படையிலான கொலையாக கற்பித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது, இராமநாத புரத்தில் பாஜக நபர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் நிகழ்ந்த கொலை யை, இஸ்லாமியர்கள் மீது திசை திருப்ப முயற்சித்தது எனப் பல சம்ப வங்களைக் குறிப்பிடலாம்.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்  தியா முழுவதுமே இதுதான் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் உத்தியாக இருந்து வருகிறது. மாலேகான், சம்ஜவுதா எக்ஸ்  பிரஸ் உள்ளிட்டு பல குண்டு வெடிப்பு களை தேர்தலை ஒட்டி மக்களிடையே பதட்டத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டார்கள் என்பது, ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர் ஒருவரே நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததன் மூலம் அம்பலப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைப்பதுதான் பாஜக எடுத்துவரும் முயற்சிகளின் அடிப்படையாகும். அதன்  மூலமே அதிகாரத்தை நோக்கி வேகமாக  நடைபோட முடியும் என்று பாஜக நினைக்கிறது. மக்களின் வாழ்வை பின்னோக்கி இழுக்கும் சனாதன சித் தாந்தத்தை அமலாக்க வேண்டும் என்  பதே அவர்களின் முயற்சிகளின் அடித் தளம் ஆகும். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மத ரீதியில் மக்களை பிளவுபடுத்த, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஆர்எஸ்எஸ் – பாஜக எடுக்கும் முயற்சிகளை மக்கள் நிராக ரிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

Leave a Reply