உணவு உரிமை பாதுகாப்பு, போதை ஒழிப்பு CPIM சார்பில் சிறப்பு மாநாடு ஜூலை 16 2024.‌

உணவு உரிமை பாதுகாப்பு , போதை ஒழிப்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு 2024 ஜூலை 16.‌
 
வணக்கம். அனைவருக்குமான உணவு பாதுகாப்பு ,வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது , விவசாயிகளிடம் இருந்து ஆதரவு விலைRed Flag Cpim (64) கொடுத்து தானியங்களை கொள்முதல் செய்வது ,என்ற தன்மையில் பொது விநியோகத் திட்டம் துவங்கப்பட்டது. நவீன தாராளமய கொள்கை மற்றும் ஊரை அடித்து உலையில் போடும் கொள்கையால் மிகப்பெரிய மக்கள் நலன் சார்ந்து இத்திட்டம்  பலவீனப்படுத்தப்பட்டன.
 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜக ஆதரவு பெற்ற மாநில என். ஆர் காங்கிரஸ் ஆட்சியில் 2015 செப்டம்பர் முதல் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டன. என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் 18 மாதங்கள் மட்டுமே அரிசிக்கான பணமும் வழங்கப்பட்டன.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு சில ஆண்டுகள் அரிசி வழங்கிய நிலையில் அதை பொறுக்க முடியாத மத்திய அரசும் அப்போதை கிரண்பேடியும் இணைந்து புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் வகையில் ஒட்டுமொத்த ரேஷன் கடைகளையும் நிரந்தரமாக மூடிவிட்டது. ரேஷன் கடைகளை திறக்கவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தது. 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இக்கோரிக்கையை முன்வைத்து 2024 பிப்ரவரி 19 முதல் 22 வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தியது.  இடைக்கால பட்ஜெட் தொடருக்கு முன்னதாக 2024 பிப்ரவரி 20ஆம் தேதி தலைவர்கள் முதல்வர்  ரங்கசாமியை சந்தித்து  பேசிய போது, பலமுறை பேசியும் ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை, என்றாலும் சமையல் எண்ணெய் பருப்பு வகைகள் , கோதுமை, ரவை, சர்க்கரை உள்ளிட்ட ஆறு பொருட்களை மானிய விலையில் வழங்கவும் ரேஷன் கடைகளை திறக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் ரேஷன் கடைகளை திறப்பதற்கான அந்த அறிவிப்பும் இல்லை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் சென்ற இடங்களில் எல்லாம் ரேஷன் கடையை திறக்க வேண்டும், மதுக்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மக்கள் குரல் தொடர்ந்து எதிரொலித்தது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு மத்திய மாநில, அரசுகளின் மக்கள் விரோத கொள்ளைக்கு எதிரானது என்பதை திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது.
புதுச்சேரியில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் இல்லை ஆனால் 1500 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற தன்மையில் மதுபான கடைகள் அதிகரித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கால் 2010இல் (FL-2) புதிய மதுக்கடைகளை தனியாருக்கு அனுமதிக்க மாட்டோம் என அரசு உறுதியளித்தது. ஆனால் என்.ஆர் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து ரெஸ்ட்ரோபார் களுக் (FL-3 ) அனுமதி வழங்குகிறோம் என தாராள அனுமதி வழங்கப்பட்டன.
மாநிலத்தில் ஒன்பது தனியார் அந்நிய மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள போது மேலும் ஆறு புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. மதுபான தொழிற்சாலை மற்றும் ரெஸ்டோ பார் உரிமம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. மக்கள் குடியிருப்பு, பள்ளிக்கூடம் , கோவிலில் உள்ளிட்ட திருத்தலங்கள் அருகில் விதிமுறைகளை மீறி மதுபான கடைகள் அமைந்துள்ளன. இதை எதிர்த்து போராடும் மக்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. கஞ்சா ,பிரவுன் சுகர், போதை ஸ்டாம்ப், உள்ளிட்ட போதை வாய்ப்புகள் அதிகமாக மாநிலத்தில் புழங்குகின்றன. பல இளைஞர்கள் போதைப் பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மதுப்பழக்கம், போதைப் பழக்கத்தால் 19 சதவீத பெண்கள் கணவனை இழந்துள்ளனர். இதில் இளம் விதவைகள் புதுச்சேரியில் அதிகம் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மது மற்றும் போதை புதுச்சேரியில் ஆறாக ஓடுவதால்  சாலை விபத்துகள், மரணங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் , பெண்கள் மீதான வன்முறைகள் என சகலத்திற்கும் அடிப்படையாக உள்ளன.
ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஒன்றிய மோடி அரசின் கொள்கை முடிவால் ரேஷன் கடைகள்  மூடியே கிடக்கின்றன. 2022ல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வந்து சென்ற பின்பு தான் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆறு புதிய அந்நிய மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி, தாராளமாக ரெஸ்ட்ரோபர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் மாநில கூட்டணி ஆட்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ரேஷன் கடை திறக்கவும் ,ரெஸ்டோபார் களை மூடவும் போர்க்கொடி தூக்கி உள்ளதாக வரும் செய்தி பாசாங்கு தனமாகும். ஆட்சி அதிகாரத்தை அடிக்கும் கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்ள நடைபெறும் ன சண்டை தவிர வேறு எதுவும் இல்லை. மலிவான அரசியலை ஊழல் ,மிகுந்த மக்கள் விரோத என் ஆர் காங்கிரஸ்; பாஜக கூட்டணி ஆட்சியை அதிகாரத்திலிருந்து மக்கள் அகற்றுவார்கள் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.
இந்தப் பின்னணியில் அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும், ஊதியம் இன்றி தவிக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிடவும், குடியிருப்புகள், பள்ளிகள், ஆன்மீகத் திருத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகள், ரெஸ்டோபார்களை அகற்றவும், படிப்படியாக மதுவிலக்கு போதை தடுப்பு நடைமுறைப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இத்தகைய கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 2024 ஜூலை 16ஆம் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் போதை எதிர்ப்பு சிறப்பு மாநாடு ஜீவா திடலில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி பங்கேற்க உள்ளார். ரேஷன் கடைகளை திறக்கவும்
போதைப்பொருட்களை கட்டுப்படுத்தவும் நடைபெற உள்ள மாநாட்டில் அனைத்து பகுதி மக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்
இரா.இராஜாங்கம்
மாநில செயலாளர்

Leave a Reply