இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி
ஆக்கிரமிப்பு அகற்றுவது என்ற பெயரில் அரசு நிர்வாகத்தின் அராஜக செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அரசு நிர்வாகம் புல்டோசர் உதவி கொண்டு அராஜகமான முறையில் எளியோர் கடைகள் மற்றும் பிழைப்புக்காக சாலை ஓரம் வியாபாரம் செய்யும் கடைகள் இடித்து நொறுக்கப்படுகிறது. மறுபுறத்தில் வசதி படைத்தவர்கள், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை எடுக்க அரசு நிர்வாகம் அஞ்சுகிறது. இத்தகைய பாரபட்சமான மற்றும் துரதிர்ஷ்டமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்க்கிறோம்.
சாலைகள் பொது பயன்பாட்டிற்கானது என்ற தன்மையில் சாலைகள் ஆக்கிரமிப்பை ஒழுங்குபடுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை கூட்டாக சேர்ந்து தேதி, நேரம், இடங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிவித்துவிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து நடத்துகின்றனர். எது ஆக்கிரமிப்பு, எதுவரை ஆக்கிரமிப்பு, எதை அகற்றுவது, எப்படி அகற்றுவது என்ற வரையறை இன்றி, வழிகாட்டுதல் இன்றி, அராஜகமான முறையில் போர் பதற்றத்தை போன்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
பொக்லின் எந்திரத்தால் இடித்து தள்ளி அதை அகற்றாமல் அப்படியே விடப்படுகிறது. சாலை ஓர தினசரி வியாபாரிகளின் பொருளும் அழிக்கப்படுகிறது. இவ்வாறு சாதாரண வணிகர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு பொருள் சேதம், மறு முதலீடு, மன உளைச்சல் போன்ற துயரமான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். என் ஆர் காங்கிரஸ். பாஜக அரசின் இத்தகைய செயல்பாடு மிகுந்த வேதனை அளிக்கிறது. புதுவையிலும் பொக்லின் நடவடிக்கைகள் வந்துவிட்டதை காட்டுகிறது. ஆக்கிரமிப்பு என்பது சாலையோரம் சார்ந்த விஷயமாக குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தல் அரசியல் திசை திருப்பு உத்தியாக தென்படுகிறது.
மேலும் கோவில் சொத்து, தனியா சொத்து அரசின் பொதுச்சொத்து ஆகிய ஆக்கிரமிப்புகள் குறித்து, அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நில அளவை பதிவேடு துறையில் பல உயில்ர்கள் மற்றும் ஆவணங்களை வெளியில் எடுத்து மோசடியாக புதிய ஆவணங்கள் உருவாக்கியது குறித்த குற்றச்சாட்டில் அரசு நடவடிக்கை என்ன என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமானது, ஆனால் என் ஆர் காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் ஏட்டளவில் மட்டும் உள்ளது. என்.ஆர் காங்கிரஸ் – பாஜக அரசின் இத்தகைய செயல்பாடு மிகுந்த வேதனை அளிக்கிறது. புதுவையிலும் பொக்லின் நடவடிக்கைகள் வந்துவிட்டதை காட்டுகிறது.
ஆக்கிரமிப்பு என்பது சாலையோரம் சார்ந்த விஷயமாக குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தல் அரசியல் திசை திருப்பு உத்தியாக தென்படுகிறது. மேலும் கோவில் சொத்து, தனியார் சொத்து, அரசின் பொதுச்சொத்து ஆகிய ஆக்கிரமிப்புகள் குறித்து, அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நில அளவை பதிவேடு துறையில் பல உயில்கள் மற்றும் ஆவணங்களை வெளியில் எடுத்து மோசடியாக புதிய ஆவணங்கள் உருவாக்கியது குறித்த குற்றச்சாட்டில் அரசு நடவடிக்கை என்ன என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமானது, ஆனால் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் ஏட்டளவில் மட்டும் உள்ளது.
நடைமுறையில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் ,மிகப்பெரும் செல்வந்தர்களுக்கு சட்டம் வளைந்து கொடுப்பதும், ஏழைகளை மட்டும் தண்டிப்பதும் மக்களாட்சிக்கு அழகல்ல. ஆகவே மாநில அரசு தற்போது நடைபெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பொருத்தமான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கி, கடை உரிமையாளர்களின் பங்கேற்போடு ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும். மேலும் புதுச்சேரி விடுதலையின் போது அரசின் வசம் இருந்த பொது சொத்து மற்றும் கோவில் சொத்து எவ்வளவு. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது போக மீதி உள்ள நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பது குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
நன்றி
இங்ஙனம்
ஆர்.ராஜாங்கம் (மாநில செயலாளர்)