மாஹே, காரைக்கால், ஏனாம் ஆகிய புதுச்சேரி மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

ரேசன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் புதுச்சேரி தலைமை செய லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

மாஹே, காரைக்கால், ஏனாம் ஆகிய புதுச்சேரி மாநில மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (2021 ஜன.8 ) பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Cpim Puducherry (4)கோரிக்கைகள்

மாஹேவில் சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மூடி கிடக்கும் ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். மீன்பிடி துறைமுகத்தை செயல்படுத்த வேண்டும். மின்துறையில் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் தனி யார்மய நடவடிக்கைகளை உடனடி யாக கைவிட வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிள்ளை தோட்டம் பெரியார் சிலையில் இருந்து துவங்கிய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாஹே கமிட்டி செயலாளர் சுனில் குமார், பல்லூர் இடைக்குழு செயலாளர் சுரேந்திரன், காரைக்கால் மாவட்டச் செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் தலைமை தாங்கினர்.

புதுச்சேரியின் முக்கிய வீதிகளைக் கடந்து சென்று ஊர்வலத்தின் நிறை வில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், “புதுச்சேரியில் மூடி கிடக்கும் ரேசன் கடைகளையும் பஞ்சாலைகளையும் திறக்க நட வடிக்கை எடுப்போம் என்று கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ரேசன் கடைகளை திறக்க வில்லை” என்று குற்றம் சாட்டினர்.

முதல்வருடன் சந்திப்பு

இந்த போராட்டத்தை தொடர்ந்து, மாஹே மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்தனர். அப்போது, இந்த கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், “ரேசன் கடை களை உடனடியாக திறக்கவில்லை எனில் தலைமை செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Cpim Puducherry (2)இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஹே தொகுதி பொறுப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செய லாளருமான எம்.வி. ஜெயராஜன், மூத்த தலைவர்கள் தா.முருகன், சுதா சுந்தரராமன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், எஸ்.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், கலியமூர்த்தி, கொளஞ்சி யப்பன், சத்தியா உட்பட திரளானோர் கொட்டும் மழையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Cpim Puducherry (3)

Leave a Reply