புதுச்சேரி மாநில உரிமை- சிறப்பு மாநாடு 2022

yetchuriஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)  கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்யூரி, அரசியல் தலமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு மாநாடு 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கம்பன் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாநிலம் போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுக்கவும், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும், அனைத்துப்பகுதி மக்களையும் போராட அறைகூவல் விடுக்கும் வகையில் இம்மாநாடு திட்டமிடப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் மத்திய அரசுக்கு ஆதரவான ஆட்சி அமைந்தால் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் எனச் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் செயலில் ஈடுப்பட்டுவருகிறார்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

அமைதியான நம் புதுச்சேரியில் மத வெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்து பிரிவினையை வளர்த்து வருவதோடு மதவெறி, கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுக் களவாணி அரசாகச் செயல்பட்டு புதுச்சேரி மக்கள் நலத்திட்டங்களை முடக்கி, மாநில உரிமைகளைப் பறித்து மின்துறை, கடற்கரை உள்ளீட்ட சுற்றுளா மையங்கள் மற்றும் அரசு சொத்துகளை விற்பது, புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்ற நாசகர திட்டங்களை அமுல்படுத்துவது புதுச்சேரியைச் சோதனை எலியாகப் பாவித்து நயவஞ்சகத் திட்டங்களை பரிசோதனை செய்வது பார்க்கும் செயலில் ஈடுப்பட்டுவருகின்றனர், அனைத்து மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் ஜிப்மர் மருத்துவமனை அழிக்கும் செயலிலும் ஆளும் அரசுகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக நாம் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் நடத்தப்பட இருக்கும் இம்மாநாட்டில் தாங்களும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம் அவசியம் வாருங்கள் ஆதரவு தாருங்கள்.

CPI(M) சிறப்பு மாநாட்டு கோரிக்கைகள்.

  • புதுச்சேரியை ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக மாற்றி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிக்கப்பட்டதை எதிர்த்துப் போராட .
  • 25000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மின்துறை வெறும் 500 கோடியாக மதிப்பைக் குறைத்து 27 கோடிக்கு ஏலம் விட உள்ளதை முறியடிக்க
  • குடிநீரை, அரசு மருத்துவமனையை, அரசு பள்ளிக்கூடங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் தடுத்திட
  • பாரம்பரியமிக்கப் பஞ்சாலைகள், கைத்தறி மற்றும் சர்க்கரை ஆலைகளை இழுத்து மூடியதை எதிர்த்திட, மீண்டும் திறக்கச் சொல்லிப் போராட
  • ரியல் எஸ்டேட் மாபியாக்களாலும், தனியார் நிறுவனங்களாலும் விலை நிலங்கள் சூறையாடப்படுவதைத் தடுத்திட
  • சிறு,குறு தொழிற்சாலைகள் அரசின் ஆதரவு இல்லாமல் மூடப்படுவதைத் தடுத்திட.
  • ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டால் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களைச் செயல்படுத்திட, ஊதியமின்றித் தவிக்கும் பல்லாயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க
  • நகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்கள் கட்டிடங்கள், துறைமுகம், கடற்கரை தனியாருக்கு விற்கும் முயற்சியை முறியடிக்க
  • ஸ்மார்ட் சிட்டிக்காகச் சாலையோர வியாபாரிகள் மீனவர்கள் ,சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தப்படுவதைத் தடுத்த
  • அரசு பள்ளிகள், கல்லூரிகளைத் தரம் இழக்கச் செய்து தனியார் கல்வி நிறுவனங்கள் கொழுக்க ஆட்சியாளர்களே பாடுபட்டு வருவதை அம்பலப்படுத்த
  • முறைசாரா தொழிலாளர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத குறைந்தபட்ச கூலி நிர்ணயத்தை உயர்த்தி வழங்க
  • வீடற்ற ஏழை மக்களுக்குக் குடியிருப்பு மனைபட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட
  • புதுச்சேரி அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட.
  • புதுச்சேரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றிட.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு முடிவு கட்ட.
  • துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்திட.
  • புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்ற நாசகர திட்டங்கள்.
  • 100 நாள் வேலை, முறைசாரா தொழிலாளர்களுக்குக் நலவாரியம் பெற்றிட.

அணிதிரள்வீர்                                                                                                                    ஆதரவு தாரீர்

இப்படிக்கு தோழமையுடன்

 இரா.இராஜாங்கம்,  மாநில செயலாளர், சிபிஐஎம், புதுச்சேரி

template g.ramakrishnan

 

 

 

 

 

 

 

ebration election

Leave a Reply