கந்துவட்டிகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் – சிபிஎம்

புதுச்சேரி,அக்.7-2013
கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெத்துசெட்டிப்பேட்டை கொல்லிமேடு மைதானத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தெசிய நெடுஞ்சாலையில் மதுபானகடைகள் அமைப்பதை புதுச்சேரியில் தடை செய்ய வேண்டும்.லாஸ்பேட்டை சென்பக விநாயகர் கோவில் எதிரில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்த்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரைநகரக்குழு செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் கண்டன உரையாற்றினார். பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன், கமிட்டி உறுப்பினர்கள் குணசேகரன், குப்புசாமி, பாஸ்கர்,சந்துரு, ஜெயலக்ஸ்மி மற்றும் முருகதாஸ் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கந்துவட்டி கொடுமையால் தூக்கில் தொங்கும் அவல நிலை உள்ள மாதிரி காட்சியை பிரதிபலித்தனர்.

Leave a Reply