உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்ட பணிகள் 2014-2017

10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டையொட்டிய ஊர்வலம் பொதுக்கூட்டத்தில் 70பேர் கலந்து கொண்டனர். பாலர்கள் 9 பேர் சீருடையில் வந்தது பாராட்டப்பட்டது.

1. 28-12-2014: பெத்து செட்டிப்பேட்டை, பாரதிநகர் பகுதி மக்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் பெத்துசெட்டிப் பேட்டையில் நடத்தப்ட்டது.

2. 8-01-2015: அசோக்நகர் கிளை சார்பில் அசோக்நகர், அவ்வை நகர், ராஜாஜிநகர் மக்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

3. 12.01.2015: ஸ்தல பிரச்சனைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் சாமிபிள்ளைத் தோட்டத்தில்.

4. 23-01-2015 சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்த போதும், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத BJP மோடி மத்திய அரசைக் கண்டித்து லாஸ்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

5. 13-02-2015 இலவச அரிசிக்குப்பதிலாக ரூ.300/- வங்கிக் கணக்கில் போடுவதைக் கண்டித்து, இலவச அரிசி வழங்கக் கோரி சிவில் சப்ளை அலுவலகம் முன் டவுன் மற்றும் உழவர்கரை கமிட்டி சார்பில் இணைந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

6. 2015 மே 5-16: வரையிலான மக்கள் சந்திப்பு இயக்க துவக்க நிகழ்ச்சி 6-05-2015 அன்று லாஸ்பேட்டையில் விமரிசையாக துவங்கப்பட்டது. மத்தியக் குழு தோழர் K.B. கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

7. 22-11-2015: லாசுப்பேட்டை. காலாப்பட்டு & காமராஜர் நகர் தொகுதிகளின் மநகூ செயல்வீரர்கள் கூட்டம் லாஸ்பேட்டை சிவா விஷ்ணு மகாலில் அடாத மழையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.

8. டிசம்பர் 2015: மழை மற்றும் வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளாக சப்பாத்தி அளித்தல், பிரட் வழங்குதல், போர்வைகள் வழங்குதல் போன்றவை தீஒமு மற்றும் LIC முகவர்கள் சார்பில் சலவையாளர் நகர், மோத்திலால் நகர், ஜீவானந்தபுரம், செண்பகவிநாயகர் கோயில் தெரு, குறிஞ்சிநகர் பகுதிகளில் கட்சி முன்னின்று செய்தது (4.5.8/12/15 தேதிகளில்).இலவச மருத்துவ முகாம் FMRAI மற்றும் தீஒமு சார்பில் 13-12-15 அன்று மடுவுபேட்டில் நடத்தப்பட்டது. 200 பேர் பயன்பெற்றனர். அப்பகுதி மக்கள் பாராட்டினர். மற்ற பகுதியிலும் நம் மதிப்பு உயர்ந்தது.

9. 20-08-2015: அரசியல் விளக்க & நிதியளிப்பு பொதுக்கூட்டம் சாமிபிள்ளைத் தோட்டத்தில் உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் R. ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

10 23.12.2015 BJP மற்றும் RSS-காரர்கள், குளுனி பள்ளிமீது தாக்குதல் நடத்தி மதவெறியை தூண்ட முயற்சித்த போது லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, தாக்கிய BJP & RSS-காரர்கள் மீது FIR போட மற்றும் கைது செய்யக் கோரினோம்.

11. 29-12-2015 அன்று மறுபடியும் மேற்கண்ட பிரச்சனைக்காக லாஸ்பேட்டில் கண்டன தெருமுனை விளக்கக் கூட்டம் நடத்தினோம்.

12. 27-12-2015: பெத்து செட்டிப்பேட்டை வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி அக்கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

13. 16-02-2016: அன்று லாஸ்பேட்டை தொகுதி மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி லாஸ்பேட்டை மெயின்ரோடு செல்லபெருமாள்பேட்டையிலும், 17-02-2016 அன்று காலாப்பட்டு தொகுதி மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி கருவடிக்குப்பம் பாரதிநகர் முனையிலும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.14. 29-03-2016: அரசியல் விளக்க & தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் சாமிப்பிள்ளைத் தோட்டம் கிளைகள் சார்பில் ஜிஞ்சர் ஹோட்டல் அருகில் நடத்தப்பட்டது.

15. 24-06-2016: அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க, அடிப்படை வசதிகள் செய்து தர, ஆசிரியர் பற்றாக்குறை போக்க, பட்ஜெட்டில் 6 சதம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தலைமைச் செயலகம் முன், உழவர்கரை மற்றும் நகரம் இணைந்து நடத்தின.

16. 16-07-2016: மத்திய அரசின் விலைவாசி உயர்வு வேலையின்மைக் கொள்கைகளுக்கு எதிராக 10-07-2016 முதல் 17-07-2016 வரை நாடுதழுவிய எதிர்ப்பு இயக்க நிறைவாக அரசியல் விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம் முத்திரப்பாளையத்தில் நடைபெற்றது. மாநிலக்குழு தோழர் K.பாலபாரதி, Ex. MLA., கலந்து கொண்டு சிறப்பித்தார்.

17.4-08-2016 நம் மேற்க வங்கத் தோழர்கள் மீது திருணாமுல் காங்கிரஸின் பாசிச பாணி வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து லாஸ்பேட்டையில் கண்டன தெருமுனை விளக்க பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

18. 23-08-2016 நாடு முழுக்க அதிகரிக்கும் தலித்துகள் மீதான இந்துத்துவாசக்திகளின் வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து பிச்சவீரன்பேட்டில் வீடுகள் தோரும் மக்களை சந்தித்து நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் மற்றும் ஊர் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

19. 20-09-2016: அன்று பெத்து செட்டிப்பேட்டையில், புதுவை மாநில காங்கிரஸ் அரசின் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டைக் கண்டித்து தெருமுனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

20.25-11-2016: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பைக் கண்டித்து லாஸ்பேட் இந்தியன் வங்கிமுன் கண்டன ஆர்ப்பாட்டம் சக்தியாக நடத்தப்பட்டது.

21. 25.12.2016: 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து பெத்துசெட்டிப்பேட்டையில் தெருமுனை பிரச்சாரம்.

22.23-03-2017: உள்ளுர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சாமிபிள்ளை தோட்டம் கிளைகள் சார்பில் நடத்தப்பட்டது.

23.10.04.2017: கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைத்திடும் வகையில் எதேச்சாதிகாரமாக
செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை பதவி நீக்கம் செய்யக்கோரி கண்டன தெருமுனை
பிரச்சாரக் கூட்டம் கருவடிக்குப்பத்தில் உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்டது.

காங்கிரஸ்காரர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். 30 பேருக்குமேல் கலந்து கொண்டனர்.
நடைபயண பிரச்சாரம் மக்கள் சந்திப்பு- 24.27-04-2017. 28-04-2017, 29-04-2017: 27.04.2017 அன்று சாமிபிள்ளை தோட்டம். கருவடிக்குப்பம் பகுதியிலும், 28.04.2017 அன்று பெத்துசெட்டிப்பேட்டை லாசுப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளிலும் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் 30 பேர் அளவில் கலந்து கொண்டனர். கோஷம் போட்டுக் கொண்டு நோட்டீஸ் விநியோகித்துச் சென்றது மக்களைக் கவர்ந்தது. நிறைவாக தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் முத்திரப்பாளையத்தில் 29.04.2017அன்று நடத்தப்பட்டது.

25.23-05-2017:ரேஷன் கடைகளை மூடுவதைக் கண்டித்தும், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் புதுவை உணவுப் பங்கீட்டுத்துறை முன்பு புதுவை நகரக்கமிட்டி மற்றும் உழவர்கரை நகரக்கமிட்டி இணைந்து பேரணி & காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

26.27-05-2017: காரல் மார்க்ஸ் 200. ரஷ்யப்புரட்சி நூற்றாண்டு, மே தின 131-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ணா நகரில் கலைநிகழ்ச்சி & பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் R. வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

27.28.08.2017: சாமிபிள்ளைத் தோட்டம் உள்ளுர் பிரச்சனைகளை தீர்க்கக் கோரியும்,

லெனின்துரை சம்பந்தமான ஸ்தாபன பிரச்சனைகளுக்காகவும், பொதுமக்களிடம் விளக்குவதற்காகவும் தெருமுனைக் கூட்டம் சாமிப்பிள்ளைத் தோட்டம் தமிழ்ஒளி வீதியில் நடத்தப்பட்டது. தோழர்கள் V.P., R.R., R.N. கலந்து கொண்டனர்.

28.20-09-2017 : தமிழ்ஒளி பிறந்த நாள். பெரியார் பிறந்தநாள், பாரதியார் நினைவுநாள் முப்பெரும் விழா & அரசியல் விளக்க பொதுக்கூட்டம் சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் கிளை மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்டது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரு முதலாளிகள்- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி கட்டாமல் உள்ள பிரச்சனையில் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு நமது பொதுச்செயலர் எழுதிய கடித தமிழாக்க நோட்டீஸ் எல்லா கிளைகளிலும் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது.

ரூபாய் நோட்டு செல்லாது பிரச்சனை பிரசுரமும் உழவர் சந்தையிலும் வீடுகளிலும் இயக்கமாக விற்கப்பட்டது. பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்த நோட்டீஸ் வீடுகளில் விநியோகம் செய்யப்பட்டது.

அரசு பள்ளிகள் தரம் உயர்த்த ஆலோசனைகள் கூற நேரடியாக பல பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டோம். லாஸ்பேட் மருத்துவ மனைக்கு நேரில் சென்று மக்கள் மற்றும்
ஊழியர்களிடம் கேட்டறிந்து கோரிக்கைகளை உருவாக்கி இயக்கம் நடத்தப்பட்டது.

Leave a Reply