பாசிச சக்திகளின் தாக்குதலுக்கு அடிபணியாத ‘தேசர் கதா’ நாளிதழ்

2023 ஆகஸ்ட்15 அன்று திரிபுராவிலிருந்து வெளிவரும் டெய்லி தேசர்கதா நாளிதழின் 45ஆவது துவக்க தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.  பொதுவாக அனைத்து ஊடகங்களும் பெரும் கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மக்களின் குரல் அவற்றில் எதிரொலிப்பது மிகவும் அரிதிலும் அரிதாக இருக் கக்கூடிய சூழ்நிலையில், டெய்லி தேசர் கதாவின் ஒளி மயமான சாதனை மற்றும் பயணம் முற்போக்காளர்க ளுக்கு நிச்சயமாக ஊக்கத்தைக் கொடுத்திடும்.

அப்படி ஒன்றும் எளிதில்லை

வங்க மொழியில் வெளிவரும் இந்நாளேடு முதன் முதலாக 1979 ஆகஸ்ட் 15 அன்று வெளிவரத் தொடங்கி யது. இதன் பயணம் இதுவரையிலும் அப்படி ஒன்றும் எளி தாக இருந்திடவில்லை. பல சமயங்களில் பல்வேறுவித மான முட்டுக்கட்டைகள். 2018 மார்ச் 3 அன்று பாஜக- ஐபிஎப்டி கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வென்ற பின்னர், ஆளும் கட்சியினரால் அமர்த்தப்பட்ட சமூக விரோத கும்பல்களால் நாளேட்டின் மீது கடும் தாக்கு தல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. நாளேட்டின் நிருபர்கள், ஊழியர்கள், அவற்றை விநியோகம் செய்வோர் மற்றும் வாசகர்கள்கூட பல சமயங்களில் கடும் தாக்குதல்களுக்கு ஆளானார்கள். பல சமயங்களில் டெய்லி தேசர் கதாவை எடுத்துச் சென்ற வாகனங்களிலிருந்து அவற்றைப் பறித்து, எரித்து, அழித்த சம்பவங்களும் உண்டு. இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலமுறை முறையீடுகள் அளித்தபோதும், மாநில நிர்வாகமும், காவல்துறையும் அவற்றைக் கண்டுகொண்டதே கிடையாது.   நாளேடு சுமூகமாகச் சுற்றுக்கு விடப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட காவல்துறைத் தலைவருக்கும் தலைமைச் செயலாளருக் கும் இந்தியப் பிரஸ் கவுன்சில் கூட அறிவுறுத்தல்கள் அனுப்பியிருந்தது.

நீண்ட சட்டப் போராட்டம்

2018இல் டெய்லி தேசர்கதா ஆட்சியாளர்களால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டு, அதன் குரல்வளை வலுக்கட்டாயமாக நெரிக்கப்பட்டது. பின்னர், நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தின் விளைவாக உயர்நீதி மன்றம், மாநில நிர்வாகத்தின் நடவடிக்கைகளைச் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, நாளேடு வெற்றிகரமாக மீண்டும் வெளிவரத் தொடங்கியது.   இவ்வாறு அனைத்துத் தாக்குதல்களையும், டெய்லி தேசர் கதா, உறுதியுடன் எதிர்கொண்டு, எந்தச் சூழ்நிலை யிலும் வளைந்து கொடுக்காமல் முறியடித்தது. மக்களின் நலன்களைப் பேண வேண்டும் என்ற உறுதியுடன் இந்த செய்தித்தாள் நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. டெய்லி தேசர்கதாவின் அமைப்புதினத்தைக் கொண் டாடும் விதத்தில் பானு கோஷ் மெமோரியல் ஹாலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளாக பொது மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதா கும். கூடம், மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது. வந்திருந்த வர்களில் பலருக்கு அமர இடம் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் கூடத்திற்கு வெளியே நின்று தலைவர்களின் பேச்சுக்களை செவிமடுத்தார்கள்.

பாஜக அரசின் அராஜகம்

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், முன்னாள் எம்.பி. ஜிதேந்திர சௌத்ரி மற்றும் பலர் உரை யாற்றினார்கள். கூட்டத்திற்கு டெய்லி தேசர் கதா அறக் கட்டளை தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாரா யண் கார் தலைமை வகித்தார். நாளேட்டின் ஆசிரியர் சமிர் பால் இவ்விழாவில்  உரை நிகழ்த்தினார். பேசிய அனை வரும் நாளேட்டின் நீண்ட பயணத்தின் போது மேற்கொள் ளப்பட்ட போராட்டங்களை நினைவுகூர்ந்தனர். பேசியவர் கள் இப்போது பாசிச பாஜக அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களையும் குறிப்பிட்டார்கள். மாணிக் சர்க்கார் பேசும்போது, மக்களின் எதிரிக ளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பைக் கட்டி எழுப்பிட நாளேடு துணிச்சலுடன் பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 1988-1993 ஆண்டுகளில், காங்கி ரஸ்-டியுஜேஎஸ் ஆட்சிக் காலத்தில், நாளேடு எதிர் கொண்ட தாக்குதல்களை நினைவுகூர்ந்தார். ஆரம்பத் தில் தேசர் கதா, வார ஏடாகத்தான் வெளிவந்தது. இதன் முந்தைய பெயர்  தேசர் தாக் (Desger Daak) என்பதா கும். பின்னர் 1979 ஆகஸ்ட் 15 அன்று தேசர் கதா வார ஏடு  நாளேடாக மலர்ந்தது.  மக்களின் நலன்களைப் பேணுவ தற்காக நாளேடு எதிர்கொண்ட பல்வேறு சிரமங்களை மாணிக் சர்க்கார் குறிப்பிட்டார்.

சாதி, மத, இன பிளவுகளை உருவாக்குகிறார்கள்

அடுத்து இப்போது நாடு உள்ள நிலை குறித்தும் மாணிக் சர்க்கார் குறிப்பிட்டார். கார்ப்பரேட்டுகள் மற்றும் மதவெறி சக்திகள் கைகோர்த்துக் கொண்டு நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட் டார். ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே யான இடைவெளி மிகவும் மோசமான முறையில் அதி கரித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆட்சி யாளர்கள் மக்களை மதத்தின் அடிப்படையிலும், சாதி யின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் பிளவுபடுத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். அவர்களின் நோக்கம் தெளிவு. மக்கள் தங்கள் வறுமைக்கான உண்மையான காரணத்தை எக் காரணம் கொண்டும் தெரிந்துகொள்ளக்கூடாது என்ப தேயாகும். அவ்வாறு தெரிந்துகொண்டுவிட்டால் பின்னர் அவர்கள் மதவெறி சக்திகளுக்கு எதிராகவும், பிளவுவாத சக்திகளுக்கு எதிராகவும் சுரண்டலாளர்களுக்கு எதிரா கவும் ஒன்றுபட்டு அணிதிரண்டுவிடுவார்கள் என்பதற்கா கவே அவர்கள் மத்தியில் பிரிவினை உணர்வை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.   ஒன்றிய அரசாங்கம் மற்றும் திரிபுரா பாஜக அரசாங் கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்க ளைக் கிளர்ந்தெழச்செய்திட டெய்லி தேசர் கதா மக்கள் மத்தியில் உத்வேகத்தை உருவாக்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்களின் குரலை  ஓங்கி ஒலித்திடும்

ஜிதேந்திர சௌத்ரி உரையாற்றுகையில், டெய்லி தேசர் கதா அடிப்படையில் மற்ற பத்திரிகைகளிலிருந்து மாறுபட்டது என்றார். மற்ற பத்திரிகைகள் அனைத்தும் பிற்போக்கு சக்திகளால் நடத்தப்படுபவை. டெய்லி தேசர் கதா மக்களின் குரலை ஓங்கி ஒலித்து உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாகத்தான், இப்போ தும்  டெய்லி தேசர் கதா தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டு வருகிறது. ஆயினும் அனைத்துவிதமான தாக்குதல்களையும் முறியடித்து, நாள்தோறும் தொழிலாளர்கள், விவசாயி கள், விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை யும் போராட்ட வடிவங்களையும் விடுத்து, வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போதைய அரசாங்கம் இவ்விதழு க்கு எண்ணற்ற தடைகளை ஏற்படுத்திட முயற்சித்தது. விளம்பரங்கள் அளிப்பதை நிறுத்தியது. இதன் நிருபர் கள், பத்திரிகையை விநியோகிப்பவர்கள், ஊழியர்கள், வாசகர்கள் என அனைவரையும் துன்புறுத்தியது, தாக்கி யது என்று குறிப்பிட்டார்.   டெய்லி தேசர் கதாவின் ஆசிரியர், சமீர் பால், மிகவும் தெளிவான வார்த்தைகளில், நாளேடு எந்தச் சமயத்தி லும் பாசிச சக்திகள் எவ்வகையிலான தாக்குதலைத் தொடுத்தாலும், அவற்றுக்கு அடிபணியாது என்றார்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி,
– அருப்ரதன் ஷர்மா தமிழில்: ச.வீரமணி

Leave a Reply