புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் பழைய இட ஒதுக்கீட்டு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் – சிபிஎம்

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் பழைய இட ஒதுக்கீட்டு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான EWS இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமுல்படுத்த கூடாது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10501 அரசு பணிகள் காலியாக உள்ளன. நடப்பு நிதியாண்டிற்குள் கணிசமான அரசு ஊழியர்கள் ஓய்வு வரும் நிலையும் உள்ளது.

இந்தப் பின்னணியில் 1060 அரசு பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது நியாயமற்றது.

என்றாலும் நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங்களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசு 50% வரையில்தான் இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டு மென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, புதுச்சேரியில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை புதுச்சேரி அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கோரிக்கையை நடைமுறைப்படுத்த ஆளும் பிஜேபி என்.ஆர்.காங்கிரஸ் அரசும் மத்திய மக்கள் விரோத பிஜேபி அரசும் முன்வரவில்லை.

பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு புதுச்சேரிக்குப் பொருந்தாது. ஏனெனில் இது தொடர்பாக நீங்கள் நிர்ணயித்திருக்கும் அளவுகோல் புதுச்சேரிக்குப் பொருந்தாது.

ஆகவே புதுச்சேரி மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய சமூகத்திற்கான இட ஒது க்கீட்டு அறிவிப்பை அதுவரை ரத்து செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
இரா.ராஜாங்கம்,
செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
புதுச்சேரி.

Leave a Reply