மின்கட்டண  உயர்வை கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் ஆவேச போராட்டம்

ஒன்றிய அரசின் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில், ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய மின் கட்டண உயர்வை புதுச்சேரியில் அறிவித்துள்ளது.

அதில் 1 முதல் 100 யூனிட் வரை ரூ.155 லிருந்து ரூ.1.90 என்றும், 101-முதல் 200 யூனிட் வரை ரூ.260லிருந்து 2.90 எனவும், 201- முதல் 300 யூனிட் ரூ.4.65 லிருந்து ரூ.5-00 எனவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ரூ.6.05-லிருந்து ரூ.6.45 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டு இணைப்புக்கு நிரந்தர கட்டணமாக, உபயோகிக்கும் அத்தனை கிலோ வாட் மின் சாரத்திற்கும், மொத்தமாக மாதம் ரூ.45 என்று இருந்ததை, ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் தனித்தனியாக மாதம் ஒன்றுக்கு ரூ.30 என நினைத்து பார்க்க முடியாத அளவில் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலைகளை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக அரசு, தற்போது மின்சாரா கட்டணமும் உயர்த்தியிருப்பதற்கு அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றது.

பாகூர்

பாகூர் மேற்குவீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலாளர் பி.சரவணன் தலைமை தாங்கினார். முன்னால் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் கண்டன உரையாற்றினார். கொம்யூன்குழு உறுப்பினர்கள் கலியன், கலைச்செல்வன், வடிவேலு, சேகர், அரிதாஸ், கௌசிகன், கிளை செயலாளர்கள் முருகையன், வெங்கடாசலம், வளர்மதி உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக  தொலைக்காட்சிப்பெட்டி

ஒன்றிய அரசின் அன்றாட நிகழ்ச்சி நிரலாக மாறிவிட்டது.

கடந்த 13 நாட்களில் 11முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது .சமையல் எரிவாயு விலையும் , டோல்கேட் கட்டண உயர்வும்  சாமானிய ,நடுத்தர மக்களை மேலும்தாக்குகிறது.  இதன் விளைவாக அனைத்து வகையான உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு 850 வகையான உயிர்காக்கும் மருந்துகள் விலைகளும் 11 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் போன்று வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டிய   மருந்து, மாத்திரைகளின் விலையும் மிகமோசமாக உயர்த்தப்பட்டுள்ளது. புற்றுநோய் தடுப்பூ ஊசி விலை 4 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதோடு சுங்க கட்டணம் ரூபாய் 5 முதல் 120 வரை உயர்த்தப்பட்டுள்ளது.   இதனாலும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட வழிவகுக்கிறது. சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கனவே நலிவடைந்து தள்ளாடும்  அரசு  பேருந்துகள் மேலும் நலிவடையும் நிலை ஏற்படுவதோடு இதனைக் காரணம் காட்டி பஸ் கட்டணம் உயர்த்தவும்  வாய்ப்பு உள்ளது.

தேசத்தின் வளங்கள், சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விட்டு அவற்றை ஈடுகட்ட நடுத்தர சாமானிய மக்கள் மீது விலை உயர்வு உள்ளிட்ட  பல்வேறு வகைகளில் மக்களை கசக்கிப் பிழிகிறது ஒன்றிய பாஜக அரசு.

புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசும் இதே  பானியில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

தற்போது மின்கட்டண உயர்வை மக்கள் மீது திணித்து உள்ளது. மத்தியிலும் ,மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் ஏராளமான நிதி புதுச்சேரிக்கு கிடைக்கும், வேலைவாய்ப்பு உருவாகும், விலைவாசி குறைக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பாஜக -என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு மக்கள் மீது பலமுனை தாக்குதலை தொடுத்துள்ளது. ஏற்கனவே கரோனாவால் வேலை இழந்து, வருவாய் இழந்து, தொழில் நசிந்து,  பாதிப்புக்குள்ளான மக்கள் மீது இந்த விலைவாசி உயர்வுகள் பேரிடியாய் இறங்குகிறது.

ஒன்றிய மோடி அரசு  வகுப்புக் கலவரங்கள், சாதி மத மோதல்களை உருவாக்கி மக்களின் கவனத்தை திருப்பி அரசியல் ஆதாயம் அடைகிறது. இதனை முறியடித்து  சாதி, மதம் கடந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதன் மூலம் நாட்டையும் மக்களையும் பாதுகாத்திட முடியும் ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாகும் ஒன்றிய, மாநில ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க புதுச்சேரி மக்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply