
புதுச்சேரி உப்பளம் தலைமை மின் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் இரா. இராஜாங்கம் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் பெருமாள், மின்துறை ஊழியர்களின் போராட்டக் குழு ஆலோசகர் ராமசாமி ஆகியோர் போராடும் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினார்கள். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கலியமூர்த்தி, சீனிவாசன், நகர செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி, பிரதேச குழு உறுப்பினர்கள் சங்கர், ரமேஷ் உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக உப்பளம் தண்ணீர் தொட்டி எதிரில் இருந்து ஊர்வலமாக சென்று, மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக கோரிக்கை முழக்கமிட்டனர்.