பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்

புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சியர் ஆட்சிக்கு உட்படுதல் (புதுச்சேரி)

puducherryமுதன் முதலாக கி.பி.1601ல் செயின்ட் மாலோ எனும் பிரெஞ்சு நிறுவனத்தார் பிரான்சுவா பிராபரீட் தெலாவில், பிரான்சுவா, மர்த்தேன் ஆகிய இரண்டு-கப்பல்களை வணிகம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயி, அவரது அமைச்சர் கொல்பெர் ஆகிய இவர்களின் கூட்டு முயற்சி யால் பிரெஞ்சிந்திய வணிக நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் மடகாஸ்கரில் தங்கள் குடியேற்றத்தை. நிலைநிறுத்திக் கொண்ட பிரெஞ்சியர் இந்தியாவின் பக்கம் தமது பார்வையைத் திருப்பினர். 1672 ஜூலை 25ம் நாள் பிராள்க தளபதி பிளான்கெ தெலாஹாயே என்பவர் சென்னை சாந்தோமைக் கைப்பற்றினார். இதைத் கேள்வி யுற்ற ஹைதராபாத் நிஜாமின் செஞ்சிப் பிரதிநிதியாக நாசிர் முகமதுகான் பிரெஞ்சிந்திய நிறுவனத்தைத் தம்மிடம் வந்து பணியாற்றுமாறு கூறினார். இதை ஏற்றுக்கொண்ட ஹாயே தனது உதவியாளர் பெல்லான்தெ-லெஸ்பினே என்ப வரைப் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார். லெஸ்பினே, நாசிர் முகமதுகான் உதவியாளராகிய ஷெர்கான் லோடியைச் (வலிகொண்டபுரம் ஆளுநர்) சந்தித்து பிரெஞ்சிந்திய வணிக நிறுவனத்திற்காக 1673 பிப்ரவரி மாதம் நான்காம் நாள் புதுச்சேரியைப் பெற்றார். பிரெஞ்சிந்திய பகுதியாக மாறிய புதுச்சேரியின் முதல் ஆளுநராகவும், பிரெஞ்சு நாட்டின் பிரதிநிதியாகவும் பிரான்சுவா மர்த்தேன் என்வர் 1675 மே மாதம் 14ம் நாள் புதுச்சேரியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காரைக்கால் (தமிழ்நாடு)
நாயக்கர் பரம்பரையில் வந்த ரகுநாத நாயக்கர் என்பவர் (1597-1640) தஞ்சைப் பகுதியைத் தன்னாட்சியின் கீழ்க் கொண்டு வந்தார். 1622ல் காரைக்காலில் வணிக நிறுவனம் ஒன்றை அமைத்துக் கொள்ள ஆங்கிலேயர் நாயக்கரிடம் அனுமதி கேட்டனர். அதற்கு நாயக்கர் ஒரு பெருந்தொகையைக் கேட்டார். இதைத் தர மனமில்லாத ஆங்கிலேயர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர். காரைக்கால் 1674 முதல் 1676 வரை டச்சுக்காரர் வசமிருந் தது. பின்னர், 1688 டிசம்பரில் பிரான்சுவாமர்த்தேன் தனது முயற்சியால் பிரெஞ்சிந்திய வணிக நிறுவனத்தை ஏற் படுத்திக் கொண்டார். ஆனால் 1689 ஜூன் மாதத்தில் டச்சுக்காரர்கள் சூழ்ச்சி செய்து அந்நிறுவனத்தை மூடிவிட்ட டனர். பிரெஞ்சியர் 1739ல் மீண்டும் காரைக்காலைக் கைப்பற்றினர். துய்மா என்பவர் 1739 பிப்ரவரி 14ம் நாள் காரைக்காலில் பிரெஞ்சுக் கொடியை ஏற்றினார். கர்நாடகப் போரின் விளைவாக மீண்டும் காரைக்கால் 1760ல் ஆங்கி லேயரால் கைப்பற்றப்பட்டு பிறகு பாரிசு உடன்படிக்கை 1763ல் ஏற்பட்ட பின் பிரெஞ்சியர்க்கு காரைக்கால் மீண்டும் உரிமையாகியது. ஆனால் 1788ல் ஆங்கிலேயர் மீண்டும் காரைக்காலைக் கைப்பற்றினர். இவ்வாறு மாறி மாறி ஆங்கிலேயரிடமும் பிரெஞ்சியரிடமும் இருந்த காரைக்கால் இறுதியாக 1815ல் பிரெஞ்சியர் வசம் வந்தது. பிரெஞ்சியச் காரைக்காயை விட்டு வெளியேறும் வரை அவர்கள் வசமே
மாகி (கேரளா)
மாகி ஆற்றுக்குக் குறுக்கே ஓர் அணையைக் கட்டிக் கொள்ள கி.பி.1721ல் ஆந்திரே மொல்லாந்தின் எனும் பிரெஞ்சுக்காரர் படகரா பகுதியை ஆண்டு வந்த பையானூர் என்ற மன்னரிடம் அனுமதி கேட்டார். 17243 கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆங்கி லேயர் பிரெஞ்சியரை மாகியை விட்டு விரட்ட முனைந்தனர். 1725ல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஆறு கப்பல்களில் இருந்த பிரெஞ்சுப்படை வீரர்கள் மாகியை முற்றுகையிட்டு மாகி இலபூர்தொனே தலைமையில் மாகியை மீட்டனர். மய்யிலக் கரை என்று அழைக்கப்பட்ட இந்தவூர் பின்வீர் மய்யழி என்று மருவியது. பின்னர் 1761ல் மாகியை ஆங்கி லேயர் கைப்பற்றினர். 1763ல் பாரிசு உடன்படிகைப்படி மீண்டும் மாகி பிரெஞ்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது, ஐரோப்பிய போர் ஏற்பட்டபோது மீண்டும் ஆங்கிலேயர் மாகியைக் கைப்பற்றினர். இறுதியாக 1817 பிரெஞ்சியர் மாகியைக் கைப்பற்றினர். பின்னர் விடுதலைப் பெறும் வரை மாகி பிரெஞ்சியர் வசமே இருந்தது.
ஏனாம் (ஆந்திரா)
கி.பி.1723ல் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் தனது வணிக அமைப்பை ஏனாமில் நிறுவியது. எதிர்பார்த்த அளவு பலனைப் பெற முடியாத காரணத்தால் பிரெஞ்சியர் ஏனாமை விட்டு நீங்கினர். மீண்டும் பிரெஞ்சிந்திய ஆளுநர் தூயிப்ளே தன்னுடைய முயற்சியால் 1731ல் ஏனா மில் பிரெஞ்சிந்திய வணிக நிறுவனத்தை ஏற்படுத்தினார். நிஜஎம் முசாபர் ஜங்கு என்பவர் கி.பி.1750ல் ஹைதராபாத் ஏனாம் பகுதியின் ஆட்சி உரிமையைப் பிரெஞ்சுக்காரர் களுக்கே வழங்கினார். பின்னர் கி.பி. 1753 முதல் 1765 வரை ஏனாம் ஆங்கிலேயர் வசம் இருந்தது. 1755ல் ஆங்கி லேயருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கபுல பாலம், ஏனாம் போன்ற கிராமங்களைப் பிரெஞ்சு ஆணையர் பேளன் என்பவர் ஜீன் ஒயிட் ஹில், ஜார்ஜ் டாலிபன் என்போரிடமிருந்து பெற்றுக் கொண்டார். மீண்டும் ஆங்கிலேயரிடம் ஏனாமை இழந்துவிட்ட பிரெஞ் சிவர் 1783 ஜூலையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண் டனர். பின்னர் 1785ல் பார்ச்சு மாதம் பிரெஞ்சியர் ஆங்கி லேயரிடமிருந்து ஏனாமை மீண்டும் பெற்றனர். பிரெஞ்சுப் பிரதிநிதி மார்டின் என்பவர் ஏனாமை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றார். பின்னர் விடுதலை பெறும் வரை ஏனாம் பிரெஞ்சியர் லாமே இருந்தது.
கி.பி.1787 பிப்ரவரியில் காஸ்திரி என்பவர் தெரிவித்த ஆயோசனையின்படி புதுச் காரைக்கால், மாகி, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய ஐந்து பகுதிகளும் பிரெஞ்சு அரசரின் ஆட்சிக்குட்பட்டன. எனைய பிரெஞ்சிந்தியப் பகுதிகள் வணிக நிறுவனத்தின் புதிய காலளிகளாக அமைக்கப்பட்டன. பிரான்சிலிருந்து வரும் எல்லாச் செய்திகளும் முதலில் புதுச்சேரிக்கே வரும். புதுச்சேரி ஆளுநரே அச்செய்திகளை ஏனைய பிரெஞ் சிந்திய நிர்வாகிகளுக்குத் தெரிவிப்பார்.

பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம்
– விவசாயக் கிளர்ச்சி

அடிமைத்தளையை உடைத்தெறிய உலகில் ஏற்பட்ட விடுதலைப் போராட்டங்களைப் போன்றதுதான் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம். இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திற்கான தொடக்கம் 1787லேயே தொடங்கிவிட்டது. ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு அவர்களின் அனுமதி பெற்று பின்னர் விவசாயிகளிடம் தங்கள் விருப்பம்போல் நிலவரி வசூலிக்க முயன்ற குத்தகைதாரர்களுக்கு எதிராக 1787ல் ஏற்பட்ட காரைக்கால் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டம் நிலவரி வசூலிப்பவர்களுக்கும் அதை செலுத்து பவர்களுக்கும் இடையே ஒரு சாதாரணமான போராட்ட மாக எண்ணி ஒதுக்கிவிட முடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1857ல் நடந்த சிப்பாய் கலகம் போன்றே இப்போராட்டத்தைக் கருதலாம். எனவே பிரெஞ்சிந்திய விடுதலைக்கான போராட்டம் 1787லேயே தொடங்கி விட்டது தெளிவாகிறது. மீண்டும் 1791ல் காரைக்கால் விவசாயிகள் நிலவரி வசூலிப்பவர்களுக்கு எதிராகச் சினந்தெழுந்தார்கள். இந்தப் போராட்டத்தில் காவல் வீரர் களும் சுங்கவரி வசூலிக்கும் ஊழியர்களும் விவசாயி களுடன் சேர்ந்து கொண்டார்கள். இந்தப் போராட்டம் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. இப்போராட்டத்தை அடக்க புதுச்சேரியின் ஆளுநர் ஒரு படைத் தலைவரின் கீழ் 100 போர் வீரர்களை அனுப்ப வேண்டியதாயிற்று. பற்ற பிரெஞ்சிந்தியப் பகுதிகளைப் போல அல்லாமல் காரைக்காலின் விவசாயப் பெருமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் மனத்தின் அடித்தளத்தில் அழுந்திக்கிடந்த அந்நியர் ஆட்சியின் எதிர்ப்புக் குமுறலை வெளிப்படுத்தினர். எனவே பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தொடக்க இடமாகக் காரைக்காலைக் கருதலாம்.

இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லாத பிரெஞ்சுப் பிரதிநிதிகள் பொதுச்சபை
பிரெஞ்சிந்தியப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பிரெஞ்சுப் பிரதிநிதிகள் பொதுச்சபை குடிமக்களின் படை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தினர். ஆனால் இவற்றில் பிரெஞ் சிந்தியருக்குப் பிரதிநிதித்துவம் தரப்படவே இல்லை. 1790ல் புதுவை நகராட்சி சபை அமைக்கப்பட்டு அதன் நிர்வா கத்தைத் திறமையான முறையில் நடத்திட தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளும் அதிகாரம் பிரெஞ்சியர் களுக்கே வழங்கிவிட்டது. இதில், இந்தியர் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்தியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விருமபி தெரிவித்த பிரேக்கர்கள் விரும்பத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பிரெஞ்சிந்தியாவில் தஞ்சம் புகுந்த

இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்கள்
1908ல் புதுச்சேரிக்கு எந்த சுப்பிரமணி 12 வங்காளத்திலிருந்து வந்த அளித்த கோஷ், வலேகஜா தமிழறிஞர் வரா. போன்றோர் புதுச்சேரியில் நஞ்சம் புகுந்தனர். பிரெஞ்சிந்திய பண்ணில் தஞ்சம் புகுந்த இவர்கள் அப்போதைய சூழலில் பிரெஞ்சு ஆதிக்கத்தை வெளிப்படையாக எதிர்க்க இயலவில்லை இவர்களுக், ஆங்கிலேயர் அடிக்கடிபிரெஞ்சிந்தியத் தலைவர்கள் மூலம் தொல்லை கொடுத்து வந்தனர். பிரெஞ்சிந்தியர்களின் மளத்தில் தேசபக்தி குடிகொள்ளத் தொடங்கிவிட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியை இந்தியாவில் ஏனைய பகுதியினர் வெறுத்தது போல் பிரெஞ்சு ஆட்சியையும் பிரெஞ்சிந்தியர் வெறுக்கத் தொடங்கினர், இந்திய மண்ணில் வாழும் எல்லோரும் ஒன்றுகூடி ஒற்றுமைலாய் விடுதலைப் பெற்று வாழ வேண்டும் என்ற எண்ணம் பிரெஞ்சிந்தியரின் மனத்தில் இடம் பெற்றது. இந்த எண் ணத்தின் அடிப்படையில் இந்திய சுதந்திரப் போராட் டத்திற்கு உதவியாக பிரெஞ்சிந்தியர்கள் சிறப்பான பணி கனை பணியாற்றி இருக்கிறார்கள் குறிப்பிட்டுக் கூறினால் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்ட பாட்சிகாரன நூல்களையும், பத்திரிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வர புதுச்சேரி வாழ் பிரெஞ் சிந்திய மக்கள் பெரும் உதவி செய்தனர். பாரதியாரின் ‘இந்தியர் 1908ம் ஆண்டில் திருஇலட்சுமி நாராயண ஆயம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு பாரதியால் புதுசசேரி யிலிருந்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாஜன சபையின் தோற்றம் இந்தச் சூழலில் இந்தியாவின் மற்று பகுதிகளில் தேசிய மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்டுப் பரவிக் கொண் டிருந்த ‘மகாஜன சபை என்ற அரசியல் அமைப்பு 1937ல் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. புதுச்சேரியைச் சேர்ந்து மரிசவுரி, துரைராஜ், ஆர்.எல்.புருஷோத்தம் ரெட்டியார் முதலானோர் புதுச்சேரியில் இந்த அமைப்பைத் தொடப்பட்ட, காரணமாக இருந்தார்கள். காரைக்கால் கிளையை சு.அரங்கசாமி நாயக்கர், சவரிப்பிள்ளை, வையான் தெ.பழனூர் போன்றோர் தொடங்கினர். மாகியில் திரு ஐ.சுே.குமரன் தலைமையில் இந்தக் கிளை தோன்றியது

புதுச்சேரி மகாஜன சபையினர் நியாயமாக நடக்காத தேர்தலில் பிரெஞ்சிந்திய ஆளுநர்கள் பெற்றிருந்த எல்லையற்ற அதிகாரத்தைக் குறைக்க வேண்டுமென்றும் இரண்டு பட்டியல் வாக்கு முறையை நீக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் நியாயமான முறையிலும் நேர்மையான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்தனர். இதனால் மகாஜன சபையினர் பிரெஞ்சிந்திய ரகாதிபத்திய ஆதரவாளர்களின் பகையைத் தேடிச் கொண்டனர். தேர்தலில் போட்டியிட்ட மகாஜன சபையினர் வெற்றி பெற்ற போதும் அந்த வெற்றியைப் பிரெஞ்சிந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தத் தேர்தலில் பிரென்சிந்திய அரசுக்கு பக்கபலமாக விளங்கிய பிராங்கோ இந்த கட்சியினரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் ஊழமைத் தாங்கிக்கெள்ள முடியாத பிரெஞ்சிந்திய மக்கள் பிரெஞ்சிந்திய நிர்வாகத்திற் ஒத்துழைக்க மறுத்தனர். பிரெஞ்சிந்திய நிர்வாகம் அனைத்தையும் (காவல், நீதிமன்றம், நகராட்சி போன்றவை) செயலிழக்க வைக்க முடிவு எடுத்த மக்கள் பிரெஞ்சிந்திய அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை ஏற்படுத்திச் செயல்ப்ட முனைந்தனர். இதில் பிரெஞ்சிந்திய அரசுக்குப் பக்க பலமாக விளங்கியவர்கள் தாவிது மற்றும் செல்வராஜ் செட்டியார் என்போர். இவர்கள் பிரெஞ்சிந்திய மக்களுக்குச் செய்த கொடுமைகள்: பலப்பல. இந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்த ராமையா எனும் மில் தொழிலாளி 1938 டிசம்பர் 15ஆம் நாள் செல்வராஜ் செட்டியாரை பிரெஞ்சிந்திய நிர்வாக அலுவலகத்திலேயே சுட்டுக் கொன்றார். உடனே அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக் கொண்டார்.

பேச்சு வார்த்தை தோல்வி

1954 ஜூன் மாதம் புதுச்சேரி நிலை குறித்து இந்தியா-பிரான்சுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகள் வெற்றியடையவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரெஞ்சு அரசு தனது இராணுவத்தை புதுச்சேரிக்கு அனுப்பியது. பின்னர் பிரான்சின் பிரதமர் மெனாழ்: பிரான்ஸ் என்பவரின் மதிநுட்பமான அணுகு முறையாலும் இந்திய பிரெஞ்சு நாடுகளின் கூட்டு முயற்சியாலும் 1954 அக்டோபர் 13ஆம் நாள் பிரெஞ்சிந்திய இணைப்பை பிரெஞ்சு அரசு ஏற்றுக் கொண்டது.

கீழுர் வாக்கெடுப்பு

1954 அக்டோபர் 18ஆம் நாள் காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதி சபை கீழுரில் ஒன்று கூடி புதுச்சேரி இணைப்பு பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் வாக்கெடுப்பு நடை பெற்றது. சபையின் மொத்த எண்ணிக்கையான 178 பேரில் 170 பேர் ஆதரவாகவும் 7 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். 1954 அக்டோபர் 21ஆம் நாள் புதுடில்லியில் இந்தியஅவர்களது ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது என்பதில் பிரெஞ்சு பிரதிநிதிகள் கூடி இணைப்பபுத் தீர்மான ஒப்பந்தம் இயற்றினர்.

புதுச்சேரி இந்தியாவுடன் இணைப்பு

1954 நவம்பர் முதல் நாள் பிரெஞ்சு பிரதிநிதி பியேர்லேந்தியும் இந்தியப் பிரதிநிதி கேவல்சிங்கும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அன்று முதல் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளும் இந்தியாவுடன் இணைந்தன. அன்றே கேவல் சிங் புதுச்சேரியின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட் டார். புதுச்சேரியை அதிகாரபூர்வமாக இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தம் உருவானது. 1958 மே 28ம் நாள் புதுடில்லியில் இந்திய நாட்டின் சார்பில் நேருவும் பிரெஞ்சு நாட்டின் சார்பில் கவுண்ட் ஓஸ்ட் தோரோக் ஒப்படைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இந்த உடன்படிக் கையானது 1962 ஆகஸ்ட் 16 ஆம் நாள் பிரான்சும் இந்தியாவும் உறுதி செய்த ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டன. இதன்படி புதுச்சேரியின் முழுமையான ஆட்சிப் பொறுப்பை பிரான்சு இந்தியாவிடம் ஒப்படைத்தது. 1787ல் தொடங்கி 1954 வரை 167 ஆண்டுகள்

நடைபெற்ற பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம் பிரெஞ்சிந்திய மக்களின் விடுதலை வேட்கையையும்,  விடுதலைப் போராட்ட உணர்வையும் தெளிவாக எடுத்தும் கூறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற இந்திய மக்கள் செய்தபோராட்டங்களும் தியாகங்களும் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் இடம் பெற்றிருந்தன. இன்னும் கூறப்போனால் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது எனலாம். பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலையர்களும் தொண்டர்களும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்திருக்கிறார்கள். “புதுச்சேரி இந்தியாவின் சிறிய பகுதியாக இருந்தாலும் அது இப்போது நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள் மூலம் சுமூகமான முறையில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதன் அடையாளச் சின்னமாக விளங்குகிறது என்று பண்டித நேரு கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தின் போது சுற்றியிருந்த இந்திய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்திற்குத் தேவைப்பட்டபோதெல்லாம் உதவியான மனமுவந்து செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் புகலிடங்களாகவும் ஏனைய இந்தியப் பகுதிகள் விளங்கியிருக் கின்றன.

பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டத்தில் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்தி கத்தியின்றி சத்தமின்றி புதுச்சேரிக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது இந்தியப் பிரதமர் நேருவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாம். பிரெஞ் சிந்திய விடுதலைப் போராட்டத்தின் போது பிரெஞ்சிந் தியாவின் முதலும் கடைசியுமாக இந்தியனே என்று கூறிப் பிரெஞ்சிந்தியத் தலைவர்கள் தங்கள் போராட்டம், பிரெஞ்சு நாட்டுக்கும், மக்களுக்கும், மொழிக்கும் எதிரானதல்ல. தெளிவுடன் இருந்தார்கள். பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களும் சரி, அதற்கு உறு துணையாய் இருந்த இந்திய அரசு மக்களும் சரி, பிரான்சு கலாச்சாரத்தின் மீதும் பிரெஞ்சு மொழி மீதும் பிரெஞ்சு மீதும் மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்கள்! இன்றும், கொண்டிருக்கிறார்கள். எனவேதான் புதுச்சேரி இன்னும் பிரெஞ்சு மொழி மற்றும் பிரெஞ்சு கலாச்சாரம் நிலவும் பூமியாகத் திகழ்கிறது. இதனால் தான் பிரதமர் நேருவும் புதுச்சேரி பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் பலகணி – அதன் தனித்தன்மை என்றும் காக்கப்படும் என்று உறுதி கூறினார்.

Leave a Reply