மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி மு.எ.க.ச மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுக விழா 09.09.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிமுதல் தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த புத்தகம் குறித்து ஒரு சிறப்பான நூல் அறிமுகத்தை எழுதிய மதுக்கூர் ராமலிங்கம் எழுதி உள்ளார்.‌ மதச்சார்பின்மைக்கான போருக்கு ஒரு நூலாயுதம் – மதுக்கூர் இராமலிங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் நக்கீரன் ஏட்டில் தொடராக எழுதி வந்த “மகாத்மா மண்ணில் மதவெறி” எனும் தொடர் நூல் வடிவில் வெளிவந்துள்ளது. நடப்பு அரசியலும், கடந்த கால வரலாறும் பின்னிப் பிணைந்த அரசியல் கையேடாகவும், வரலாற்று வழிகாட்டியாகவும் இந்நூல் திகழ்கிறது. ஒரு நூலை எங்கு துவக்குகிறோம், எங்கு முடிக்கிறோம் என்பது முக்கிய மானது. கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தின் துவக்க காட்சி மற்றும் உச்சக்காட்சிக்கு நிக ரானது. கோவையில் நூலாசிரியரும் பங்கேற்ற மகாத்மா காந்தி நினைவு தின உறுதிமொழியேற்பு நிகழ்வை காவல்துறை யினர் தலையிட்டு தடுக்க முயல்கின்றனர். கோட்சேயின் பெயரை கூறக்கூடாது என்று குதிக்கின்றனர். ஆனால், அவர்களுடைய எதிர்ப்பை புறந்தள்ளி உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. காவல்துறையினர் கோட்சேயின் பெயரை கூறக்கூடாது என்று தடுத்ததற்கான காரணம் என்ன என்ற கேள்வியோடு இந்நூல் துவங்குகிறது.

இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை காணும் முயற்சியில் பல்வேறு வினாக்கள் அடுக்கடுக்காக நூலாசிரியரால் எழுப்பப் பட்டு வரலாற்றின் பக்கங்களிலிருந்தும் அரசியல் நிகழ்வுகளிலிருந்தும் நம்பகமான ஆவணங்களிலிருந்தும் விடைகளை எடுத்து வைத்து படிக்கும் வாசகர் நெஞ்சில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் எந்த அள வுக்கு முக்கியம் என்பதை உணர்த்திநிற்கிறது. நூலின் நிறைவு பகுதி மதவெறிக்கு எதிரான போரில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வகுக்க வேண்டிய வியூகம் என்ன என்பதை விரிவாக விளக்கி முடிவுறுகிறது. நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான போரில்; வெளிச்சத்திற்கும், இருளுக்கும் இடையிலான யுத்தத்தில் நீங்கள் யார் பக்கம் என நெஞ்சில் தைக்கும் கேள்வியோடு இந்நூல் முடிகிறது. நாளை என்பது கூட தாமதம் தான்; இன்றே களமிறங்குவோம் என ஆற்றுப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு நிழல் ராணுவம் போல இயங்கிக் கொண்டி ருக்கிறது. கொரோனா கிருமியைப் போல அவர்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சிக் கோட்பாட்டை அடிப் படையாகக் கொண்ட இந்திய நாட்டின் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதை பல்வேறு ஆதாரங்களு டன் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. மேலும், இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவா என்பது வேறு என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. இந்து மதம் என்பது மக்களின் வழிபாட்டு நம்பிக்கை தொடர்புடையது. ஆனால் இந்துத்துவா என்பது ஒரு அழிவு அரசியல் கோட்பாடே. இந்த வேறுபாட்டை மக்களிடம் விளக்காமல் இந்த விஷக் கிருமிகளை அரசியல், சமூக அரங்கிலிருந்து விலக்கி வைப்பது சாத்திய மல்ல.இதுவரை கேள்விபட்டதாக இருந்த பல தகவல்களை தேடித்தேடி இந்நூலில் தந்துள்ளார் தோழர் ஜி. ராமகிருஷ்ணன். எனவே, பல நூறு நூல்களை படித்த செறிவை இந்த ஒரு நூல் தருகிறது. உதாரணமாக, சுரேஷ் மின்னி எழுதிய “நரக மாளிகை” எனும் நூலிலிருந்து ஒரு தகவலை தந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த சுரேஷ் மின்னி அந்த காலத்தில் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் சென்ற போது உலகப்பெரும் முதலாளிகளில் ஒருவ ராக இப்போது உருவாகியுள்ள அதானி யோகா சொல்லிக்கொடுத்துக் கொண்டி ருந்தாராம். மக்களைப் பார்த்து யோகா செய்யுங்கள், தேகம் வலுப்பெறும் என்று கூறிக்கொண்டே தேசத்தை சுவாகா செய்கிறது இந்த கூட்டம். ஆஸ்திரேலியா சுரங்கத்தை அதானிக்கு முடித்துக் கொடுப்ப தும், இலங்கை சூரிய ஒளி மின்திட்டத்தை அதானிக்கு தர வேண்டுமென அந்த நாட்டு அரசை பிரதமர் மோடி மிரட்டுவதும், முத லாளிகள் மீது அவருக்கு இருக்கிற பாசம் மட்டுமல்ல, நாக்பூர் வரை நீள்கிற ஒரு சதித்திட்டம் இருக்கிறது என்பதை இந்நூலின் வழியாக புரிந்து கொள்ள முடியும். காந்தியை படுகொலை செய்த கருத்தி யலுக்கு சொந்தக்காரர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கோட்சே கூறிய கோட் பாடுகளைத்தான் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நேரு என்ற பெயரைக் கேட்டாலே நெருப்பை நேரடியாகத் தின்பது போல எரிச்சல்படுவார்கள் பாஜகவினர். மதச்சார்பற்ற இந்தியாவின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், உறுதி யும் தான் இவர்களை இன்றுவரை எரிச்சல் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்நூல் விளக்குகிறது. ஒரே நாடு என்று ஆரம்பித்து ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒற்றையைத் திணித்து இந்தியாவின் பன்முகக் கற்றைப் பண்பாட்டை சீர்குலைக்க முயல்கின்றனர். பன்மைத்துவத்தின் வலிமையே இந்தியா வின் வலிமை என்பதையும் வம்படியான ஒற்றைத் திணிப்பு, எதிர்மறையான விளைவு களையே ஏற்படுத்தும் என்பதையும், இந்தியா ஒரு போதும் ஒற்றைத் தன்மை யுடன் இருந்ததில்லை என்பதையும் இந்நூல் விரிவாக விளக்கிச் செல்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறி நிகழ்ச்சி நிரல் மற்றும் கார்ப்ரேட் முதலாளிகள் நலன்காக்க திட்டங்கள் தவிர தேசபக்தி என்பது ஆர்.எஸ்.எஸ். பாஜக வகையறா விடம் துளி கூட இல்லை. இவர்கள் இந்துக்கள் உட்பட யாருக்கும் நன்மை செய்கிறவர்கள் அல்ல. மாறாக, ஒட்டுமொத்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் தீங்கு செய்கிறவர்கள். இவர்கள் தினம் ஒரு மாய வேடம் தரிப்பார்கள். அதற்கு எதிராக போராடுகிறவர்கள் கையில் அறிவாயுதமாக சுழலத்தக்கது இந்நூல். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கயமை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு நூல்கள் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தபடை வரிசையில் இந்த நூலாயுதமும் பயன்படும். வடமாநிலங்களில் மட்டுமல்ல, தமிழ கத்திலும் கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் தன்னு டைய நச்சு வேலைகளை வெகுவேகமாக செய்து வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் முனைப்புக் காட்டிக் கொண்டே தமிழின் மீதும், தமிழர்கள் மீதும் தாளாத காதல் கொண்டவர்கள் போல நடிக்கிறார்கள். மாநில சுயாட்சிக்காக உரத்துக் குரல் கொடுத்த மரபுடையது தமிழ்நாடு. ஆனால் மாநில உரிமைகள் அனைத்தையும் பறிக்க முயல்கின்றனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக திட்டங்கள் எடுபடாது என்று கூறுவதால் மட்டும் அவர்களை தடுத்து நிறுத்தி விட முடியாது. அவர்களது சதிச் செயல்களை தெளிவாக புரிந்து கொண்டால் தான் தமிழ் மண்ணில் இந்த விஷச் செடியை வளர  விடாமல் வேரிலேயே கிள்ளி எறியமுடியும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் பரந்துபட்ட ஒற்றுமை அவசியமாகிறது. அத்தகைய அணியை உருவாக்க இந்த நூல் பெரிதும் உதவும்.

அழுத்தமான கருத்துக்களைக் கொண்ட ஒரு தொடரை பரபரப்பான தன்னுடைய தன்னுடைய கடுமை யான தேடுதல் மற்றும் உழைப்பின் மூலம் ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ எனும் நூல் வரிசையை உருவாக்கியது போல இந்த நூலையும் உருவாக்கியுள்ளார் தோழர் ஜி. ராமகிருஷ்ணன். படித்துப் பாருங்கள் தேசத்தின் நிலையும்  புரியும், செல்ல வேண்டிய திசையும்தெரியும்.


விலை ரூ.180,
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

Leave a Reply