கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

நிலப்பிரபுக்கள், இதர எல்லா மனிதர்களையும் போல் தாங்கள் ஒருபோதும் விதைக்காத இடத்திலிருந்து அறுவடை செய்ய விரும்புகிறார்கள்.

‘மனிதன்’ என்பது ஓர் அரசியல் மிருகம், வெறும் கூட்டமான மிருகமல்ல; ஆனால், சமூகத்தின் மத்தியில் மட்டுமே தன்னைத்தானே தனிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு விலங்கு.

 

மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள் என்று ஆளும் வர்க்கம் நினைக்கிறது.

தத்துவஞானிகள் பல்வேறு வழிகளில் உலகத்தை பற்றிய விளக்கத்தை மட்டுமே அளித்துள்ளனர்; இருப்பினும், இவ்வுலகத்தை மாற்றுவது என்பதே முக்கியமான விஷயம் ஆகும்.

இயற்கையின் விதிகளை மீறுவது முற்றிலும் சாத்தியமற்றது. வரலாற்று ரீதியாக வேறுபட்ட சூழ்நிலைகளில் மாறக்கூடியது எது என்றால் இயற்கையின் சட்டங்கள் தங்களை வெளிப்படுத்தும் வடிவம் மட்டுமே ஆகும்.

வரலாறு மீண்டும் மீண்டும் வருகிறது. முதலில் துன்பக்கதையாகவும், (அதைச் சரி செய்யாவிட்டால்) இரண்டாவது கேலிக்கூத்தாகவும்!

உங்களை மகிழ்விப்பவர்களை உங்களைச் சுற்றி இருக்கச் செய்யுங்கள். உங்களை சிரிக்க வைப்பவர்கள், தேவைப்படும்போது உங்களுக்கு உதவுபவர்கள், உண்மையாக அக்கறை கொண்டவர்கள். இவர்களே உங்கள் வாழ்வில் தக்கவைக்கப்பட வேண்டியவர்கள். மற்ற அனைவரும் வெறுமனே உங்களை கடந்து செல்பவர் மட்டுமே ஆவர்.

கஞ்சன் என்பவன் வெறுமனே ஒரு பைத்தியம் பிடித்த முதலாளியாக இருக்கும்போது, முதலாளி என்பவன் ஒரு பகுத்தறிவுள்ள கஞ்சன் ஆவான்.

நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது.

பயன்பாட்டுப் பொருளாக இல்லாத எதற்கும் மதிப்பு இருக்க முடியாது.

மூலதனம் என்பது பணம். மூலதனம் என்பது பொருட்கள். அதன் மதிப்பு காரணமாக, அது தனக்குத்தானே மதிப்பைச் சேர்க்கும் அசாத்தியத் திறனைப் பெற்றுள்ளது. இது மேலும் மேலும் குட்டி போடுகிறது. அல்லது, குறைந்தபட்சம், தங்க முட்டைகளை இடுகிறது.

மன துன்பங்களுக்கு ஒரே மருந்து உடல் வலி.

இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி.

ஒடுக்கும் வர்க்கத்தின் எந்த குறிப்பிட்ட பிரதிநிதிகள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் ஒடுக்குவது என்பதைத் தீர்மானிக்க, ஒடுக்கப்படுபவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுமதி அளிக்கப்படுகிறது.

பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்று வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரியும்.

ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.

காரணம் எப்பொழுதும் இருக்கிறது, ஆனால் எப்பொழுதும் நியாயமான வடிவில் இல்லை.

அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும்.

மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான்; மதம் மனிதனை உருவாக்கவில்லை.

மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் அவர்களின் விருப்பப்படி அதை உருவாக்கவில்லை.

சந்தாதாரர்கள் பத்திரிகையின் கொள்கையை நிர்ணயிக்கக் கூடாது. பத்திரிகைதான் சந்தா தாரர்களின் கொள்கையை நிர்ணயிக்க வேண்டும்

தங்கமும் வெள்ளியும் இயல்பாக பணம் இல்லையென்றாலும், பணம் என்பது இயல்பிலேயே தங்கம் மற்றும் வெள்ளியே!

ஓர் எழுத்தாளர் தான் உயிர் வாழ்ந்திடவும், எழுதிடவுமே பணம் சம்பாதிக்க வேண்டுமே யன்றி, பணம் சம்பாதிக்கவே உயிர் வாழவும், எழுதவும் கூடாது

மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு. இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா.

மக்களின் மகிழ்ச்சிக்கு முதலில் தேவையானது மதத்தை ஒழிப்பதாகும்.

கஞ்சன் என்பவன் வெறுமனே ஒரு பைத்தியம் பிடித்த முதலாளியாக இருக்கும்போது, முதலாளி என்பவன் ஒரு பகுத்தறிவுள்ள கஞ்சன் ஆவான்.

வரலாற்றின் ஓர் இயக்கத்திற்கு எழுத்தாளர் என்பவர் அதன் பிரச்சாரகராக நன்றாகச் சேவை செய்யலாம்; ஆனால் அவரால் நிச்சயமாக அந்த வரலாற்றை உருவாக்க முடியாது கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டை, “தனியார் சொத்துடைமை ஒழிப்பு” என்ற ஒற்றை வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறலாம்.

பெரும்பாலான மக்களை மகிழ்வித்தவரை, அனுபவம், மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறது.

முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும்.

எல்லா செல்வங்களுக்கும் மூலமாய் இருப்பது உழைப்பு

பெண்களின் சமூக நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை அளவிட முடியும்.

ஒவ்வொரு காலகட்டத்தையும் ஆளும் கருத்துக்கள் அதை ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களாகவே இருந்தன.

கயிற்றை நமக்கு விற்றவன்தான் நாம் தூக்கிலிடும் கடைசி முதலாளியாக இருப்பான்.

பயனுள்ள பொருட்களை அதிகப்படியாக உற்பத்தி செய்வது பயனற்ற நபர்களை அதிகளவில் உருவாக்குகிறது.

தீக்கதிர் தொகுப்பு : எம். கிரிஜா

Leave a Reply