KVK ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க

KVK ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி‌ KVK ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, நினைவூட்டல் ஆர்ப்பாட்டம்.‌

10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 19 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வெளியிடப்பட்ட 7வது ஊதியக்குழு அரசாணைப்படி தினக்கூலி ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு புதிய ஊதியத்தை வழங்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, KVK ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு செய்து, காரைக்கால், மாதூர், வேளாண் அறிவியல் நிலைய அலுவலக வாயிலில் நினைவூட்டல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர் நலச் சங்க தலைவர் *ஸ்டீபன்* தலைமை வகித்தார்.

காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், துணை தலைவர் சந்தனசாமி, துணை பொருளாளர் திவ்வியநாதன், செயலாளர் பாலசுப்ரமணியன், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச் சங்க தலைவர் ஜான் பிரிட்டோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். BDO PSRLM ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் நலச் சங்க செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கருப்பையா, துணை தலைவர் தேவதாஸ், இணை பொருளாளர் ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

Leave a Reply