மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது.
நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கல்வி சுகாரதாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 20ஆண்டுகளாக காங்கிரஸ் , பாஜக கட்சிகள் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைக்கு மாற்று இடதுசாரிகட்சிகள் முன்வைத்துள்ள கொள்கை பிரகடனத்தை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் துவங்கிய நடைபயண பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். செயற்குழு உறுப்பினர் தா.முருகன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், சுமதி, இடைகமிட்டி உறுப்பினர்கள் சரவணன், மணவாளன், அழகர்ராஜ், உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.முன்னதாக முத்தியால்பேட்டையல் துவங்கிய பிரச்சாரம் மணிகூண்டு, சின்னையாபுரம், ஈஸ்வரன் கோவில், காந்திவீதி, நேருவீதி ஆகிய பகுதிகளில் நடைபயணபிரச்சாரம் நடைபெற்றது.