மாமேதை லெனின் பொன்மொழிகள்

  • Cpim Quotesபுரட்சி நடைபெற வேண்டுமானல், சுரண்டலாளர்கள் பழைய வழியில் வாழவும் ஆட்சி நடத்தவும் முடியாமற்போவது அவசியமாகும். பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள்’ விரும்பவில்லை, ’’மேல் வர்க்கங்களால்’’ பழைய வழியில் நடத்திச் செல்ல முடியவில்லை என்கிற நிலை ஏற்படும்போது மட்டும்தான் புரட்சி வெற்றி பெற முடியும்.

இறுதி இலக்கைத் தற்காலிக நலனுக்காகக் காவு கொடுப்பதே சந்தர்ப்பவாதம்.

வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு போராட்டமே கற்றுக் கொடுக்கிறது. தங்கள் சக்தியைக் காட்டுகிறது. எல்லைகளை விரிக்கிறது. இலட்சியங்களில் உறுதியை ஏற்படுத்துகிறது.

நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.

கற்றறிதல், ஒழுங்கமைத்தல், ஒன்றுபடச் செய்தல், போராடுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் தம்மையும் பயிற்றுவித்துக் கொண்டு, இளைஞர் சமூகத்திற்கும் பயிற்றுவிக்க வேண்டும்.

பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானது ஒன்றாக ஒருபோதும் இருக்க முடியாது.

தொழிலாளி வர்க்கம் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிட அதற்கான கட்சி தேவை.

கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்.நம்பிக்கை நல்லது, ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.

உங்கள் இதயம் நெருப்பிலும், உங்கள் மூளை பனியிலும் இருக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட தேசங்களை, மொழிகளை, மக்களை, விடுதலை பெறச் செய்வோம். சோசலிசக் குடியரசுகளை உருவாக்குவோம்.

கற்றலானது ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை.

ஜனநாயகம் என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினருக்கு அடிபணிய வைப்பதை அங்கீகரிக்கும் ஒரு அரசாகும், அதாவது ஒரு வர்க்கத்தால் மற்றொன்றுக்கு எதிராக வன்முறையை முறையாகப் பயன்படுத்துவதற்கான ஒரு அமைப்பு.

ஒருவரால் சமூகத்தில் வாழவும் முடியாது, சமூகத்திலிருந்து விடுபடவும் முடியாது.

ஒரு நாடு மற்றைய நாடுகளை ஒடுக்கினால் அதனால் சுதந்திரமாக இருக்க முடியுமா? அதனால் முடியாது.

மனிதன் தன் வாழ்நாளின் இறுதியில் திரும்பி பார்க்கும் பொழுது தான் மக்களுக்காக வாழ்ந்தோம் என்ற மனநிறைவு இருக்க வேண்டும்.

அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்.

புரட்சிகர சக்திகள் முழு சுதந்திரமாகச் செயல்படும்போது புரட்சிகர அரசியல் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

தவறான சொல்லாடல் மற்றும் தவறான பெருமிதம் தார்மீக அழிவை உச்சரிக்கிறது. மற்றும் தவறாமல் அரசியல் அழிவுக்கும் வழிவகுக்கிறது.

மார்க்சின் தத்துவம் ஒரு முழுமையான பொருள்முதல்வாத தத்துவமாகும். இது மனிதகுலத்திற்கு குறிப்பாக தொழிலாளி வர்க்கத்திற்கு மிக வலிமையான அறிவை ஆயுதமாக வழங்குகிறது.

புரட்சிகர கோட்பாடு இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது.

ஒரு புரட்சிகர சூழ்நிலை இல்லாமல் ஒரு புரட்சி சாத்தியமற்றது, மேலும் எல்லாப் புரட்சிகர சூழ்நிலையும் புரட்சிக்கு வழிவகுக்காது.

திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட ஒரு பொய் உண்மையாகிறது.

முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல், உண்மையான ஜனநாயகப்பூர்வமான சமாதானத்தின் மூலம், போர்களுக்கு முடிவுகட்டுவது சாத்தியமில்லை.

முதலாளித்துவ சமுதாயத்தின் ஜனநாயகம் என்றால் மிகச் சிறுபான்மைக்கு மட்டுமேயான ஜனநாயகம், அதாவது பணக்காரர்களுக்கான ஜனநாயகம்.

சுதந்திரம் விலைமதிப்பற்றது என்பது உண்மைதான், மிகவும் விலைமதிப்பற்ற அது கவனமாக பங்கிடப்பட வேண்டும்.

அரசு என்பது ஒரு வர்க்கம் (முதலாளி) மற்றொரு வர்க்கத்தை (தொழிலாளி) ஒடுக்குவதற்கான அமைப்பே. நாடாளுமன்றம் என்ற முகமூடி தரித்து வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி, இந்த ஒடுக்குமுறையை சட்டரீதியானதாக ஆக்கி அதை நிலையானதாக்குவதே அரசு.

புரட்சிப் பாதையில் துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.

எந்த அளவு அரசியல் சுதந்திரமும் பசியுள்ள மக்களைத் திருப்திப்படுத்தாது.

தேசம் தழுவிய நெருக்கடி (சுரண்டப்படுவோர், சுரண்டுவோர் ஆகிய இரு சாராரையும் பாதிக்கும் நெருக்கடி) இல்லாமல் புரட்சி சாத்தியமன்று. இதிலிருந்து தெளிவாவது என்னவெனில், புரட்சி நடைபெறுவதற்கு, முதலாவதாக, பெரும்பான்மையான தொழிலாளர்கள் (அல்லது குறைந்தது, வர்க்க உணர்வு கொண்ட, சிந்தனை ஆற்றலுடைய, அரசியல் செயலாற்றல் வாய்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர்) புரட்சி இன்றியமையாதது என்பதை நன்கு உணர்ந்திருப்பதும், புரட்சிக்காக உயிர்விடத் தயாராயிருப்பதும் அவசியமாகும்.

(முதலாளித்துவ ஜனநாயகத்தில்) சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒடுக்கும் வர்க்கத்தின் எந்த குறிப்பிட்ட பிரதிநிதிகள் தங்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தலாம்; தங்களை ஒடுக்கலாம் என்பதை தீர்மானிப்பதற்கு ஒடுக்கப்படுவோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அறிவியலாளர்களுக்கும், உழைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டிணைவே வறுமை, நோய் மற்ற அவலங்களுக்கு முடிவுகட்டும். அந்தக் கூட்டணியின் சக்திக்கு முன் எத்தகைய இருளும் நீடித்திருக்க முடியாது.

Leave a Reply