சொன்னது
“கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பட்ஜெட் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் 5.5 மடங்கு அதிகரித்துள்ளது. பழங்குடி மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட மாநிலங்களுக்கு ரூ. 25,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.”
“கடந்த 10 ஆண்டுகளில் ஏகலைவா முன்மாதிரி உறைவிடப் பள்ளி (EMRS) திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 21 மடங்கு அதிகரித்துள்ளது. EMRS எண்ணிக்கை 402 ஆக அதிகரித்துள்ளது, மேலும் EMRS இல் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2013-14 இல் 34,365 ஆக இருந்து 2023-24 இல் 1,32,275 ஆக அதிகரித்துள்ளது.”
“ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகைகளைப் பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 18,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கல்வி உதத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.”
“கடந்த பத்தாண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 148 லட்சத் துக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.”
உண்மை நடப்பு என்ன?
நலத்திட்டங்கள்
l பழங்குடியினர் சிறப்புத் திட்டத்திற்கான (TSS) ஒதுக்கீடு 2023-24 பட்ஜெட்டில் 2.7 சதவீதம் மட்டுமே (இது ஆதிவாசி மக்கள் தொகையின் விகிதத்தில் 8.6 சதவீதமாக இருந்திருக்க வேண்டும்). 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் இது 2.5 சதவீதமாக இருந்தது. பாஜக ஆட்சி செய்த இத்தனை ஆண்டுகளிலும் இதுதான் நடைமுறை.
l இந்த சொற்ப ஒதுக்கீடும் கூட முழுமையாகச் செலவிடப்படவில்லை. 2023-24ஆம் ஆண்டில், பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகம் அதன் ஒதுக்கீட்டில் 39 சதவீதத்தை செலவிடவில்லை.
சுகாதாரம்
l 32 சதவீத ஆதிவாசிகளுக்கு எந்த கழிப்பறை வசதியும் இல்லை என்று அரசாங்கத் தின் சொந்த கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ்) காட்டுகிறது.
வாழ்நிலை
l 2021-22 ஆம் ஆண்டு முதல், சிறு வன விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு / நியாய விலையில் வாங்குவதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட
வில்லை.
l பழங்குடியினர் கல்விக்கான கல்விச் செலவு 2016-17 ஆம் ஆண்டில் மொத்த பட்ஜெட் செலவினங்களில் 0.08 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 0.053 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆதிவாசி பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அல்லது பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
l ஜார்க்கண்டில், SATH-E (மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நிலையான நடவடிக்கை – கல்வி) திட்டத்தின் கீழ் 4,600 பழங்குடியினர் பள்ளிகள் மூடப்பட்டன.
2019ஆம் ஆண்டில், திரிபுரா பாஜக அரசு இணைப்பு என்ற பெயரில் 961 பள்ளகளை மூட முடிவு செய்தது. 2022ஆம் ஆண்டில், ஆந்திராவில் 5,900 தொடக்கப் பள்ளிகளில் இருந்து 3-5 ஆம் வகுப்புகளை மூடுவதாகவும், 1-2 ஆம் வகுப்புகளை அங்கன்வாடிகளுடன் இணைப்பதாகவும் அறிவித்தது.
l 2015ஆம் ஆண்டு வரை, பல்வேறு மாநிலங்களில் சுமார் 70,000 பள்ளிகள் பழங்குடியினர் நலத் துறைகளால் நடத்தப்பட்டன. 2022-23 வாக்கில், அத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை 40,000 க்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
l அனைவருக்கும் தரமான பள்ளி வசதிகளை வழங்குவதற்கு பதிலாக, ஒன்றிய அரசின் கவனம் ஒரு சில முன்மாதிரி ஏகலைவா பள்ளிகள் (EMRs) மீது திரும்பியுள்ளது. அரசாங்கம் அமைக்க திட்டமிட்ட 740 EMRகளில், 401 மட்டுமே செயல்படுகின்றன. EMRகளில் 3.5 லட்சம் மாணவர்களை சேர்ப்பதற்கு பதிலாக, 1.35 லட்சம் மாணவர்கள் மட்டுமே EMRகளில் படிக்க முடிகிறது.
l 2023-24ஆம் ஆண்டில், EMRகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 59 சதவீதம் செலவிடப்படவில்லை. தற்போது, பெரும்பாலான EMRகளில் ஊழியர்கள் குறைவாக உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான 39,000 பணியிடங்களில் 10,000 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
l அரசின் கூற்றுப்படி, சுமார் 15 சதவீத கிராமங்களில் பழங்குடி மக்கள் தொகை 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனினும், அவர்களுக்கு எந்த பள்ளி
யும் இல்லை.
கார்ப்பரேட்டுகளின் பசிதீர்க்க…
l பழங்குடியினர் பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளில் இது முக்கிய கவனமாக உள்ளது. தேர்தல் ஆதாயங்களுக்காகவும், நிலங்களையும், கனிம வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்க உதவுவதற்காகவும் இது தொடர்ந்து கையாளப்படுகிறது.
l தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிவாசி குழுக்களை இந்துக்களாக்குவதையும், தங்களை இந்துக்கள் என்று அடையாளம் காணாத ஆதிவாசிகளை குறிவைப்பதையும் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆதிவாசி பகுதிகளில் உள்ள சங் பரிவார் அமைப்புகளுக்கு அரசாங்க நிதி வழங்கப்பட்டுள்ளது. பிராமணிய வழிப்பட்ட சாதியப் படிநிலையை பழங்குடிகள் மீது திணிக்க முயற்சிகள் நடக்கின்றன.
l இந்து மதம் என்ற ஒரே கருத்தாக்கத்திற்கு ஆதரவாக பழங்குடி சமூகங்களின் கலாச்சார நடைமுறைகள் மற்றும் மரபுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவோஅல்லது அழிக்கவோ தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
l கடந்த 10 ஆண்டுகளில், பாஜக, ஒன்றிய அரசு, பரந்த வன நிலங்களை, தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்காக வன நிலம் கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கப்படும் நிலையில், வன உரிமைகள் சட்டத்தின் கீழ் தனிப் பட்ட வன உரிமைகளுக்கான 38.36 சதவீத உரிமைகோரல்கள் நிராகரிக்கப்பட்டுள் ளன, 10.39 சதவீதம் இன்னும் நிலுவையில் உள்ளன – வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிட்டத்தட்ட 50 சதவீத வன நிலங்களுக்கான உரிமைகோருபவர்கள் உரிமைகளை இழந்துள்ளனர்.
l சுருக்கமாகச் சொன்னால், பாஜக அரசின் ஆட்சி, ஆதிவாசிகளின் நிலம், காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது மட்டுமின்றி, அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதும் தாக்குதல் நடத்திய காலகட்டமாக இருந்தது.
பழங்குடியினரின் உரிமைகளை, வாழ்வாதாரத்தைக் காப்போம்!
பாஜகவை தோற்கடிப்போம்!
மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியீடு 11
LIES, LIES AND MORE LIES OF THE MODI GOVERNMENT TRIBALS