உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

பத்திரிக்கைசெய்தி 29.07.2011

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 1968, டிசம்பருக்குப் பிறகு  38 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டிய மத்திய அரசின் வளர்ச்சி திட்ட நிதி ஒதுக்கீட்டு பயன் கிடைக்கப் பெறவில்லை. மாநிலத்தின் முன்னேற்றம் தடைபட்டதுடன், உண்மையான மக்களாட்சி கோட்பாடும் ஆட்சியாளர்களால் தவிர்க்கப்பட்டு வந்தது.

2005 ல் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தனிநபர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து ஜுலை 7ந் தேதி க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட மேதகு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று 33% பெண்கள், 16% தலித்துகளை உள்ளடக்கிய 1138 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011 ஜுலை 13ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையரை நியமித்து, தேர்தல் தயாரிப்புகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்திட  தீர்மாணிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் அரசின் இத்தகைய முடிவு பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாகும். உள்ளாட்சி அçம்புகளுக்கான தேர்தலை நடத்தி அதிகாரத்தை பரவலாக்க அரசுக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது.

முந்தைய காங்கிரஸ் அரசும் மாநில தேர்தல் ஆணையர் பதவி 4 ஆண்டுகளாக காலியாக இருந்தும் மேற்படி பதவியை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போதைய அரசும் சிறப்பு அதிகாரிகளை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்திட முயற்சிக்கிறது.

இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கவும் மேதகு சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நலன் வழக்கை தொடர்ந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அ.ஸ்டாலின் ஆஜரானார். மனுவை (நி.P.17721/2011) ஏற்றுக்கொண்ட மேதகு நீதி மன்றம் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை.

மாநில தேர்தல் ஆணையரை ஏன் நியமிக்கவில்லை என விளக்கம் கேட்டு 2 வார காலத்திற்குள் விளக்கம் அளித்திட புதுச்சேரி அரசுக்கு மேதகு  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் எப்போது தேர்தல் நடத்த அரசு உத்தேசிக்கிறது எப்பதையும் நீதி மன்றத்திற்கு தெரிவித்திட வேண்டும் எனவும் மேதகு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவண்
(வெ.பெருமாள்)
செயலாளர் 29.07.2011

Leave a Reply