பெங்களூரு நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடந்திருப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அல்லது எந்த வகையின தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. சுருக்கமாகச் சொல்வதென்றால், பயங்கரவாதம் என்பது தேச விரோதமானது, அதனை எக்காரணம் கொண்டும் அரசோ அல்லது சமுதாயமோ சகித்துக் கொள்ளக் கூடாது. ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு பயங்கரவாதத் தாக்குதல் எங்கு நடந்த போதிலும், அதில் சம்பந்தப்பட் டிருப்பவர்கள் யார் என்பது குறித்து, அவ சரப்பட்டு முடிவுக்கு வரக்கூடிய நிலை இருந்து வருகிறது. இத்தகைய போக் கானது, உண்மையான கயவர்களை அடையாளம் காண்பதற்கு இயலாமல் பிரச்சனையைத் திசைதிருப்பி விட்டு விடுகிறது. அதைவிட மோசமான அம்சம், பலரால் இது தங்கள் சொந்த அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறது. கடந்த காலங்களில் நாட்டில் இத்தகைய துரதிர்ஷ்டவசமான அனுப வங்கள் நிறையவே நடந்திருக்கின்றன. ஆஜ்மீர் செரீப், ஹைதராபாத் மெக்கா மசூதி, மாலேகாவ் போன்ற இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்துக்கள் சில இந்துத்வா கூட்டத்தினரின் வேலை என்பதும், இச்சம்பவங்கள் நடந்தவுடனே சந்தேகப்பட்டதைப் போல முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களின் வேலை அல்ல என்பதும் இப்போது மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.
எப்படி இருந்தபோதிலும், தற்போது பெங்களூரில் நடந்துள்ள குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரண மான கயவர்கள் யார் என்பதைக் கண்டு பிடித்திட விரைந்து ஒரு முறையான புல னாய்வு மேற்கொள்ளப்பட்டு, குற்றமிழைத் தோர் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த குண்டு வெடிப்புகள் அனைத் தும் மே 5 அன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வந்தபிறகு நடந்துள்ளன. இத்தகைய சம் பவங்களை, தங்களுடைய சொந்த அர சியல் லாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக, சிலரால் மதவெறியைக் கூர் மைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் போக்கு இருக்கிறது. இதனை எக்காரணம் கொண்டும் அனு மதித்திடக் கூடாது. ஆயினும், பாஜக-வில் வலுவான பிரி வினர் தூண்டுதலில் குஜராத் முதல்வரை எதிர்காலப் பிரதமர் என சித்தரித்திருப்பது, வரவிருக்கும் காலங்களில், பாஜக-வின் முக்கியமான தேர்தல் உத்தியாக மத வெறியைக் கூர்மைப்படுத்தல் இருந் திடுமோ என்கிற ஐயத்தை வலுவாக ஏற்படுத்தி இருக்கிறது. துரதிர்ஷ்டவசமான கோத்ரா ரயில் சம்பவத்தையடுத்து தொடர்ந்து, புலனாய்வு அறிக்கைகளை, குஜராத் மாநில அரசு பெற்றிருந்தபோதிலும், அவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, மாநிலத்தில் மதவெறியைக் கொழுந்து விட்டெரியச் செய்வதற்கே, குஜராத் அரசு சூழ்நிலையை உருவாக்கித் தந்தது என் பதும், அதன் காரணமாகவே 2002இல் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் நடந்தன என்பதும் சாட்சியங்கள் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதும் அப்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அத்தனை சம்பவங்களிலும் குஜராத் மாநில அரசும் உடந்தையாக இருந்தது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த ஆவணங்கள் அனைத்தும் குஜராத்தில் முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக நடைபெற்ற கொலைச் சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு அது தன் னுடைய இறுதி அறிக்கையை அளிப்ப தற்கு மூன்றரை மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.
எனினும் சிறப்புப் புலனாய்வுக் குழுவானது மாநில அரசு செய்துள்ள குற்றங்கள் அனைத்தை யும் மூடி மறைத்து, மாநில அரசாங்கத்தின் மீது எவ்விதக் குறையும் கூறாது வழக்கை முடித்துள்ளது. நீதித்துறை இவ்வுண் மைகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசாங்கம், மாநில புலனாய்வுப் பிரிவுகள் அளித்த எச்சரிக்கைகளை வேண்டுமென்றே உதா சீனம் செய்துவிட்டு, முஸ்லிம்கள் மீதான கொலைச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளன என்பதை நீதித்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில், அறநெறி யின் எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் குஜராத் முதலமைச்சர் உடனடியாக ராஜி னாமா செய்திட வேண்டும். அதுமட்டுமல்ல குஜராத்தில் நடை பெற்ற கலவரங்களின்போது மிகவும் கொடூ ரமான முறையில் கொல்லப்பட்ட நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் ஈசான் ஜாஃப்ரி, மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி சிறப் புப் புலனாய்வுக்குழுவின் இறுதி அறிக் கையை நிராகரித்திட வேண்டும் என்றும் மோடி உட்பட 59 பேர்களின் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என்றும், தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு, உரியமுறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நம் முடைய ஜனநாயகத்தில் நீதி வழங்கப்படும் முறையானது மோசடிக்கு உள்ளாக் கப்படாமலும், தாமதப்படுத்தப் படாமலும் இருப்பதை நீதித்துறையானது உத்தர வாதப்படுத்த வேண்டும். தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியேயாகும். இவ்வாறு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான படுகொலைச் சம்பவங்களில் குஜராத் முதலமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படா மல், அவர் இந்தியாவின் எதிர்காலப் பிரதமராகச் சித்தரிக்கப்படுவதிலேயே மிகவும் துடியாய் இருக்கிறார்.
ஆயினும் இது நாள்வரை தேஜகூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மோடியை பிரதமருக்கான வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று மிகவும் தெளிவாகக் கூறிவிட்டார். இவ்வாறு பாஜக-வின் கூட்டணிக்குள் சரிசெய்யப்பட முடியாத அளவிற்கு முரண்பாடுகள் முன்னுக்கு வந்துள்ளன. அதா வது பெரும்பான்மையைப் பெறக்கூடிய விதத்தில் கூட்டணி வலுவாக இருக்க வேண்டுமெனில் பாஜக-வானது தன்னு டைய வெறிபிடித்த மதவெறி நிகழ்ச்சி நிரலைக் கைவிட வேண்டும் அல்லது ஒத்திப்போட வேண்டும் அல்லது பின்னுக்குத் தள்ளி வைக்க வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்ட ளைக்கிணங்க முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரக்கத்தனமான மதவெறி நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற வில்லை என்றால் பாஜக-வினால் தன் சொந்தத்தளத்தை தக்க வைத்துக்கொள்ளவோ, விரிவு படுத்தவோ முடியாது. இவ்வாறு இக்கூட்டணியில் முரண்பாடுகள் மிகவும் கூர்மையடைந்திருக்கின்றன. ஆயினும் ஆர்எஸ்எஸ்-பாஜகவானது இந்திய கார்ப்பரேட்டுகளின் புதிய ஆதரவுத் தளத்தைப் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பொருளாதார நெருக்கடிகள் மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய சூழலில், தங்களின் உச்சபட்ச லாபத்திற் கான கார்ப்பரேட் உலகத்தின் வெறி படிப் படியாக அதிகரித்துக்கொண்டே செல் கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற் றும் சிவில் உரிமைகள் பற்றியெல்லாம் கவலைப்படாத நபராக இருந்தாலும் பர வாயில்லை, தங்கள் நலன்களுக்கு வசதி செய்து தரக்கூடிய விதத்தில் மிகவும் ‘‘உறுதியாக’’வுள்ள ‘வலுவான’ தலைவர் அவர்களுக்குத் தேவை. மாபெரும் அறிஞரான எரிக் ஹாப்ஸ்வாம், பெரும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாகக் கூறுகையில் தங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாதவரை எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனை ஆதரிக்கவும் அவற்றுடன் சமரசம் செய்துகொள்ளவும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் தயாராகவே இருக்கின்றன என்று கூறியிருப்பதுடன், … பாசிச சித்தாந்தத்துடன் ஆட்சி செய்பவர்கள் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு மிகவும் அனுகூலமானவர்களேயாவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கூறியுள்ள அவர், பல்வேறு அனுகூலங்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் தொழிற்சங்கங்களை ஒழித்துக் கட்டுவது, இடதுசாரிகளைப் பலவீனப் படுத்துவது அல்லது எதிர்த்து முறியடிப்பது போன்ற வையும் அடங்கும். 1930களில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில் இத்தகைய மோசமான நிலைமைதான் ஏற்பட்டது. இப்போது நம்முடைய உள்நாட்டுப் பொருளாதார மந்தமும், உலகப் பொரு ளாதார நிலைமையும் தொடர்ந்து தள்ளா டிக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில், உச்சபட்ச லாபத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு ‘மோடி’ போன்ற மீட்பாளர் தான் தேவைப்படுகின்றார். எப்படியெல்லாம் உலகப் பெரும் வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட் ஜாம்பவான்கள், பாசிசம் தலைதூக்கு வதில் முக்கியமான பாத்திரம் வகித்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறையவே சாட்சியங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இன்றைய தினம் நம் நாட்டில் காணப்படும் நிலைமை என்பது, ஜெர்மனியில் பாசிசம் உருவான காலத்திலிருந்த நிலைமை போன்றதல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாசிஸ்ட் முறைகளைப் பயன்படுத்தி, அரசு அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் பிற்போக்கு சக்திகளின் குணம் என்பது அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான்.
ஜார்ஜ் டிமிட்ரோவ், தன்னுயை ஐக்கிய முன்னணி தந்திரம் என்னும் புகழ்பெற்ற நூலில், ஜெர்மனியில் பாசிசம் உருவானதையும் மற்றும் அதன் குணத்தையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து அளித்திருக்கிறார். ‘‘பாசிசம் தீவிரமான ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்கு சேவகம் செய்கிறது. ஆனால், மக்கள் மத்தியில் அது தன்னை தேசத்தில் மிகவும் மோசமாக நடத்தப்படு பவர்களைக் காப்பாற்ற வந்த மாவீரன் தானே என்பதுபோலக் கூறி, மக்கள் மத்தியில் தேசவெறி, இனவெறியை ஊக்கு விக்கவும் முனைகிறது.’’ என்று டிமிட்ரோவ் கூறுகிறார், அவர் மேலும், ‘‘பாசிசம் மக்களை மிகவும் ஊழல்மிகுந்த இழிபிற விகளின் கருணையில் வாழும்படி வைக் கக்கூடிய அதேசமயத்தில், அத்தகைய இழிபிறவிகள், மக்கள் மத்தியில் தங்களை மிகவும் யோக்கியசிகாமணிகள் போன்று காட்டிக்கொள்ளவும் செய்கிறது. ஒவ்வொரு சூழ்நிலைமையின் பிரத்யேக அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப மக்களின் தேசிய உணர்வுகளைக் கிளப்பிவிட்டு, அவர்களின் தலைவனாகவும் பாசிசம் தன்னை மாற்றிய மைத்துக் கொள்கிறது”.
ஆர்எஸ்எஸ், பாஜக-வின் தற்போதைய பிரச்சாரம் பற்றி அப்போதே டிமிட்ரோவ் அவர்களால் மிகவும் சரியாகப் பேச முடிந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக வகையறாக்கள் நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாகவே நியாயப் படுத்துவ தோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவற்றை மேலும் தீவிரமாக நிறைவேற் றுவோம் என்று கூறுவதன் மூலம் சர்வ தேச நிதி மூலதனத்தின் ஆதரவையும் பெற்றுள்ளார்கள். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு போன்ற சில சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பினை இவர்கள் காட்டியிருந்தபோதிலும், இவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஆட்சி புரிந்த சமயத்தில் அவற்றை அனுமதிக்கக் கோரினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மேலும், அந்நிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புவாசல்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை தற்போது நியாயப்படுத்தவும் தொடங்கிவிட்டது. இவ்வாறாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்குச் சேவகம் செய்யத் தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் அது மக்களின் தேசிய (`இந்துமத` என்று வாசிக்கவும்) உணர்வுகளைக் கிளப்பிவிட்டு, மத வெறியைக் கூர்மைப்படுத்தி, அவர்களின் தலைவனாக மாறுவதற்காக இந்துத்வா வெறிப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் பாசிஸ்ட் நடைமுறைகளை எவ்வளவுத் துல்லி யமாகப் பின்பற்றுகிறார்கள்? நவீன இந்தியக் குடியரசின் மதச்சார் பற்ற ஜனநாயக அடித்தளங்களை அழிப் பதற்கு மேற்கொள்ளப்படும் இவர்களின் இத்தகைய இழிமுயற்சிகள் வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவர் களின் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதேசமயத்தில், நாட்டின் பெரும் பான்மை மக்களின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்குத் துன்ப துயரங்களைத் தொடர்ந்து ஏற்றுவதற்குக் காரணமாய் அமைந்துள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்களை இந்திய மக்கள் வலுப்படுத்துவதும் அவசியம்.
இவ்வாறாக இன்றைய நிலையில் நாட்டிற்குத் தேவை என்னவெனில் ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்தில் நடத்தி முடித்துள்ள மாற்றுக்கொள்கைக் கான போர் முழக்கப் பயணத்தின்போது முன்வைத்த மாற்றுக் கொள்கைத் திசை வழியேயாகும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் இத்தகைய வழிகளில் போராட்டங்களை வலுப்படுத்துவோம்.
– தீக்கதிர் (தமிழில்: ச.வீரமணி)