புதுச்சேரி மாணவர்களின் உரிமைக்காக ஜுலை 28ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசும், முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கை, ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசுக்கு மாற்றாக செயல்பட வில்லை. மாறாக முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கைகளை மூர்க்கதனமாக பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் தகுதி மற்றும நுழைவு தேர்வு நீட் முறையை மத்திய பாஜகு அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு வஞ்சகம்
ஏழை,எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி சிதைக்கப்ட்பட்டுவிட்டன. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மத்திய கல்வி வாரிய பாடத்திட்ட சிபிஎஸ்சி அடிப்படையில் நீட் தேர்வு எழுத் வேண்டும் என்பது கடுகளவும் நியாயமற்றதாகும் ஒரே நிழைவு தேர்வு என்ற பெயரில் விதவிதமான கேள்வித்தாளும் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில மாணவர்களுக்கு கடுமையான கேள்வித்தாள்கைளை வழங்கி வஞ்சகம் செய்யதுள்ளது. அரசியல் சட்டம் வலியுறுத்துகிற் சமூக நீதி சம வாய்ப்பு கோட்பாடுகளை மோடி அரசு கைவிட்டுள்ளது.
2016 -17 ஆம் கல்வி ஆண்டில் புதுச்சேரியை சேர்ந்த 4196 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் இதில் 1568 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர். சிபிஎஸ்சி மாணவர்கள் 545 முதல் 300 வரையிலான மதிப்பெண்களையும், தனியார் பள்ளி மாணவர்கள் 400 முதல் 200 வரையிலும் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் குறைவான மதிப்பெண்களை மட்மே பெற்றள்ளனர். இதன் மலம் ஏழை, எளிய மாணவரகளின் நலன் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நிகர்நிலை மருதுதவ கல்லூரிகளை அரச ஒதுக்கீட்டக்கு பெறப்பட்டு வந்த இடங்களையும் மத்திய அரசு பறித்து விட்டது.
புதுச்சேரி மாநில உரிமை பறிப்பு
புதுச்சேரி மாநில உரிமை மற்றும் எழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிக்கும் நீட் தேர்வு முறையிலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு கோரி 28.7.2017 காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பகுதி மக்களும், மாணவர்களும், இளைஞர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இச்செய்தி தங்கள் நாளிதழில் வெளியிட்டு உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம்.
தோழமையுள்ள,
ஆர்.ராஜாங்கம்,செயலாளர்,