‘பொது’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும் வகுப்பினரில் இருக்கும் பொருளாதா ரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த 103ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வாயத்தில் ஐந்தில் மூன்று பேர் ஆதரவு தெரிவித்து, தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத் தில் 2019 ஜனவரியில் கொண்டுவரப்பட்டபோது, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்திருந்தது. இந்தத் திருத்தமானது, பொது வகுப்பினரில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்காத – பொருளா தாரத்தில் நலிவுற்ற பிரிவினரில், அதாவது பிற் படுத்தப்பட்ட வகுப்பினர்,பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் என்பதில்வராத பிரிவினருக்கு, அதிக பட்சம் 10 விழுக்காட்டு அளவிற்கு, இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்கிறது.
1990இல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அம லாக்கம் செய்யப்பட்ட சமயத்தில் பொதுப் பிரிவில் உள்ளவர்களில் ஏழைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு (some quantum) இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறது; அதே சமயத்தில், பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழை யாக இருப்பவர்களுக்கும் ஒரு ஒதுக்கீடு (some quota) அளிக்கப்பட வேண்டும் என்றே கோரி வந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப் பட்டு, கூர்மையான முறையில் அணிதிரட்டல் நடந்த சமயத்தில் அதனைத் தணித்திட இது உதவும் என்று கட்சி எண்ணியது. வர்க்க அணுகுமுறையின் அடிப்ப டையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் ளும்கூட பொருளாதார அளவுகோள் (economic criteria) தேவை என்றும் கூறிவந்தது. அப்போதுதான் உண்மையிலேயே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள ஏழைகளும் பயனடைவார்கள். இதனை பின்னர் உச்சநீதிமன்றம் “கிரிமி லேயர்” (“creamy layer”) என்ற வடிவத்தில் ஏற்றுக் கொண்டது. (கிரீமிலே யர் என்பது, சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரி டையே பல தலைமுறைகளாக இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து விதமான சலுகைகளை யும் முழுமையாக அனுபவித்தும் இதர வழிகளிலும் கல்வி, செல்வம், பதவிகள் உள்ளிட்ட வசதிகளை அடைந்து உயர் நிலையை எட்டிவிட்ட சிலர் எனப் பொருள்படும்).
உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் ஒன்றுபடுத்த…
பல நூறு ஆண்டுகளாக “சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும்” ஒடுக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திப் பிடித்துள்ள அதே சமயத்தில், அனைத்து சாதிகளிலும் (castes), சமூகங்களிலும் (communities) உள்ள உழைக்கும் மக்களையும், ஏழைகளையும் ஒன்று படுத்த வேண்டும் என்பதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறை கொண்டிருக்கிறது. இப்போது இருந்துவரும் சமூக-பொருளாதாரச் சுரண்டல் அமைப்பு முறையை இதன் வழியாகவே எதிர்த்துப் போராட முடியும். அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழைகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட வேண்டும். இதற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது வகுப்பில் உள்ள ஏழைப் பிரிவினருக்கும் மற்றும் இட ஒதுக்கீட்டை இதுவரை பெறாத பல்வேறு மதக் குழுவினர் மற்றும் இனத்தினரையும் உள்ளடக்கி (inclusion of all religious groups and comm unities who cannot avail of the existing reserved quotas) ஒரு குறிப்பிட்ட அளவு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிவந்தது. இவ்வாறு அளிக்கப்படு வது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியல் வகுப்பி னர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதும் தெள்ளத்தெளிவானதாகும். பொருளா தார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு இந்தப் பொது வகுப்பினரில் இருந்து மட்டுமே ஏற்படுத்தப்பட வேண்டும்.
‘நலிந்த பிரிவினர்’ : அரசின் வரையறை மோசடியானது
எனினும் பொருளாதாரரீதியில் நலிந்தபிரிவினர் யார் என்பது குறித்து, ஓர் அலுவலகக் குறிப்பாணை மூலமாக மோடி அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிற வரை யறையை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தி ருந்தது. ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் வேலை மற்றும் கல்விக்குமான ஒதுக்கீட்டுக்கு, பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் என்பது ஒரு குடும்பம், ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டக்கூடியது என்றும், அந்தக்குடும்பம் ஐந்து ஏக்கர் மேலாக வேளாண் நிலம் சொந்தமாக வைத்திருக்கக்கூடாது, அல்லது, குடியிருப்பு மனையாக இருப்பின் 1,000 சதுர அடிக்கு மேல் வைத்திருக்கக்கூடாது, அல்லது, அறி விக்கப்பட்ட நகராட்சியில் (notified municipality) 900 சதுர அடிக்கு மேல் அளவு கொண்டு குடியிருப்பு வீடு (residential plot) வைத்திருக்கக்கூடாது என்றும் வரையறுத்திருக்கிறது. இதன் பொருள் ஏழைகளாக இல்லாதவர்கள்கூட இப்போது அளிக்கப்படும் பொருளாதார ரீதியான நலிந்தபிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்பதேயாகும். இதேபோன்றே வருமான வரி விலக்கிற்கான வரம்பு ஆண்டிற்கு 2.5 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கு மேல் வருமானம் இருக்கலாம் என்ற வரம்பு இருப்பதால் வருமான வரி செலுத்துபவரும் ஏழை என்று வகைப்படுத்தப்படுகிறார். இதேபோன்றே ஐந்து ஏக்கர் வேளாண் நிலம் வைத்திருப்பவரும் வசதியா னவர் என்று கருதப்பட மாட்டார்.
இவ்வாறு, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவின ருக்கான இட ஒதுக்கீட்டின் நோக்கமே, அதற்கான வரம்பை உச்சத்திற்குக் கொண்டுசென்றிருப்பதன் மூலம் முறியடிக்கப்பட்டுவிட்டது. மோடி அரசாங் கத்தின் இந்த அலுவலகக் குறிப்பாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்னமும் தீர்வு காணப்படாமல் உச்சநீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருந்து வருகின்றன.
கேரள ஆணைய பரிந்துரை
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மாநில அளவிலான வேலைகளுக்கும் கல்விக்கும் எப்படிப் பொருத்துவது என்பதை மாநில அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என விடப் பட்டுள்ளது.கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டைத் தீர்மானித்திட ஓர் ஆணையத்தை அமைத்திருக்கிறது. கேரளாவின் தனிநபர் வருமானம் அங்கு செய்யப்பட்ட நிலச் சீர்திருத்தம் நீண்ட கால இடதுசாரிகள் ஆட்சி ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான மனிதவள குறியிடு வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதியரசர் சசிதரன் நாயர் ஆணையம், ஒரு குடும்பத்தின் வருமானம் ரூ.4 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால்; அக்குடும்பர் 2.5 ஏக்கருக்கும் மேல் வேளாண் நிலம் இல்லாமல் இருந்தால்; நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்குத் தகுதி படைத்ததாகும் என்று பரிந்து ரைத்துள்ளது. கேரள அமைச்சரவை 2020இல் இந்தப் பரிந்துரை களை ஏற்றுக்கொண்டது. இப்போது கேரளாவில் வேலைகளிலும், கல்வியிலும் 10 விழுக்காடு அமல் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுப் பிரிவினரில் மிகவும் ஏழைகளாக உள்ளவர்கள் மேற்கண்ட வரம்புகளின்படி பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் என வரையறுக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்றிய அரசாங்கமும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கான வரையறையை மாற்றிய மைத்திட உடனடியாக முன்வர வேண்டும், அப்போது தான் உண்மையிலேயே பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் பயன் அடைய முடியும்.
நவம்பர் 09, 2022, தமிழில்: ச.வீரமணி
ஆங்கிலத்தில் வாசிக்க