உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி இன்று பேரணி நடைபெற்றது.
உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் மாண்புமிகு முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்,
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்தி, ஒருமுறை நிகழ்வாக அடாக நிரந்தரம் (Adhoc regularization) செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்,
மெத்தனப்போக்கோடு செயல்படும் உள்ளாட்சித் துறை செயலர் மற்றும் இயக்குனரை கண்டித்தும்,
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் & மாஹே பகுதி உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஒரு நாள் விடுப்பு எடுத்து புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டுப் போராட்ட குழு சார்பில் புதுச்சேரி சுதேசி காட்டன் மில் அருகில் இருந்து சட்டமன்றம் நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடத்தினர்.
பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

