வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்னைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். ‘இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்
“மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்”
“உலகின் மிகப்பெரிய கட்சி என கூறப்படும் பாஜகவில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்”
”தேர்தல் பத்திரங்கள் இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஊழல்”
“தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும். இந்த விவகாரம் காரணமாக பாஜக மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையேதான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம், தற்போது இருப்பதைவிட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும்.
இந்த விவகாரம் பாஜக மற்றும் மத்திய அரசை கடந்து பொதுமக்களிடம் அதிவேகமாகச் சென்றடைய தொடங்கிவிட்டது. அனைவருக்கும் இந்தத் தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய தொடங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என நான் நினைக்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு எதிராக உள்ளது”
– மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர்.