ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் குறித்து ரகசிய கருத்து கேட்பு கூட்டத்திற்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது. கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்த அதிகாரியிடம் பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சராமரியாக கேள்வி எழுப்பியதால் அவர் ஓட்டம் பிடித்தார். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ரேசன் கடைகளை திறந்து கேரளா, தமிழகத்தைப்போல் போல் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியவா சிய பண்டங்களை வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள குடும்ப பெண்களிடத்தில் கையொப்பம் பெற்று முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் வழங்கப்பட்டது. பணத்திற்கு பதில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்ட்டது. அப்போது இது குறித்து அரசின் சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும் ஆளுநர் கூறி யிருந்தார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு சட்டமன்ற தேர்தலின் போது ரேஷன்கடை களை திறந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்குவோம் என்றும் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் அரசு பதவியேற்று ஓராண்டு கடந்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்கழு உறுப்பினர் ஜி.ராமக்கிருஷ்ணன் பங்கேற்ற காத்திருப்பு போராட்டம் ஆகஸ்ட்2ல் புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி தலைவர்கள் சந்தித்தபோது, பணத்திற்கு பதில் அரிசி வழங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தார். அதனை தொடர்ந்து அப்போராட்டம் கை விடப்பட்டது.
ரகசியக் கூட்டம்
இந்நிலையில் ஒன்றிய அரசின் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையும், புதுச்சேரி குடிமைபொருள் விவகாரங்கள் துறையும் இணைந்து நேரடி பணம் வழங்கி வருவது (DPT) குறித்து சிவப்பு அட்டை பயனாளிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் ஞாயிற்றுக்கிமை (ஆக-21) நடத்தியது. இத்தக வலை ஊடகத்தினருக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அமைச்சர் தொகுதி பெண்கள்
இக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய பாஜகவை சேர்ந்த குடிமைப்பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் சாய்சரவணன் குமார் தொகு தியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் அரசு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இத்தகவல் அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள், சினுவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி, இன்னும் பிற இடதுசாரிக் கட்சி தலைவர்கள், கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு சென்று அதிகாரியிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இக்கூட்டம் தொடர்பாக வெளிப் படையாக அறிவிப்பு ஏன் வெளியிடவில்லை, ஊடகத்தினரை ஏன் அழைக்கவில்லை எனக் கேட்டனர். ரேசன் கடைகளைத் திறக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எனவே இக்கூட்டத்தை ரத்து செய்து ரேசன் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுங்கள் என்று முழக்கம் எழுப்பியவாறு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது ரேசன்கடை ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
இடம் மாறிய ரகசியக் கூட்டம்
இதன் பின்னரும் அவர்கள் திருந்த வில்லை. பேட்டையன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய கூட்டத்தை மாற்றினர். இந்த தகவல் மாதர் சங்கத் தலைவர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்களுக்கு தெரிந்தவுடன் அந்த அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் நேரடி பணம் வழங்கும் திட்டம் குறித்து கலந்துரை யாடல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அமைச்ச ரின் துண்டுதல் பேரில் மற்றவர்கள் யாரையும் பங்கேற்கவிடாமல் விடுமுறை நாளில் இந்த கூட்டத்தை நடத்தி பொதுமக்கள் என்ற பெயரில் தங்களது ஆதரவாளர்களிடம் ஒப்புதல் பெற்று திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டி ருப்பது தெரியவந்துள்ளது.
கண்டன இயக்கம்
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல்துறையின் இந்நடவடிக்கையை கண்டித்து திங்களன்று (ஆக.22) காமராஜர் சிலை எதிரே மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் கண்டன இயக்கம் நடைபெறவுள்ளதாக ஆர்.ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.