பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுகவிழா புதுச்சேரி தமிழ்ச்சங்க கருத்தரங்க
அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் மணி.கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
பல்கலைகழக பேராசிரியர் பா.ரவிகுமார், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமுஎகச வின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி தமிழ்சங்க தலைவர் வி.முத்து, கலைஇலக்கிய பெருமன்றத்தின் தலைவர் எல்லை.சிவக்குமார், திராவிடர்
பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி ஆட்சிசெய்யும் பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து
நாட்டை பாதுகாக்க அறைகூவல் விடுத்தனர். அதற்கு இந்த நூலை அவசியம் அனைவரும்
கற்க வேண்டும் என்றார்கள். இருதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மகாத்மா மண்ணில் மதவெறி நூலின் ஆசிரியருமான ஜி.ராமக்கிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணனிடம் இருந்து புதுச்சேரியில் முதல் விற்பனையாக நூலை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம் பெற்று கொண்டார். இவ்விழாவில் புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
நிர்வாகிகள் பச்சையம்மாள்,அருண்குமார், ஹேமாவதி, அன்பழகன், ரமேஷ்பைரவி
உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.