பத்திரிக்கை செய்தி பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்- குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஎம்
புதுச்சேரி சூரமங்கலம் பேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26) பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2022ம் ஆண்டு நடந்த புதுச்சேரி போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுக் கடந்த 11 மாதங்களாக கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி காவலர் பயிற்சி பெற்ற வந்துள்ளார் அடுத்த மாதம் பயிற்சி முடிந்து காவல் நிலைய பணிக்கு செல்ல வேண்டிய நிலையில் கடந்த 29ம் தேதி காலை ரோடு வார்க் என கூறும் 10 கிலோமீட்டர் நடக்கும் பயிற்சியின் போது விஜய் இன்றி திடீரென மயங்கி விழுந்தாகவும் பிறகு அவரது சகக் பயிற்சி காவலர்கள் விஜயை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த விஜய் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பயிற்சி காவலர் விஜயின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாக உள்ளது அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஏழை தலித் குடும்பத்தை சேர்ந்த விஜய் ஒரு பொறியியல் பட்டதாரி. பல்வேறு கனவுகளுடன் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையுடன் தான் காவலர் பணிக்கு சேர்ந்து உள்ளார் அப்படி இருக்கும் போது கடந்த ஓராண்டு கால பயிற்சி அவரது உடல் நிலையை மேம்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு மாறாக அவரது திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
1983 ஆம் ஆண்டு முதல் செயல்படும் கோரிமேடு காவலர் பயிற்சியில் அரங்கேறும் கொடுமைகள் குறித்தும், அதில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றியும் அவ்வப்போது வெளிப்பட்டபோதும் அதுகுறித்து முழுமையான உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு கூட ஒரு பயிற்சி பள்ளியை சேர்ந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்று உள்ளது.
பயிற்சி காவலர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் அடிமைபோல் நடத்துவதாகவும் இழிவாகப் பேசுவதாகவும் உண்மையைச் சொல்ல முடியாமல் இருக்க நேர்வதாகவும் தரமான உணவு, சுகாதாரமான உள்கட்டமைப்பு, போதுமான கழிவறைகள் போன்றை இல்லாமல் இருப்பதாகவும். சிறிய தவறு செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாகவும் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைப்பது, உடல் வலி, சோர்வு, மயக்கம் போன்ற உண்மையான வலிகளைச் சொன்னாலும் தண்டனையைக் குறைப்பதில்லை. இந்த பயிற்சியின் போது ஒரு முக்கியமான பாடமாக மனித உரிமை பற்றி சொல்லிக் கொடுக்கும் அதிகாரிகள் அதைக் கொஞ்சம் கூட நடைமுறைப்படுத்துவதில்லை என்பதே இச்சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
பல கனவுகளுடன் வரும் இளம் தளிர்களை கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாற்றி ஏழை எளிய மக்களுக்கு எதிரான மனநிலையோடு அதிகார வர்க்கத்தின் நலன்களை காப்பவர்களாக அவர்களைத் தயார் செய்து வெளியில் அனுப்புகின்றனர். பிரெஞ்சு – ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப்- புதுச்சேரி சேர்ந்த காவலர்களை இப்படி தயார் செய்தனர் ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகும் அதே பழைய காலனியாதிக்க விதிகளின்படி தான் இப்போதும் காவல் அமைப்பு செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவலர் பயிற்சியின் பயிற்று முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். பணிக்கு ஏற்ற பயிற்சிகள் மட்டும் அளிக்க வேண்டும். அங்கு தேவையான உள்கட்டமைப்பு, தரமான உணவு வழங்க வேண்டும். எனப் புதுச்சேரி அரசை புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது.
இவன்,
இரா.இராஜாங்கம், மாநில செயலாளர் சிபிஎம், புதுச்சேரி.
02.05.2023