புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் தொடரும் மதிப்பெண் மோசடி

பெறுதல் :

மாண்புமிகு உள்துறை அமைச்சர்; அவர்கள்                                                                      18.06.2008
இந்திய அரசு.
புதுதில்லி.

மதிப்பிற்குரியீர்

பொருள் : புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் தொடரும் மதிப்பெண் மோசடி- ஜெயராமன் கொலை –CBI விசாரணை கோருதல் தொடர்பாக….

புதுச்சேரி யூனியன் பிரதேசம் சின்ன காலாப்பட்டில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அரசு மற்றும் பல்வேறு தனியார் தொழில் கல்லூரிகள் மேற்படி பல்கலை கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

கல்வியில் ஏற்பட்ட தனியார் மய நடவடிக்கைகள் தனியார் கல்லூரிகளுக்கு இடையே கடும் தொழில் போட்டியை ஏற்படுத்தியது. இதில் தங்களது கல்விநிறுவனத்தின் மதிப்பை உயர்த்த மாணவர்களின் தேர்வு விகிதம் – கூடுதல் மதிப்பெண் பெருதல் – பெரும் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றத்தை காணவேண்டிய நிர்பந்தம் தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு ஏற்பட்டன. இதன் விளைவாக புதுச்சேரி மத்திய பல்கலையில் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பணம் பெருமளவு கைமாறுவதும் மதிப்பெண் பட்டியலில் மோசடிகளை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. சில தனிநபர்களிடம் கூட பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண் மோசடி நடைபெறுகிறது. இத்தகைய மோசடி வெகுகாலமாக நடந்து வருகிறது.

மதிப்பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பின்னால் வலுவான அரசியல் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளின் ஆதரவு பின்னணி இருந்து வருகிறது. கடந்த ஆண்டு விடைத்தாளில் மதிப்பெண் மோசடி குற்றச்சாட்டு எழுந்து அப்பாவியை பலிகடாவாக்கி மோடி பேர்வழிகள் தங்களை தற்காத்துக்கொண்டார்கள். 2008 ல் திரு ஜெயராமன் என்ற னுயவய நுவெசல ழுpநசநயவழச படுகொலை மூலம் தங்களை தற்காத்துக்கொண்டுள்ளார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த இன்ஜினியரிங் செமஸ்டர் விடைத்தாள் திருத்தப்பட்டு கம்யூட்டரில் மதிப்பெண்களை பதிவு செய்யப்பட்டது. இப்பணியில் திரு.ஜெயராமன் ஈடுபட்டிருந்த போது கம்யூட்டரில் பதிவு செய்ய அளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில் 0 என்ற மதிப்பெண் 60 மதிப்பெண் என மாற்றப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதைத்தொடந்து பல விடைத்தாள்களை சரிபார்த்த போது பல விடைத்தாள்களில் மதிப்பெண்கள் மாற்றப்பட்டிருந்தது. இதனை தனது மேலதிகாரியான துணைப்பதிவாளர் திருமதி சித்ரா அவர்களிடம் ஜெயராமன் புகார் செய்துள்ளார். மேற்படி பெண் அதிகாரி சித்ரா அவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். திரு துணை வேந்தர் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி விசாரணைக்குழு தலைவராக மதிப்பெண் மோசடியில் தொடர்புடைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரி திரு.சம்பத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோசடி பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளுக்கு சலனப்படாமல், மிரட்டலுக்கு பயப்படாமல் விசாரணையை கொலையுண்ட திரு.ஜெயராமன் எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் மோசடி புகார் எழுப்பிய திரு ஜெயராமன் மீது பழிசுமத்த திட்டமிட்டு ஜோடனைகள் கட்டமைக்கப்பட்டன. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கமாத்திரைகளை உட்கொண்டு 17.02.08ல் தற்கொலைக்கு மரணத்திற்கு முற்பட்டுள்ளார். ஜெயராமனின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் 18.02.08ல் மரணவாக்குமூலம் காவல்துறை துணை ஆய்வாளரால் பெறப்பட்டது. மேற்படி தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததைத் தொடர்ந்து மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் சேர்க்கப்பட்டு திரு ஜெயராமன் பாதுகாக்கப்பட்டார்.

இந்நிலையில் 19.05.08ல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். காலாப்பட்டு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் மற்றும் தன்னை அடையாளம் தெரியாத சிலர் பின் தொடர்வது கறித்து முன்னெச்சரிக்கையாக 26.04.08 ல் திரு ஜெயராமன் புகார் கொடுத்துள்ளார். தற்கொலை முயற்சியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது 18.02.08ல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இத்தகையப் புகார் மீது காவல் துறை நேர்மையான முறையில் – சட்டத்தின் அடிப்படையில் இயங்காததால் திரு ஜெயராமன் படுகொலை நடந்துள்ளது. இந்த விசாரணையும் நேர்மையாக நியாயமாக நடைபெற வாய்ப்புகள் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

எனவே புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் நடைபெறும் மோசடிகளை முற்றாக ஒழிப்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது உடனடி கடமையாகும். பல்கலை நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், பல்கலைகழக ஊழியர் ஜெயராமன் படுகொலையில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் அவசியமாகும். இத்தகைய பணியைச் செய்ய திரு.ஜெயராமன் கொலை விஷயத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட தங்களை வேண்டுகிறோம்.

இங்ஙனம்
(V. பெருமாள்)
செயலாளர்

Leave a Reply