புதுச்சேரியை மதுச்சேரியாக்காதே – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் சமய நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 150 மீட்டர் தள்ளி மதுக்கடைகளை மாற்றி அமைத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒரு தனியார் மதுக்கடை நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. D.Y.சந்திர சூட் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வா மையம் ஒன்றிய அரசு புதுச்சேரி மாநிலத்தில், சமயம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் குறைந்தபட்ச இடைவெளி விட்டு மதுக்கடைகள் அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இவ்விஷயத்தில் மாநில அரசு சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
புதுச்சேரி மாநிலம் 496 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட சிறிய மாநிலம் 600க்கும் அதிகமான மதுக்கடைகள் உள்ளன. மக்களின் ஆரோக்கியம் ,சுகாதாரம் ஆகியவை குறித்து கவலைப்படாமல் N.R காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் தடுக்கி விழுந்தால் மது கடைகள், ரெட்டோபர்கள், பப்கள் என்ற தன்மையின் மது விற்பனை பரவலாக்கப்பட்டுள்ளன. 1500 பேருக்கு ஒரு மதுக்கடைகள் உள்ள ஒரே மாநிலமாக புதுச்சேரி உள்ளது.
ஏற்கனவே சமயம் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து நகரத்தில் 200 மீட்டர், கிராமப்புறங்களில் 300 மீட்டர் இடைவெளியில் தான் மதுக்கடைகள் அமைக்க விதிமுறை இருந்தது திரு என்.ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் நகரத்தில் 50 மீட்டர், இதர பகுதிகளில் 100 மீட்டர் என மாற்றி அமைக்கபட்டது.
இதன் கோர விளைவுகளை அன்றாட மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதும், குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துகளில் உயிரிழப்பு, கொலை என பலவிதமான குற்றங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
ஆகவே மாநில அரசு பள்ளிகள், கோயில் மற்றும் மசூதிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி மதுக்கடைகள் அமைக்க வழி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் மது வணிக வருவாய் நம்பி திட்டங்கள் செயல்படுத்துவது சமூகநீதி பொருளாதாரத்திற்கு எதிரானதாகும். ஆகவே மாற்று பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடவும், மது வணிகத்தை படிப்படியாக குறைக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
ஆர் .ராஜாங்கம்,
மாநில செயலாளர்

Leave a Reply