புதுச்சேரி பட்ஜெட் 2022-23- மக்களுக்கு துரோகம், அரசு சொத்துக்கள் சூரையாடல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரிமாநில குழு .
பத்திரிக்கை செய்தி
—————————————

புதுச்சேரி அரசின் பட்ஜெட் அரசியல் சாகசமும் , வஞ்சமும் கொண்டதாகும்.

puducherry budget, புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட்... பின்னணி என்ன? -  puducherry cm rangasamy submitted interim budget in assembly dmk and  congress walkout - Samayam Tamilபுதுச்சேரி மாநில என்- ஆர் காங்கிரஸ் , பாஜக கூட்டணி அரசு 22.08.2022ல், 2வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ரூபாய் 10,696.61 கோடிக்கு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் வெளிப்படை தன்மை இல்லை, அரசியல் சாகசமும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தும் வஞ்சகமும் கொண்ட தாகும்.

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநில அரசு கோரிய ரூபாய் 11,000 கோடி வரவு செலவு திட்டத்திற்கு இந்த ஆண்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. கூடுதல் நிதியும் கிடைக்கவில்லை, ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியதால் துணைநிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய இயலவில்லை. இதனால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத் தொடரைய ரத்து செய்ய வேண்டிய அவலத்தை புதுச்சேரி சந்தித்தது.

துணைநிலை ஆளுநரின் உரை வழக்கமான அலுவல் பணிகளை உள்ளடக்கிய வேலைகளின் தொகுப்பாகவே அமைந்தது. இந்த பின்னணியில் மாநில அரசின் பட்ஜெட்டும் மக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கவில்லை.
ரூ.10,696.91 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 9919.26 ஒப்புக்கொள்ளப்பட்ட செலவினங்களாகும். எஞ்சிய ரூபாய் 777.35 கோடியில் என்ன வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த முடியும். ரூபாய் 1889.61 கோடி கடன் திரட்டுவது அல்லது, மாநில அரசின் சொந்த வருவாயை பெருக்குவதை பொறுத்தே பட்ஜெட் முழுமை பெறும் நிலை உள்ளது.

“கடந்த பட்ஜெட்டில் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று அதற்கு இணையாக மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்து .மூலதனம் உருவாக்க ப்படும் இதன் மூலம் பருப்பு ,எண்ணெய், மற்றும் தானிய வகைகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றும், இதன் சாத்தியப்பாடுகள் குறித்து குடிமைபொருள் வழங்கல் துறை அறிக்கை அளிக்கும் என்று சொல்லப்பட்டது. மேற்படி குழுவின் அறிக்கை என்ன ஆனது, பொது விநியோகத் திட்டத்திற்கான மூலதன நிதி ஒதுக்கீடு என்ன ஆனது
என்பது பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

கடந்த 15 மாதங்களுக்கு வழங்கப்படாத அரிசிக்கு பதிலாக சிகப்பு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 9000, மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூபாய் 4500 வழங்கப்படவில்லை. இது குறித்து பட்ஜெட் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் துணைநிலை ஆளுநரின் உரையில் அரிசி திட்டத்திற்கு ஒதுக்கிய பணத்திலிருந்து மழை நிவாரணம். வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்காமல் அரிசி திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தியது மிகப்பெரும் மோசடி நடவடிக்கை ஆகும். முறையற்ற நிதி கையாளுகைக்கு ஒப்பாகும்.

தற்போது 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அரசின் எந்த உதவித் தொகையும் பெறாதவர்களுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு ,வேலையின்மை போன்ற சூழலில் இத்தொகை போதுமானது அல்ல. மேலும் இத்திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது . எந்த துறையின் கீ ழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பது தெளிவில்லை.

நடப்பு கல்வியாண்டில் இதுவரை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படவில்லை. சிக்கனம் என்ற பெயரில் சீருடைக்கு பதிலாக மாணவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. இலவச மிதிவண்டி திட்டம் ரத்து செய்யப்பட்டு இலவச பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அது நடைமுறையில் இல்லை. மீண்டும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி திட்டம் அறிவித்ததன் மூலம் இலவச பேருந்து வசதி திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

11, 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. கடந்த என் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியான மடிக்கணினி மற்றும் கைக்கணினி திட்டம் செயல்படுத்தவில்லை .இந்திய மாணவர் சங்கம் இரண்டு மாத காலம் மாணவர்களை திரட்டி நடத்திய போராட்ட நிர்ப்பந்தத்தால் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட திட்டம் தொடரவும், பொறியியல் கல்வி பயிலும் சென்டர் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அனைத்து கல்லூரிகளை இணைத்து தொகுப்பு கல்லூரிகளாக மாற்றுவதும், இடைநிற்கும் மாணவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும் என்பதும் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற புதிய கல்விக் கொள்கையின் மோசடி திட்டமாகும் .

cpim budget அரசு மின் விநியோகத்தை தனியார் மையம் ஆக்குவதற்கு தோதாக அரசு முதலீட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரூபாய் 282 கோடி செலவில் 4.6 லட்சம் ஸ்மார்ட் மின்மீட்டர்கள் அனைத்து நுகர்வோர்களுக்கும் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் முன்பணம் செலுத்தி மின் இணைப்பு பெரும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. அரசு செலவில் மின் துறையை நவீனப்படுத்துவது, பிறகு மின் துறையை தனியாருக்கு தாரை வார்த்து பிறகு அவர்கள் மக்களை கொள்ளையடி அனைத்து வழிகளையும் அரசு செய்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக நகராட்சிகளுக்கு சொந்தமான சொத்துக்கள், நிலங்களை தனியாருக்கு தாரைவாக்கப்பட உள்ளன. மோடி அரசின் அரசு மற்றும் பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கள் திட்டத்தின் மூலம் தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கை வழியில் புதுச்சேரியிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் உழைப்பாளர்கள் உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. நடப்பு பட்ஜெட்டில் நலவாரியம் அமைக்கவோ, அதற்கான நிதி ஒதுக்கவோ மாநில அரசு முன்வரவில்லை. ஆனால் ஐம்பொன் சிலை செய்யும் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மோசடியாகும்.

பஞ்சாலைகளை நவீனப்படுத்தி செயல்படுத்துவது, கிராமப்புற வேலை உறுதித் திட்டம் ,வீடு இல்லாத மக்களுக்கு குடிமனை பட்டா, குறைந்தபட்ச கூலிசட்டத்தை அமல்படுத்துவது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பிரெஞ்சு முதலீட்டாளர்கள், பிரெஞ்சு- இந்திய முதலீட்டாளர்கள் மூலம் 1000 கோடி முதலீட்டில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆட்சியாளர்களின் முந்தைய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் மாநில அரசின் பட்ஜெட் புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் தனியார் முதலாளிகள் அரசின் சொத்துகளை சூரையாட புரோக்கர் செய்ய வழி வகை செய்யும் பட்ஜெட்டாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாத அரசியல் சாகசம் கொண்ட, வெற்று அறிவிப்புகளை உள்ளடக்கிய பட்ஜெட் ஆக உள்ளது.

ஆர் .ராஜாங்கம், புதுச்சேரி மாநில செயலாளர் 

Leave a Reply