நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும்

ஊதிய பாக்கி, ஓய்வூதிய பாக்கி மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போன்று முன் தேதியிட்டு வழங்கிட கோரி தொடர் போராட்டம் நடத்தி வரும் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் போராட்டத்தை சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்க புதுச்சேரி அரசை வலியுறுத்தியும் கட்சியின் சார்பாக ஆதரவை தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் தோழர் ராஜாங்கம் மூத்த தலைவர் தோழர் முருகன் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கொளஞ்சியப்பன் மற்றும் உழவர்கரை நகர குழு செயலாளர் தோழர் ராம்ஜி ஆகியோர் தோழமை பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து ஸ்மார்ட் சிட்டி அமைத்திடவும் மாநகராட்சியாக மாற்றிட பல கோடி ரூபாய் செலவு செய்திட திட்டமிடும் புதுச்சேரி அரசு அதனை தூய்மையாகவும் சுகாதாரத்துடனும் பேணி பராமரித்திட இரவு பகலாக பணி செய்திடும் நகராட்சி நிர்வாகத்திற்கு வெறும் 55 கோடி ரூபாய் ஒதுக்கி அதில் பணிபுரியும் ஊழியர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் வராத புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகரத்தின் தூய்மை என்பது அத்தியாவசியமான ஒன்று. அது மக்களுக்கு தேவைப்படும் மிக முக்கியமான சேவை அந்த அடிப்படையில் பார்க்காமல் லாப நோக்கோடு பார்த்து அவர்களுக்கு நான்கு மாதம் முதல் 11 மாதம் வரை ஊதியம் தராமல் இழுத்தடிப்பது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உரிய பலனை தராமல் தொடர்ந்து தாமதப்படுத்துவது பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் .இதன் காரணமாக ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வருகின்ற செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.

அரசியல் செல்வாக்கு உள்ள சிலர் நகராட்சிக்கு சேரவேண்டிய வருவாயை செலுத்தாமல் ஏமாற்றுவது; நகராட்சி கடைகளை மிக மிக குறைந்த வாடகைக்கு விடுவது ;அவற்றை நாற்பதாயிரம் வரை மறுவாடைக்கு விட்டு கொள்ளையடிப்பது ; இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கின்ற அரசு, கேபிள் டிவி மூலம் வருகின்ற நகராட்சிக்கு வருகின்ற வருவாயை உறிஞ்சி கொழுக்கும் பெரும்புள்ளிகள் மற்றும் உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகளின் கூட்டுக் களவாணி நடவடிக்கைகளின் காரணமாக நகராட்சி நடுந்து செயலிழந்து வருகிறது இதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அதிகாரிகள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.


எனவே புதுச்சேரி அரசு உடனடியாக போராடும் ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளா உரிய தேதியில் ஊதியம் ,ஓய்வூதிய பட்டுவாடா, மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை மற்ற ஊழியர்களுக்கு அளித்தது போன்று அளித்து சுமுக நிலை ஏற்படவும் புதுச்சேரி நகரத்தின் தூய்மையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.

Leave a Reply