புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது புதுச்சேரி மாநில அமைப்பு மாநாடு , நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வில்லியனூரில் நடை பெறுகிறது.
இம் மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ரெட்டி யார்பாளையத்தில் உள்ள கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. மாநில செயலாளர் ராஜாங்கம் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது,
புதுச்சேரியில் மக்களுக்கான எண்ணற்ற போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்துள்ளது. ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும் என்று கட்சியின் தொடர்ச்சியான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ரேசன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மது ஒழிப்பிற்கான மாநாடு, மின்சார கட்டணத்தை எதிர்த்து, மின்சாரத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட கோரி மாநில மக்களை திரட்டி மகத்தான போராட்டங்களை சிபிஎம் நடத்தி வருகிறது.
15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் மாநில பொருளாதார வளர்ச்சி என்பது பின்னோக்கி தான் இருக்கிறது. வேறு எங்கும் இல்லாத வேலையின்மை புதுச்சேரியில் தான் அதிகமாக உள்ளது.எனவே சிபிஎம் சார்பில் நடைபெறும் புதுச்சேரி மாநில மாநாட்டில் மாநில மக்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கான மகத்தான போராட்டங்களை திட்டமிடவுள்ளது என்றார்.
முன்னதாக 55 பேர் கொண்ட மாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஆர்.நடராஜன், செயலாளராக எஸ்.ராமமூர்த்தி, பொருளாளராக ஞானசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் சீனிவாசன் கொளஞ்சியப்பன் பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்யா உட்பட மாநில குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.