அரசு துறைமுகம் விரிவாக்கம் துணைநகரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

பத்திரிக்கைச்செய்தி

புதுச்சேரி அரசு துறைமுகம் விரிவாக்கம் துணைநகரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் . மக்கள் கருத்தறிந்து மக்களை பாதிக்காத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் வெளிப்படத்தன்மையடன் அமைய வேண்டும். இது குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தவும் பொது விசாரனை செய்யவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

துறைமுகம் விரிவாக்கம் எதிர்ப்பு இயக்கத்தில் சிலர் மார்கசிஸ்ட் கட்சி கையூட்டு பெற்றதாக அவதூறாக உரைநிகழ்த்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி யாரிடமும் கையூட்டு பெறவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கையூட்டு பெற்றுள்ளதாக அறியவருகிறது. இது குறித்து புதுச்சேரி அரசு நீதி விசாரனைக்கு உத்திரவிட வேண்டும் என்ற முறையில் 20.03.2007 ல் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நாரா.கலைநாதன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் மார்க்சிஸ்ட் கட்சி மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் கட்சிகள் கையூட்டு பெற்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் நிரூபிக்க இயலாத பட்சத்தில் கட்சியை கலைத்து விட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தோழர் கலைநாதன் அவர்களின் இந்தக் கூற்று மிகவம் கவலையளிக்கிறது.

எந்த அரசியல் கட்சியினர் யார் யார் எவ்வளவு பணம் கையூட்டாக பெற்றார்கள் என்பதை நாங்கள் குறிப்பிடவில்லை. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் கையூட்டு பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளோமே தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் குறிப்பிட வில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் செலவழிக்கப்பட்டதையும் வருமானத்திற்கு அதிகமாக சிலரிடம் பணம் குவிவதும் எப்படி என்பதை மக்கள் அறிவார்கள்.

துறைமுகம் விரிவாக்கத்தில் பலர் கையூட்டு பெற்றது தொடர்பாக புதுச்சேரி அரசு நீதி விசாரணைக்கு உத்திரவிட்டால் உண்மைகள் வெளிவரும். அப்போது தெரியும் உண்மைகள். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி எங்கள் மீது வழக்கு தொடுத்தால் மக்கள் ஆதரவுடன் அதை சந்திக்க தயாராக இருக்கிறது என்பதை கட்சியின் பிரதேச செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது. மேலும் கட்சியை கலைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வேண்டும் என்ற தோழர் கலைநாதன் ஆசைக்கு காலமும் வரலாறும் பதில் சொல்லும்.

இவண்

(V.பெருமாள்)
செயலாளர்
22.03.2007

 

Leave a Reply