புதுச்சேரி நகராட்சி-பஞ்சாயத்து தேர்தலை உடனே நடத்துக

பெறுநர்
மான்புமிகு முதல்வர் அவர்கள்,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.

அன்புடையீர்  வணக்கம்.

புதுச்சேரி சிறப்பு மாநில அந்தஸ்து, நகராட்சி-பஞ்சாயத்து தேர்தல், இவ்விரண்டு விஷயங்களையும் ஒரே பொருளாகக் கொண்ட ஒரு நாள் கூட்டத்தை, தாங்கள் 9 மாதங்களுக்கு முன் தலைமைச்செயலகத்தில் வளாகத்தில் கூட்டி முதல்வர் என்ற முறையில் அனைத்து அரசியல் கட்சியினரின் கருத்துகளை கேட்டறிந்தீர்கள்.

அக்கூட்டத்தில் நகராட்சி-பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதங்களை கேட்டபிறகு விரைவில் தேர்தல் தேதியை உடனே அறிவிக்கிறோம் என்று கூறினீர்கள்.

மேலும், மாநில அந்தஸ்து சம்மந்தமான பிரச்சனையில் போதிய காலஅவகாசம் இல்லாததால், ஒருசில நாட்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதித்து சட்டமன்றத்தின் ஒப்புதலைப்பெற்று டெல்லிக்கு செல்வதென்றும், அனைத்து சட்டமன்ற உறுப்பிர்கள்;, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று, புதுச்சேரியை கவனிக்கும் உள்துறை இலாக்கா அதிகாரிகளை, பிரதமரை சந்தித்து இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறினீர்கள்.

ஆனால் சிறப்பு மாநில அந்தஸ்து சம்மந்தமான அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டாமல், தங்கள் ஆட்சியில் பங்கெடுத்துள்ள அமைச்சர்கள், ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் டெல்லிக்கு அழைத்துச்சென்று, மாநில அந்தஸ்தை கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது எந்த வகையிலும் நியாயமில்லை. இது, ஒரு கட்சியை சார்ந்த பிரச்சனை அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், ஒன்றுசேர்ந்து போராடிப்பெற வேண்டிய பிரச்சனையாகும்.

உதாரணத்திற்கு, காவிரி நதிநீர் பிரச்சனையில,; புதுவைக்கு கிடைக்கவேண்டிய பங்கை பெறுவதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து காவிரி நடுவர் மன்ற நடுவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்ததை நடைபெற்ற பிறகுதான் காவிரி வழக்கில் புதுச்சேரியும் இணைக்கப்பட்டது என்பதை நினைவூட்ட வரும்புகிறோம். அதேபோல் மேற்சொன்ன விஷயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தாங்கள் கூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

தொகுதி சீரமைப்பு

தொகுதி சீரமைப்பு பிரச்சனையில் தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டபோது, அப்போது ஏற்றுக்கொண்ட கட்சிகள் ஒரு சமச்சீரான எண்ணிக்கையில், சமத்துவமாக பூகோள ரீதியாக தொகுதி சீரமைப்பு இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தங்கள் அரசு இது சம்மந்தமாக, ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வுக்குழு தொகுதி வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு ஆய்வறிக்கையை அரசுக்கு வழங்கி உள்ளது.

இந்த ஆய்வறிக்கை கிடைத்தவுடன், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தொகுதி சீரமைப்பில் குறைகள் இருந்தால் நேருக்கு நேர் பேசி தீர்வுகாண்பதற்கு மாறாக குழுவின் அறிக்கை, நேரடியாக பத்திரிக்கையி;ல் வெளியிடப்பட்டது. இதனால், அறிக்கையில் உள்ள குறைகளை போக்குவதற்கு மாறாக சீரமைப்பு கூடாது என்ற நிலையை முன்னிருத்தி, பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று தங்கள் ஆட்சியில் அங்கம்பெற்றுள்ள ஒருசில சட்டமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள், அப்பாவி மக்களை திசைதிருப்பி தொகுதி சீரமைப்பை கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். புதுச்சேரி மக்களுக்கு, இந்தப்பிரச்சனையில் தங்கள் அரசின் நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

காமராஜர் நூற்றாண்டு விழாவில், புதுவைக்கென்று தனியாக அரசு மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று தாங்கள் முன்வைத்த கோரிக்கை அமோக வரவேற்பை பெற்றது. அதே கோரிக்கையை சட்டமன்ற நடப்பு நிதி ஆண்டு கூட்டத்தில் அறிவித்தீர்கள். தற்போது அந்த அறிவிப்பு பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் புற்றீசல் போல் வளர்வதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. தங்களின் செயல்பாடுகள், அறிவிப்போடு நின்றுவிடுமோ என்ற கேள்வி எழுகிறது. இதற்கு தங்கள் அரசின் பதில்களை புதுச்சேரி மக்களுக்கு தெரிவிப்பதோடு மேற்சொன்ன நான்கு அம்ச கோரிக்கைகளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உரிமைகளை பெறுவதற்கும், டெல்லி செல்வதற்கும் அதை;துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க தங்கள் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் நகராட்சி-பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதியை உடனே அறிவிப்பீர்கள் என நம்புகிறோம்.

நன்றி.
இவண்

(தா.முருகன்)
செயலாளர்
14.09.2004

 

Leave a Reply