எல்ஐசி நிறுவனத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் ஆர்.எம்.ராம்ஜியின் பணிநிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி உழவர்கரை நகரக்கமிட்டி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் புதன்கிழமை (ஜூன்-1) நடைபெற்றது.
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள தனியார் உணவக கருத்தரங்க அரையில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு, உழவர்கரைநகரக்குழு உறுப்பினர் வீர.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எல்ஐசி நிறுவனத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இந்திய வரலாறுகள் திட்டமிட்டு இன்றைய ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களால் சீர்குலைக்கப்படுகிறது. அதன் தொடர்சியே தான் மக்கள் சொத்தான எல்ஐசி நிறுவனத்தை சீரழிக்க துவக்கியுள்ளனர். இதன் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தை திருத்தும் வேலையை துவக்கியுள்ளனர். சுதந்திர இந்தியாவின் அடையாளமாக திகழும் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி பகைமை வளர்த்து வருகின்றனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விலைவாசி உயர்வை குறைப்போம் என்று கூறிய பாஜக. இன்றைக்கு 8 ஆண்டு நிறைவு பெறும் தருவாயில் விலைவாசியை பற்றியோ, வேலை இல்லா திண்டாடத்தை பற்றியோ பேசவில்லை.
ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு மாறாக கம்யூனிஸ்ட்டுகள் அன்றாடம் மக்களை பாதிக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்திவருகிறோம். எல்ஐசி போன்ற பொதுத்துறைநிறுவனங்களை விற்பதற்கு எதிராகவும், மதவெறிக்கு ஆகிய இரண்டுக்கும் எதிராகவும் இன்றைக்கு போராட வேண்டியுள்ளது. இத்தகைய போராட்டம் தேசத்தை பாதுகாக்கும் போராட்டமாகும், ராம்ஜி போன்ற தேசபக்தர்கள் தொழிற்சங்கம் மூலமாகவும் போராடிவருகிறார்கள்.எனவே தேசத்தை பாதுகாக்க போராடிவரும் ராம்ஜியை அனுமதித்துள்ள குடும்பத்தாரின் முயற்சி போற்றதக்கதாகும். இவ்வாறு கே.கனகராஜ் பேசினார்.
முன்னதாக பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர்கள் தா.முருகன், கே.முருகன், நடராஜன்,
தீக்கதிர் வளர்ச்சி நிதி
இக்கருத்தரங்கத்தையொட்டி தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.20,000 த்திற்கான காசோலையை தோழர் ராம்ஜி மற்றும் அவரது துணைவியார் தீபாராம்ஜி மற்றும் அவரது பிள்ளைகள் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் வழங்கினார்கள்.முன்னதாக புதுவை சப்தர்ஹாஸ்மி கலைக்குழுவினரின் கிராமிய பாடல்கள் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.