புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் திங்களன்று ( பிப்.19) துவங்கி பிப்ரவரி 22ந்தேதி வரை மிகவும் எழுச்சியுடன் நடைற்றது.
முதல் நாள் காத்திருப்பு போராட்டம்
முதல் நாள் காத்திருப்பு போராட்டம் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் தோழர் ஆர்.எம்.ராம்ஜி தலைமையில் தொடங்கியது. இதில் கட்சியின் முன்னாள் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் சுதா, மாநில செயலாளர் இரா.ராஜங்கம், செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், தமிழ்ச்செல்வன், கௌஞ்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இரவுவரை தொடர்ந்த போராட்டத்தை காவல்துறை கொண்டு தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்து முதல்நாள் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
2வது நாள் காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில் 2வது நாளாக செவ்வாய்கிழமை போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்த நிலையில், முதல்வர் ரங்க சாமியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம்,மூத்த தலைவர் சுதாசுந்தர ராமன்,மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள்,ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ரேசன் கடையில் பணம் வழங்குவதை கைவிட்டு மீண்டும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். முதல்வருடன் சந்திப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை மனுவை பெற்று கொண்ட முதல்வர் ரங்கசாமி, குடிமை பொருள் வழங்கல் துறையின் இயக்குநர் சக்தி வேலை அழைத்து பேசினார். அண்டை மாநிலங்களில் பொருட்கள் வழங்குவதை போல் புதுச்சேரியிலும் வழங்குவதற்கு உண்டான நட வடிக்கைகளை துறை சார்பில் கோப்புகளை தயார் செய்யுமாறு முதல்வர் கேட்டுகொண்டார். ரேசன்கடைகளை திறக்க எனது அரசு முழு நடவடிக்கை எடுக்கும் என்று தலை வர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறினார்.
தொடர்ந்த போராட்டம்
ரேசன்கடை திறக்கப்படும் என்ற அறிவிப்பு பிப்.22ல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அதிகார பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அது வரை காத்திருப்பு போராட்டம் தொட ரும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் முதல்வரை சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் கூறினார்.
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவ காரங்கள் துறை அருகில் நடை பெற்று வரும் 2வது நாள் காத்தி ருப்பு போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேர நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் த.முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலிம், திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, கிராமப்புற நீர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கோபால் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இப்போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றுள்ளனர்.
3வது நாள் காத்திருப்பு போராட்டம்
ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகம் அருகில் நடைபெற்று வரும் 3வது நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் இரகு.அன்புமணி தலைமை தாங்கினார். திமுக மாநில அமைப்பாளர், எதிர்கட்சித் தலைவர் ஆர்.சிவா போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.சிபிஎம் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர்கள் சுதா சுந்தரராமன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன் உட்பட திரளானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
4வது நாள் காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில் தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் துறை அருகில் 4 வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பாகூர்,வில்லியனூர் இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன், ராம மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி மக்களை வறுமையில் இருந்து ஒன்றிய அரசு மீட்டுள்ளதாக கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து மக்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே சிரமப்படுகின்றனர். இன்றைக்கு விலைவாசி உயர்வால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையாக உள்ளது. 15லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி யில் ரேசன் கடைகளை மூடிவைத்து ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. அரிசி, பருப்பு விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டது. அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம்,ஆந்திரா போன்ற மாநிலங்களில் ரேசன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ரேசன் கடைகளை மூடிவைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது. ஒன்றிய பாஜக அரசு ரேசன் கடைகளை மூடிவைத்து புதுச்சேரியை பரி சோதனை கூடமாக மாற்றுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. ரேசன் கடைகளை திறக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது என்று ஆட்சியாளர்களுக்கு ஜி.ராம கிருஷணன் எச்சரிக்கை விடுத்தார்.
சாலை மறியல் முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரேசன் கடை திறப்பு செய்தி வெளியாகும் என்ற அறிவிப்பு எதிர்பார்த்திருந்த நிலை யில்,கூட்டத்தொடரில் ரேசன்கடை திறப்பு குறித்து எந்தவித அறி விப்பும் வெளியாகாததால் மார்க்சிஸ்ட்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டாஞ்சாவடி ஈசிஆர் சாலை யில் நடைபெற்ற இந்த மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி,ராம கிருஷ்ணன், மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனு வாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், சத்தியா,கலியமூர்த்தி,மூத்த தலைவர் முருகன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.