கையெழுத்து இயக்கம் – மக்கள் சந்திப்பு – தெருமுனை பிரச்சாரம் தலைமை செயலகம் நோக்கி பேரணி- காத்திருப்பு போராட்டம்

ஒன்றிய பாஜக அரசே! மாநில N.R. காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசே! மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவி

அரிசிக்கு பதில் பணம் வழங்கும் மோசடி திட்டத்தை கைவிடு!

மாநில அரரின் (ஒற்றை அவியல் அரிசி) இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தும்

15 மாதங்களாக அரிசி வழங்காததால் சிவப்பு அட்டைக்கு ரூபாய் 0000. மஞ்சள் அட்டைக்கு ரூபாய் 4500 இழப்பை ஈடு செய்!

கேரளம், தமிழகம் போல அரிசி, பருப்பு வகைகள் கோதுமை

உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வழங்கிடு!

தகுதி உள்ள ஏழை மக்களுக்கு சிகப்பு அட்டை வழங்கு! என வலியுறுத்தி ஆகஸ்ட் 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம் – மக்கள் சந்திப்பு – தெருமுனை பிரச்சாரம் தலைமை செயலகம் நோக்கி பேரணி- காத்திருப்பு போராட்டம்

அன்புடையீர் வணக்கம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவோம். மூடிய ரேஷன் கடைகளை அத்தியாவசிய பண்டங்களை வழங்குவோம். என்று என்.ஆர் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

திறப்போம்.

முதல் பட்ஜெட்டில் ரேசன் கடைகளை செயல்படுத்துவது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் 2021 மே முதல் 2022 ஜூலை வரையிலான 15 மாதங்களாக சிகப்பு அட்டைக்கு ரூபாய் 9000. மஞ்சள் அட்டைக்கு ரூபாய் 4500 இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. 26-08-2021-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கிய ரூபாய் 198 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை.

பிரதமர் மோடி ஆட்சியின் நாசகர கொள்கையால் இந்திய பொருளாதாரம் விழுந்து கிடக்கிறது. பணவீக்கம்,

விலைவாசி உயர்வு. வேலையின்மை மக்களை வாட்டி வதைக்கிறது. கொரோனா பெருந்தொற்று இதனை மேலும்

மோசம் அடைய செய்துள்ளது. கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் ஆண்டுக்கு 25 நாட்கள் கூட வழங்கப்படவில்லை.

பரிசோதனை கூடமாக மாறிய புதுச்சேரி

புதுச்சேரி மாநில மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பும், தனித்த விடுதலைப் போராட்ட வரலாறும் கொண்ட ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் நோக்கங்களையும், தேசவிரோத புதிய பொருளாதார திட்டங்களையும் முதலில் பரிசோதிக்கும் பரிசோதனை கூடமாக மாற்றி விட்டனர். புதுச்சேரியில் ரேஷன் பொருளுக்கு பதிலாக பணம் வழங்கும் (DBT) திட்டத்தை 2015 செப்டம்பர் முதல் நடைமுறைப்படுத்துகின்றனர். இதனால் மத்திய அரசின் திட்டமான மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள (AAY ) குடும்ப அட்டை ஒன்றுக்கு 35 கிலோ அரிசிக்கு பதிலாக ரூபாய் 933 என்ற விகிதத்தில் பணம் வழங்கப்படுகிறது. வறுமை கோட்டில் உள்ள இதர குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட உணவு தானியங்கள் நிறுத்தப்பட்டடு நபர் ஒன்றுக்கு 5கிலோ அரிசிக்கு பணம் வங்கியில் செலுத்தப்படுகிறது. இந்த மோசமான நடைமுறையின் விளைவாக ரேஷன் கடைகளும் மூடப்பட்டன. கடந்த காலத்தில் என். ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட இலவச வெள்ளை அரிசி வழங்கும் திட்டம் 18 மாதங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன, காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் ( 2016-2021 ஓரிரு மாதங்கள் மட்டுமே வெள்ளை அரிசி வழங்கப்பட்டன. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவால் மாநில அரசின் இலவச அரிசி திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை மாநில மக்களின் வயிற்றில் அடிக்கும். மாநில அரசின் உரிமையை பறிக்கும். சர்வாதிகார நடவடிக்கையாகும். இந்நிலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து மக்களை சுரண்டுகிறது ஒன்றிய மோடி அரசு, சுவாசிக்கும் காற்றுக்கு கூட ஜி.எஸ்.டி வரிவிதிப்பார்கள் போல தெரிகிறது. பொது விநியோகத் திட்டம்

விடுதலைக்கு முன்பும், பின்பும் இந்தியா பல உணவு பகுரங்களையும், கடும் வறட்சியையும் கண்டது. உணவு தானியத்துக்கு மேலை நாடுகளை சார்ந்திருந்த நிலையையும் இருந்தது. 1969 ஆண்டுகளில் துவங்கப்பட்ட பசுமை புரட்சி திட்டத்தால் உணவு உற்பத்தி பெறுகியது. ஆனால் ஏழ்மை, வறுமை, பட்டினி நிலை நீடித்துவந்தது. இவ்வாறான ஆழவில் வறுமை ஒழிப்பு, சமூக பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பொது விநியோக முறை திட்டம் உருவானது. இதன் அடிப்படை நோக்கங்கள். மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ற விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவது, இதற்கு தேவையான உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வது. விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை வழங்குவது என்பதாகும்.

ஒன்றிய பாஜக அரசு. கார்ப்பரேட்டுகளுக்கு மானியம், சலுகை. கடன் தள்ளுபடி பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பது என நாட்டின் செல்வங்களை அழித்துவருகிறது. ஆனால் ஏழை, எளிய மக்கள் மீது வரி மேல் வரி போட்டு மிதிக்கிறது, இதனால் உலக அளவிலான பட்டினி குறியீட்டில் மொத்தம் உள்ள 115 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. மிக மோசமான பட்டினி நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

என் பொருள் வேண்டும்? பணம் வேண்டாம்

பொது விநியோகத் ரேசன் கடை திட்டம் ஏழை, எளிய மக்களை விலைவாசிக் கொடுமையிலிருந்து ஓரளவிற்கு

காப்பாற்றும் திட்டமாகும். இதன் கீழ் அரிசி பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட போது ஏழை

குடும்பங்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைத்தது. தற்போது ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட்டு அரிசிக்கு பதினாக

வழங்கப்படும் பணம் உணவு சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தப்படாமல் கடன் உள்ளிட்ட வேறு

செலவீனங்களுக்காக பயன்படுத்தபடுகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள் நலம் புறக்கணிக்கப்படுவதோடு ஏழை

குடும்பங்கள் சந்தை விலைக்கு உணவு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பொருளுக்கு பதிலாக பணம் வழங்குவது நியாயமற்றது. அநீதியானது, சமூக நீதிக்கு எதிரானது. பொது விநியோக முறையை வறுப்படுத்துவது அவசியமாகும் ஏழை மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது.

ஆகவே மாநில அரசு இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து, தரமான அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும். அரிசி வழங்கப்படாத காலத்திற்குரிய இழப்பை ஈடு செய்திட வேண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

குறிப்பு : ஆகஸ்ட் 2 காலை 9.30 மணிக்கு பெரியார் சிலை (பாலாஜி திரையரங்கம்) அருகிலிருந்து பேரணி துவங்குகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநில அமைப்புக்குழு,

Leave a Reply