பத்திரிக்கை செய்தி மூடப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு முதல்வர் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது அவர் உறுதியளித்தபடி உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்வர் அவர்கள் மூன்றாவது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் மேலும் ஐந்து மாத ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி. இதற்கு காரணம் யார் என்பதை முதல்வரின் கடந்த கால அரசியலும் நிகழ் கால அரசியலுமே பதில் சொல்லும்.புதுச்சேரியில் என் ரங்கசாமி அவர்கள் 2011 முதல் 2016 வரை முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார். அப்போது பிஜேபி கட்சிகளோடு கூட்டணியில் இருந்தார். மத்திய மோடி அரசு புதுச்சேரி மாநிலத்தை பரிசோதனை களமாக கருதி ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசிக்கு பதில் பணம் தான் வழங்கப்பட வேண்டும் ,ரேஷன் கடையிலே மூட வேண்டும் என்று உத்தரவு உத்தரவிட்டது.இந்த அடிப்படையில் புதுச்சேரியில் இதே முதலமைச்சர் ரங்கசாமிதான் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அப்போதே புதுச்சேரி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்தியது.உடனடியாக அழைத்து பேசிய முதல்வர் இத்திட்டத்தை கைவிடுவதாகவும் மீண்டும் அரிசி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்த சூழலில் துணைநிலை ஆளுநராக கிரேண் பேடி பொறுப்பேற்றது முதல் ரேஷன் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டது. அப்போதிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தை நடத்தியது.2021இல் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திரு. என். ரங்கசாமி இணைந்து ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளை திறப்போம், 14 அத்தியாவசிய பண்டங்களை மக்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். பிறகு 2021ல் ஆட்சிக்கு வந்து தனது முதலாம் ஆண்டு பட்ஜெட்டில் ரேஷன் கடைகளை திறக்க போவதாகவும் அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும் குழுவை நியமனம் செய்யப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ரங்சாமி சொன்னடி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது.2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ந்தேதி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்பு ரேஷன் கடைகளை திறக்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய தலைமை செயலாளரின் உறுதி அடிப்படையில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் குடிமைப் பொருள் வழங்கும் துறை அமைச்சர் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு ரகசிய கூட்டத்தை ஆகஸ்ட் 23ந்தேதி நடத்தினார் அதையும் மார்க்சிஸ்ட் கட்சி முறியடித்தது.கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது இரண்டாவது பட்ஜெட் உரையின் போது முதல்வர் ரங்கசாமி ரேஷன் கடைகளை திறப்பதற்கும் , அரிசி எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கப் போவதாகவும் அறிவித்தார் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தலைமையில் மாநில உரிமை, ரேஷன் கடை திறப்பு, அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து. மிகப்பெரிய இயக்கம் நடத்தப்பட்டது. உடனே சாய் அமைச்சர் சாய் சரவணகுமார் அவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் திறப்பதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி அறிவித்தார். ஆனால் கடைகள் திறக்கப்படவில்லை.புதுச்சேரியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ,குறிப்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந்தேதி புதுச்சேரியை உலுக்கும் வகையில் வலுவான போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ரேஷன் கடை ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரும் 29ஆம் தேதி ரேஷன் கடை திறப்பு மின்துறை தனியார்மயம் மக்களுக்கு எதிர்ப்பு பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி சட்ட மன்ற முற்றுகை போராட்டத்தையும் நடத்திட உள்ளது.இந்தப் நீண்ட போராட்ட பின்னணியில்தான் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கப் போவதாகவும், ஊழியர்களுக்கு ஐந்து மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும், அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.எனவே முதல்வர் சொன்னபடி ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 55மாத ஊதியத்தை வழங்க வேண்டும். மின்துறை விற்பனை நிறுத்த வேண்டும். பஞ்சாலைகளை திறக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும். 8 மணிநேர, வேலை பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை புதுச்சேரி தொழிலாளர்களுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வன்முறை அற்ற புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தின் தலையாய கோரிக்கைகளை முன்வைத்தும் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்ச் 29ஆம் தேதி நடத்த உள்ள போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் மேலும் முதல்வர சொன்னடிப்படி ரேஷன்கடைளை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.இப்படிக்குஇரா.இராஜாங்கம்மாநில செயலாளர் புதுச்சேரி மாநிலக்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > மூடப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு முதல்வர் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும்
மூடப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு முதல்வர் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும்
posted on