மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவில் உரிய திருத் தங்களுடன் மழைக்கால கூட்டத்தொடரில் நிறை வேற்ற வேண்டும். புதுச் சேரிக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, மண் ணெண்ணைய் அளவை குறைப்பதை கைவிட வேண்டும்.புதுச்சேரி அரசு இலவச அரிசி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி,அத் தியாவசிய பண்டங்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இடதுசாரிகள் சார் பில் மறி யல்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி தட்டாஞ் சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கும் துறை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ தேசிக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.
சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ், பிரதேசக்குழு உறுப்பினர் கள் நடராஜன், மதிவா ணன்,சிபிஐ நிர்வாகிகள் சலீம்,சேதுசெல்வம் 20பெண்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்ட னர்.முன்னதாக காவல்துறை யினரின் தடையை மீறி அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெற் றது.திருக்கனுர் பிஎஎன்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத் தில் சிபிஐ மாநில செயலா ளர் ஆர்.விசுவநாதன், சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் கே.முருகன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கி னர். சிபிஎம் கொம்யூன் செயலாளர் சரவணன், பிர தேசக்குழு உறுப்பினர் அன்புமணி 30 பெண்கள் உட்பட 100பேர் கைது செய்யப்பட்டனர்.அரியாங்குப்பம் கடலுர் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் ஆர்.ராஜாங்கம்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் அபிஷேகம்,பார்வர்டு கட்சி நிர்வாகி தர்மராஜன் ஆகி யோர் தலைமை தாங்கினார்.
பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத் திற்கு சிபிஎம்செயற்குழு உறுப்பினர் நிலவழகன், சிபிஐ நிர்வாகக்குழு உறுப் பினர் ராமமூர்த்தி ஆகி யோர் கூட்டாக தலை மை தாங்கினார்வில்லியனுர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத் திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினர்.திருவண்டார் கோவில் மத்திய உணவு கிடங்கு முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சிபிஎம் வட்டசெய லாளர் வின் சென்ட்,சிபிஐ காரைபிர தேச செயலாளர் ராஜேந்தி ரன் கூட்டாக தலைமை தாங்கினர்.மாநிலம் முழுவதும் ஏழு மையங்களில் நடை பெற்ற மறியல் ஆயிரத்திற் கும் அதிகமாக கைது செய்து செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > மாவட்டங்கள் > பாண்டிச்சேரி > உணவு உரிமையை பாதுகாக்க கோரி- புதுச்சேரியில் இடது சாரிகள் மறியல்
உணவு உரிமையை பாதுகாக்க கோரி- புதுச்சேரியில் இடது சாரிகள் மறியல்
posted on